Published:Updated:

'முட்டக்குஞ்சு' லாஸ்லியா... சம்திங் சம்திங் பெர்சனல்ஸ்!

தி.விக்னேஷ்

லாஸ்லியா பற்றிய சில சுவாரஸ்யமான செய்திகள்

சமீபத்திய தமிழக வைரல் லாஸ்லியா தான். ஒரு ரியாலிட்டி ஷோவின் அறிமுக நாளில் இலங்கைத் தமிழ் மாடுலேசனில் ‘வணக்கம்...’சொல்லி செய்தி வாசிக்கத் தொடங்கினார் லாஸ்லியா. அவர் செய்தியை வாசித்து முடிப்பதற்குள்ளாகவே குபுகுபுவென முளைத்துவிட்டன லாஸ்லியா ஆர்மிக்கள். ‘தமிழ்ப் பசங்க ஓவியா, பிரியா வாரியர்னு கேரளப் புள்ளைகளைத் தான் கொண்டாடுவாங்கப்பா...’ என்று காலம்காலமாக குத்தம் சொல்லிவரும் சமூகத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த இலங்கைத் தமிழச்சிக்கு ஹார்ட்டீன்களைத் தெறிக்கவிடுகிறார்கள் தமிழக இளைஞர்கள். லாஸ்லியாவும் சளைத்தவரில்லை. ‘காணும் பார்த்தது’ என்று கண்களால் கொஞ்சுவது... வேக்கப் சாங்கிற்கு உற்சாகமாக நடனமாடுவது என இதயங்களைக் கொள்ளையடிக்கும் எல்லா வித்தைகளையும் செவ்வனே செய்துவருகிறார். ஸ்ரீலங்கா சின்னக்குயில் லாஸ்லியாவின் பெர்சனல் பக்கங்கள் இதோ...!

1
லாஸ்லியா

லாஸ்லியா மரியநேசன்

இப்போதுதான் 23 வயதை நிறைவு செய்திருக்கும் இந்த பாப்பாவின் பர்த் டேட் 1996, மார்ச் 23. பிறந்தது கிளிநொச்சியில், படித்தது திரிகோணமலையில், வளர்ந்தது கொழும்புவில். முழுப்பெயர் லாஸ்லியா மரியநேசன்.

2
லாஸ்லியா

சிங்கிள்? மிங்கிள்?

23 வயசுனா அடுத்த நம்ம பசங்க என்ன கேட்பாங்க? ஆமா... சிங்கிள் தான்! ஏகப்பட்ட ப்ரொப்போசல்கள் வந்தாலும் எல்லாருக்கும் நோ.. நோ.. தான்.

3
லாஸ்லியா

ஸ்கூல் டூ மீடியா

ஸ்கூல் படித்துக்கொண்டிருக்கும்போதே இவருடைய தமிழார்வமும், விவாதத் திறமையும் பார்த்து மீடியா வாய்ப்புகள் வந்திருக்கிறது.

4
லாஸ்லியா

லாஸ்லியா நியூஸ் பர்பாமன்ஸ்

பிக் பிரேக்கிங் செய்திகளே லட்சம் வியூஸ்க்குத் திணறிக்கொண்டிருக்க, லாஸ்லியா செய்தி வாசிக்கும் லஞ்ச் டைம் நியூஸ் 1 மில்லியன் வியூஸைத் தாண்டிக்கொண்டிருக்கிறது. செய்தியில் ஒன்றுமில்லை. ‘வாசிப்பது நீயானால் கலவர செய்திகூட கவிதைதான்’ என்று உருகும் ஆர்மிதான் வியூஸ்க்குக் காரணம்.

5
லாஸ்லியா

குறும்புப் பேச்சுக்காரி !

பேச்சிலும் நடவடிக்கையிலும் குறும்புத்தனம் இருந்தாலும் தூங்குவதற்கு முன் சமத்தாக பைபிள் படித்துவிடுவாராம்.

6
லாஸ்லியா

முட்டக்குஞ்சு!

ஒன்று, இரண்டல்ல... ஏகப்பட்ட பட்டப்பெயர்களை நண்பர்கள் வைத்திருக்கிறார்கள். அதில் லாஸ்லியாவே ரசிக்கும் ஒன்று... ‘முட்டக்குஞ்சு’.

7
லாஸ்லியா

சூப்பர் ஸ்டார்!

முதல் நாள் காலையே லாஸ்லியாவின் செம ஹேப்பி பைலா டான்ஸ்க்குக் காரணம் ரஜினியாம். அம்மணி மிகப்பெரிய ரஜினி ரசிகை.

லாஸ்லியாவுக்கு நீங்கள் ஒரு செல்ல பெயர் வைப்பதென்றால், என்ன வைப்பீர்கள்? கமென்ட்டில் சொல்லுங்களேன்!