Published:Updated:

“கங்கை அமரனால்தான் செய்தி வாசிச்சேன்!” - ஊடகவியலாளர் சண்முகம் நினைவலைகள்

சண்முகம்

சன் டிவி, பிற டிவி சேனல்கள் மற்றும் பல விளம்பரங்களில் ஒலித்த கம்பீரக் குரல் இன்றுடன் (செப்டம்பர் 10, 2022) ஓய்வுபெற்றுவிட்டது. கடந்த வருடம் ஆனந்த விகடன் இதழுக்கு அவர் அளித்திருந்த பேட்டி இதோ...

“கங்கை அமரனால்தான் செய்தி வாசிச்சேன்!” - ஊடகவியலாளர் சண்முகம் நினைவலைகள்

சன் டிவி, பிற டிவி சேனல்கள் மற்றும் பல விளம்பரங்களில் ஒலித்த கம்பீரக் குரல் இன்றுடன் (செப்டம்பர் 10, 2022) ஓய்வுபெற்றுவிட்டது. கடந்த வருடம் ஆனந்த விகடன் இதழுக்கு அவர் அளித்திருந்த பேட்டி இதோ...

Published:Updated:
சண்முகம்
‘`என் முதல் திரைப்படத்துக்கான பெயரைப் பதிவுசெய்த அடுத்த சிலமணி நேரத்தில் உங்ககிட்ட இருந்து அழைப்பு. இதைத் தற்செயலான நிகழ்வா நான் நினைக்கலை. எனக்கும் விகடனுக்குமான தொடர்பின் நீட்சியாகவே பார்க்கிறேன். எண்பதுகளில் நான் விகடனின் மாணவப் பத்திரிகையாளர். சன் டிவியில் 19 வருஷப் பணி, இன்னைக்கு நியூஸ் 7 புரோகிராமிங் ஹெட்... என்னுடைய‌ இந்த வளர்ச்சியில் அந்தப் பயிற்சிக்காலத்துக்கு முக்கியமான பங்கிருக்கு’’ - ‘சன்’ செய்திகளில் கேட்ட அதே கணீர்க் குரல். பேசத் தொடங்கினார் சண்முகம்...

‘`மதுரையில படிக்கிறப்ப பேச்சுப் போட்டிகள்ல கலந்துகிட்டு பரிசுகள் வாங்கினேன். தொடர்ந்து மதுரை வானொலியில வாய்ஸ் டெஸ்டுக்குப் போறேன். அங்க செலக்ட் ஆனதுதான் முதல் தொடக்கம். பிறகு சென்னைப் பயணம். ஆனாலும் செய்தி வாசிப்பேன்னு நினைக்கலை. ஸ்கிரிப்ட், விளம்பரம்னு திரைக்குப் பின்னால் இருந்து பார்க்கிற‌ வேலைதான் நமக்கு செட் ஆகும்னு நினைச்சிட்டிருந்தேன்.

“கங்கை அமரனால்தான் செய்தி வாசிச்சேன்!” - ஊடகவியலாளர் சண்முகம் நினைவலைகள்

கங்கை அமரன் சார்தான் நான் வச்சிருந்த ஒரு கான்செப்ட் பார்த்துட்டு சன் டிவியில கொடுக்கச் சொன்னார். அங்க போனா, உள்ளே கூட்டிட்டுப் போய் ஒரு போர்டுல எழுதியிருந்த சில வார்த்தைகளை வாசிக்கச்சொன்னாங்க. வாசிச்சிட்டு வந்துட்டேன். நாலு நாள் கழிச்சு பேஜர்ல தகவல் வருது. நாளையில இருந்து பகல் செய்திகள் வாசிக்கறீங்கன்னு.

இன்னைக்கும் விளம்பரப் பணிகள் ஒருபுறம் போயிட்டிருக்கு. டாக்குமென்டரி மாதிரி சில வேலைகள் இன்னொரு பக்கம். இதுக்கிடையிலதான் இயக்குநர் ரோலும் இப்ப சேர்ந்திருக்கு. வரும் ஜூன் ஜூலையில் ஷூட்டிங் தொடங்கலாம்னு திட்டமிட்டிருக்கோம். அப்ப என்னுடைய திரைப்படம் குறித்துக் கூடுதலாப் பேசலாம்’’ என்கிறார்.

சண்முகம்
சண்முகம்

``செய்தி வாசித்த நாள்களில் மறக்க முடியாத அனுபவங்கள்...’’

‘`நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரத்துல அலுவலகத்துல இருந்து அழைப்பு. தூக்கக் கலக்கத்துல எழுந்து போனா அறிவாலய வாசல்ல‌ அவ்ளோ கூட்டம். முகம் தெரிஞ்சவங்களை போலீஸே தடுத்து உள்ளே விடலை. நல்லவேளையா அப்ப தாடி வளர்த்திட்டிருந்தேன். அதனால என்னை அடையாளம் கண்டுபிடிக்கலை. எப்படியோ அலுவலகத்துக்குள் போயாச்சு. அன்னைக்கு முழுக்க பதற்றமும் பரபரப்புமாத்தான் போச்சு. என்னுடைய மீடியா வாழ்க்கையில மறக்கவே முடியாத நாள் அது.”

இப்போதும் சிலிர்க்கிறது சண்முகத்துக்கு.