சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

விகடன் TV: “பகல் பேய்க்கு பயப்பட மாட்டேங்கிறாங்க!”

சாந்தினி
பிரீமியம் ஸ்டோரி
News
சாந்தினி

பாலாஜி சக்திவேல் சார் படமான ‘நான் நீ நாம்’ படத்துல மெயின் லீடு ரோல் பண்ணியிருக்கேன்.

கல் நேர சீரியல்களில் ஹிட் லிஸ்ட் எடுத்தால் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிவரும் ‘இர‌ட்டை ரோஜா’வைத் தவிர்க்க முடியாது. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஷிவானி உதறி விட்டு வந்தாரே அதே‌ சீரியல். ஷிவானிக்குப் பதில் அந்த இடத்துக்கு வந்தவர் சாந்தினி. நடன இயக்குநர் நந்தாவின் மனைவி. சீரியலில் ஹீரோயினும் இவர்தான்; வில்லியும் இவர்தான்.

``பாதியில வந்து சேர்ந்தாலும் சீரியல்ல பிக்கப் ஆகிட்டீங்க போல’’ என்றபடி பேச்சைத் தொடங்கினேன்.

விகடன் TV: “பகல் பேய்க்கு பயப்பட மாட்டேங்கிறாங்க!”

‘`ஆமாங்க, `சித்து +2’ உள்ளிட்ட சில படங்கள்ல நடிச்சிட்டு தொடர்ந்து சினிமாவுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருந்தேன், அப்பல்லாம் சீரியல் வாய்ப்புகள் நிறையவே வந்தன. சீரியல் பக்கம் போனா மறுபடியும் சினிமா கூப்பிடுமாங்கிற ஒரு தயக்கம் இருந்ததால அந்த வாய்ப்புகளை நான் தவிர்த்துட்டே வந்தேன்.ஏன், எனக்கு முன்னாடியே சீரியல் நடிகரா `கோகுலத்தில் சீதை’யில நந்தா அறிமுகமானப்ப அவருக்கு ஜோடியா நடிக்கிறதுக்குக் கேட்டாங்களே, அதையும் மறுத்துட்டேனே!

பிறகு கொரோனா வந்து லாக் டௌன் வந்ததால சினிமா முடங்கிடுச்சு. சும்மா வீட்டுல இருக்கறதுக்கு வர்ற சீரியல் வாய்ப்புகளை ஏன் பண்ணக் கூடாதுன்னு யோசிச்சுட்டுதான் ‘தாழம்பூ’ தொடர் மூலம் சீரியல் ஏரியாவுக்குள் வந்தேன். ஆனா அந்த சீரியல் நான் எதிர்பார்த்த மாதிரி போகலை.

சாந்தினி
சாந்தினி

‘இரட்டை ரோஜா’ வாய்ப்பு வந்தப்ப ஹீரோயின் கம் வில்லி, டபுள் ஆக்‌ஷன்னு சொன்னாங்க. ஒரே நேரத்துல பாசிட்டிவ் ப்ளஸ் நெகடிவ் ரோல்கள்ல நடிக்கறது புது அனுபவமா இருக்கும்னு நினைச்சதால சம்மதிச்சேன். ஷூட்டிங் அனுபவமே இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. ஒருசில நாள் அபி, அனு (கேரக்டர்களின் பெயர்கள்) ரெண்டு பேருக்கு மட்டுமே சீன் இருக்கும். அப்பெல்லாம் ஸ்பாட்ல ஆர்ட்டிஸ்ட்னு நான் மட்டுமே இருப்பேன். காஸ்ட்யூம், பாடி லாங்க்வேஜ் எல்லாம் டக் டக்னு மாத்திட்டே இருக்கணும். ‘அந்நியன்’ படத்துல விக்ரம் அம்பி, அந்நியன், ரெமோவா ஒரே நேரத்துல வந்து அதகளம் பண்ணுவாரே அப்படி இருக்கும். ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்தது. போகப் போகச் சரியாகிடுச்சு. இப்ப பகல்ல ஒளிபரப்பாகிற தொடர்களிலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு தொடராப் போயிட்டிருக்கு.’’

