Published:Updated:

`குக் வித் கோமாளி' டைட்டில் வின்னர் யார்? சீஸன் 3 வருமா? - செஃப் தாமு

குக் வித் கோமாளி
News
குக் வித் கோமாளி ( Instagram Image )

`குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இந்த சீஸனை முடிக்க வேண்டாம் எனப் பலரும் சொல்லிக்கொண்டிருக்க, கடந்த திங்கள்கிழமை இதன் ஃபினாலே நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில், நிகழ்ச்சியின் கலகல ஜட்ஜ் செஃப் தாமுவிடம் பேசினோம்.

`குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இந்த சீஸனை முடிக்க வேண்டாம் எனப் பலரும் சொல்லிக்கொண்டிருக்க, கடந்த திங்கள்கிழமை இதன் ஃபினாலே நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில், நிகழ்ச்சியின் கலகல ஜட்ஜ் செஃப் தாமுவிடம் பேசினோம்.

கனி டைட்டில் வின்னர், ஷகிலா ரன்னர் அப், அஷ்வின் செகண்ட் ரன்னர் அப் எனத் தகவல்கள் சோஷியல் மீடியாவில் கசிய, சிலம்பரசன் சீஸன் 2 ஃபினாலேயின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அந்தப் புகைப்படமும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், `குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி அனுபவங்கள் குறித்து செஃப் தாமுவிடம் பேசினோம்.

`குக் வித் கோமாளி - சீஸன் 2’ ஃபினாலே ஷூட் எப்படிப் போச்சு?

``நாங்க எல்லாருமே பயங்கரமா அழுதுட்டோம். திங்கள்கிழமை நைட் 3.30-க்கு ஷூட் முடிஞ்சது. 4 மணி வரைக்கும் யாருமே செட்டை விட்டு வெளிய வரலை. அடுத்த ஷூட் எத்தனை மணிக்குனுதான் கேட்டேன். அந்த அளவுக்கு இந்த சீஸன் முடிஞ்சது ரொம்ப கஷ்டமா இருக்கு. மக்களுக்கு மட்டுமல்ல, கலந்துகிட்ட எங்க எல்லாருக்குமே இது செம்ம ஜாலியான ஷோ. நிச்சயமா ரொம்ப மிஸ் பண்ணுவோம்.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
குக் வித் கோமாளியில் சிம்பு
குக் வித் கோமாளியில் சிம்பு

சீஸன்1 VS சீஸன் 2 ?

``முதல் சீஸன்ல நான் ஜட்ஜா மட்டும்தான் என்னுடைய வேலையைப் பார்த்தேன். இந்த அளவுக்கு ஜாலியான கன்டென்ட் கொடுக்கலை. ரெண்டாவது சீஸன்ல இருக்குற அளவுக்கு கலகலப்பு முதல் சீஸன்ல இல்ல. இந்த சீஸன்ல நாங்க ஜட்ஜஸா மட்டும் இல்ல... என்டர்டெயினர்களாவும் இறங்கினோம். ரிசல்ட் சொல்லும்போதுகூட ரொம்ப ஸ்ட்ரிக்டா இல்லாம, யாரையும் புண்படுத்தாம, அந்த நேரத்துல மட்டும் ஜட்ஜுக்கான வேலையப் பார்த்தோம். மத்த நேரத்துல எல்லாமே செட்ல நாங்களும் கோமாளிகளுக்கு டஃப் கொடுக்குற விதமாதான் செம ஜாலியா இருந்தோம். மக்களுக்கும் அது ரொம்ப பிடிச்சிருந்தது. இந்த ஷோவுக்கு வர்றதுக்கு முன்னாடி மக்களுக்கு எங்களைப் பத்தி தெரிஞ்சதும், இந்த ஷோ மூலமா அவங்களுக்கு எங்களைப் பத்தி தெரிஞ்சதும் வேற வேற. அவங்க வீட்ல ஒருத்தரா இப்போ எங்களை நினைக்கிறாங்கங்கிறது ரொம்ப சந்தோஷமான விஷயம்.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சீஸன் 1-ஐ விடவே சீஸன் 2 பயங்கர ஹிட்... நீங்க நினைக்கிற காரணம் என்ன?

``எங்க எல்லாருக்குள்ளயும் இருந்த அந்தப் பிணைப்புதான் காரணம். சீஸன்-2 ல மக்களை மகிழ்விக்கணும்கிறதுதான் எங்க எல்லாருடைய எண்ணமும். எந்த ஒரு ஈகோவும் இல்லாம, அந்த நேரத்துல எந்த பிளானும் இல்லாம ஜாலியா இருந்தோம். ஈகோ இல்லாத ஷோ இது. சீஸன்-2 இந்த அளவுக்கு ஹிட் ஆக முக்கியக் காரணமும் இதுதான்.”

குக் வித் கோமாளி இப்போ கன்னடத்திலும் ரீமேக் ஆகுதே..?

``பொதுவா, `பிக்பாஸ்’ மாதிரி மற்ற மொழிகள்ல இருந்துதான் நிகழ்ச்சிகள் தமிழுக்கு ரீமேக் ஆகும். ஆனா, இப்போ தமிழ்ல இருந்து `குக் வித் கோமாளி’ ரீமேக் ஆகுறது நிச்சயம் நிகழ்ச்சிக்குக் கிடைச்ச பெருமைதான். `வெங்கடேஷ் கன்னட ரீமேக்லயும் இருக்காரு, நீங்க அங்க இல்லையா?'னு பல ரசிகர்கள் கேக்குறாங்க. வெங்கடேஷ் கர்நாடகாவை சேர்ந்தவர். எனக்கும் கன்னட மொழி தெரியும். ஆனா, எனக்கு கால் வரலை. ஒருவேளை கூப்பிட்டிருந்தா நிச்சயம் போயிருப்பேன்.”

குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி
Instagram Image

`டைட்டில் வின்னர் இவங்கதான்'னு நிறைய தகவல் சோஷியல் மீடியால வந்துட்டு இருக்கே?

``பொறுத்திருந்து பாருங்க. இப்போ ஃபைனலிஸ்ட்டா இருக்க அஞ்சு பேருமே எனக்கு ரொம்ப பிடிச்சவங்க. ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கு. நிச்சயமா ஃபினாலே ரிசல்ட் உங்களுக்குப் பிடிச்சதா இருக்கும்.”

`குக் வித் கோமாளி’ சீஸன் 3 வர வாய்ப்பு உண்டா?

``சந்தேகமே வேண்டாம்... 100% வர வாய்ப்பு இருக்கு. ஆகஸ்ட் அல்லது செப்டம்பர்ல வரும். கோமாளிகள் இவங்களேதான். குக்ஸ் பெரும்பாலும் பிக்பாஸ், சீரியல் நட்சத்திரங்கள்னு வர வாய்ப்பு அதிகம் இருக்குது. ஆடியன்ஸைவிட நான் அதிக ஆர்வமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.”