Published:Updated:

உயிரே... அம்மா மகள் அரசியல்!

உயிரே
பிரீமியம் ஸ்டோரி
News
உயிரே

நேர்மையான வேளாண்துறை அமைச்சர் செழியன்.

`திருமணம்', `ஓவியா', `தறி' என வித்தியாசமான கதைக்களங்களோடு ரசிகர்களைக் கவர்ந்த கலர்ஸ் தமிழ் சேனலின் அடுத்த தயாரிப்பு `உயிரே'.

அரசியல் ஆசையில் தன் மகளின் வாழ்வை பலி கொடுக்கத் துணியும் எதிரெதிர் துருவங்களான அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே நிகழும் சம்பவங்களை மையப்படுத்தி பல திருப்பங்களுடன் நகரும் `உயிரே' தொடர் ஜனவரி 2 தொடங்கி திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

உயிரே... அம்மா மகள் அரசியல்!

மதுரை சிம்மக்கல் கவுன்சிலரான வீரலக்ஷ்மி யாருக்கும் பயப்படாத துணிச்சல்காரர். குடும்பத்தையும் கிராமத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என நினைப்பவர். இவருக்கு அருண்பாண்டி, வேல்முருகன், பாலமுருகன் என மூன்று மகன்கள், ஒரே மகள் பவித்ரா. திருமணமாகி ஒரு மகனுக்கு தந்தையான அருண்பாண்டியன் டிரான்ஸ்போர்ட் பிசினஸ் செய்து வருகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மகள் பவித்ரா அப்பாவின் வளர்ப்பு. அம்மாவுக்கு நேரெதிர். தன்னைச் சுற்றியிருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சி யாக வைத்திருக்க நினைப்பவள். அண்ணியிடம் எல்லா விஷயங்களையும் மறைக்காமல் பகிர்ந்துகொள்வாள்... தன் காதலைத் தவிர!

உயிரே
உயிரே

பவித்ராவின் காதலன் வருண் நேர்மையானவன்; திறமையானவன். சிவில் சர்வீஸ் தேர்வெழுதிவிட்டு, நேர்முகத் தேர்வுக்காகக் காத்திருக்கிறான். இந்த நிலையில் பவித்ராவும் வருணும் காதலிக்கும் விஷயம் தாய் வீரலக்ஷ்மிக்குத் தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நேர்மையான வேளாண்துறை அமைச்சர் செழியன். பிரசவத்தின்போது அவர் மனைவி இறந்துவிட, தனி ஆளாக மகன் நரேனை வளர்த்து வருகிறார். மறுமணத்தில் விருப்பமில்லாமல் இருக்கிறார். செழியனிடம் அவர் தங்கை சந்திரா, நரேனுக்கான தாயின் அவசியத்தை வலியுறுத்தி இன்னொரு திருமணம் செய்ய வற்புறுத்துகிறாள்.

உயிரே
உயிரே

ஒருநாள் செழியன் கோயிலுக்குச் செல்லும்போது மகன் நரேன் தொலைந்துவிடுகிறான். கோயிலுக்கு வரும் பவித்ரா, நரேனை கண்டுபிடித்து தருகிறாள். நரேன்மீது பவித்ரா காட்டிய அக்கறை செழியனுக்குப் பிடித்துப் போக அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார். இந்த விஷயமும் வீரலக்ஷ்மிக்குத் தெரியவருகிறது.

செழியனைத் தனது அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் வீரலக்ஷ்மி, அவரை திருமணம் செய்துகொள்ளும்படி பவித்ராவை வற்புறுத்துகிறாள். ஆனால், காதலன் வருணிடம் தான் கர்ப்பமாக இருப்பதாகச் சொல்லி, தன் அம்மாவிடம் வந்து பேசும்படி சொல்கிறாள் பவித்ரா. அவள் கர்ப்பமாக இருக்கும் விஷயம் அறிந்து ஆத்திரப்படும் வீரலக்ஷ்மி, வருணை கொலை செய்துவிடுகிறாள்.

இதன் பிறகு பவித்ராவின் வாழ்க்கை என்ன வானது? பவித்ராவுக்கும் செழியனுக்கும் திருமணம் நடந்ததா? வீரலக்ஷ்மியின் அரசியல் கனவு பலித்ததா?

இதுதான் `உயிரே' தொடரின் கதை. இந்தத் தொடரை `லூட்டி', `த்ரீ ரோசஸ்', `தவம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பரமேஷ்வர் இயக்குகிறார்.

தொடரின் நாயகியாக மனிஷா நடிக்கிறார். வீரலக்ஷ்மியாக நடிகை சோனா நாயரும், செழியனாக நடிகை நமீதாவின் கணவர் வீராவும், வருணாக கவுரவ் குப்தாவும் நடிக்கின்றனர். தொடரை நடிகை நிரோஷா மற்றும் ராதாவின் `பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரிக்கிறது.

மதுரையைக் களமாகக்கொண்டு பரபரவென நகரும் `உயிரே', சுவாரஸ்யமான பல்வேறு திருப் பங்களுடன் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய தொடராக வலம் வருகிறது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கண்டு மகிழுங்கள்!