விகடன் TV: “பகல் பேய்க்கு பயப்பட மாட்டேங்கிறாங்க!”

``அபி, அனு கதாபாத்திரங்களில் உங்களோட எந்தக் கேரக்டருக்கு ஆடியன்ஸ் மத்தியில வரவேற்பு அதிகம்?’’

“சீரியல் ஆடியன்ஸ் ரெண்டு கேரக்டர்களுக்குமே நல்ல ஆதரவு தந்துட்டுவர்றாங்க. ரெண்டு பேர்ல யாருக்கு அதிக மார்க்னு கேட்டா பாசிட்டிவ் கேரக்டருக்குத்தான் கிடைக்குது. அதேநேரம் நெகடிவ் கேரக்டர் எந்த அளவுக்கு ரீச் ஆகியிருக்குன்னா, சிலர் அது நானில்லை; என்னை மாதிரியே இருக்கிற இன்னொரு ஆர்ட்டிஸ்ட்னே நினைக்கிறாங்க. எங்கிட்டயே அதைச் சொல்லியிருக்காங்க. நந்தாவுக்குமே என்னுடைய வில்லி முகம்தான் பிடிச்சிருக்கு. அதுலயும் அந்த வில்லி கேரக்டர் கொல்லப்பட்டு இப்ப பேயா வந்து மிரட்டறதெல்லாம் வேற லெவல்.

சீரியல்களிலேயே பகல் டைம் வர்ற பேய்ங்கிறதால என்னைக் கண்டு யாரும், குறிப்பா குழந்தைகள் பயப்படறதில்லை. குட்டிப் பசங்களுக்குப் பிடிச்ச பேயாத்தான் வந்து போயிட்டிருக்கேன்.’’

``படங்கள்?’’

“பாலாஜி சக்திவேல் சார் படமான ‘நான் நீ நாம்’ படத்துல மெயின் லீடு ரோல் பண்ணியிருக்கேன். படம் ரிலீசுக்கு வெயிட்டிங். ‘பொம்மை’யில ரெண்டு ஹீரோயின்ல ஒருத்தரா பண்ணியிருக்கேன். தொடர்ந்து பட வாய்ப்புகளும் வர்றதாலேயே சீரியல்ல இது ஒண்ணு போதும்னு நினைக்கிறேன்.’’

விகடன் TV: “பகல் பேய்க்கு பயப்பட மாட்டேங்கிறாங்க!”

``நந்தா ஜோடியா நடிக்கக் கேட்டப்ப மறுத்திருக்கீங்க. இப்ப சீரியலுக்கு வந்தப்ப அவர் என்ன சொன்னார்? நீங்க சேர்ந்து நடிக்கிற சீரியல், சினிமாவை எப்ப எதிர்பார்க்கலாம்?’’

“அவருக்கு ஜோடியா நடிக்கக் கேட்டப்ப சீரியல் வேண்டாம்கிற முடிவை நான் மட்டும் தனியா எடுக்கலை. அவரும் நானும் பேசித்தான் முடிவு பண்ணினோம். ஆனாலும் அப்பப்ப சும்மாவாச்சும் `எங்கூட நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டல்ல’ன்னு செல்லமா கோவிச்சுக்குவார். `புருஷன் பொண்டாட்டியா நடிச்சும் பார்த்திருக்கலாமோ’ன்னு கேப்பார். நானும் பதிலுக்கு அவரைக் கலாய்ப்பேன். ரெண்டு பேர் சேர்ந்து சீரீயலோ, சினிமாவோ பண்ற சூழல் அமையணும். அவருமே சீரியல் நடிச்சிட்டிருந்தாலும் இப்பவும் கோரியோவும் பண்ணிட்டுதான் இருக்கார். அதனால ரெண்டு பேருக்கும் நல்ல கதை அமைஞ்சு கால்ஷீட் சரியா வந்துச்சுன்னா நிச்சயம் இன்னொரு தடவை அந்த வாய்ப்பை மிஸ் பண்ண மாட்டேன்.’’