Published:Updated:

விகடன் TV: சினிமாக்காரர்களுக்கு ஒரு சட்டம், சீரியல் நடிகைகளுக்கு ஒரு சட்டமா?

ஜனனி
பிரீமியம் ஸ்டோரி
ஜனனி

‘இந்த ஆள்மாறாட்ட ஆட்டத்தையெல்லாம் புதுமுக நடிகர் நடிகைகள்கிட்ட மட்டுமே காட்டறாங்க’ என்கிற குமுறலை சீரியல் ஏரியாவில் சமீபமாக அதிகம் கேட்க முடிகிறது.

விகடன் TV: சினிமாக்காரர்களுக்கு ஒரு சட்டம், சீரியல் நடிகைகளுக்கு ஒரு சட்டமா?

‘இந்த ஆள்மாறாட்ட ஆட்டத்தையெல்லாம் புதுமுக நடிகர் நடிகைகள்கிட்ட மட்டுமே காட்டறாங்க’ என்கிற குமுறலை சீரியல் ஏரியாவில் சமீபமாக அதிகம் கேட்க முடிகிறது.

Published:Updated:
ஜனனி
பிரீமியம் ஸ்டோரி
ஜனனி

`செம்பருத்தி’ சீரியலில் நடித்துவந்த ஜனனி, தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டதும் குலுங்கிக் குலுங்கி அழுத வீடியோவைப் பலரும் பார்த்திருப்பீர்கள்.

வீடியோ வெளியான மறுநாளே ‘தவிர்க்க இயலாத காரணத்தால்’ என்ற வார்த்தைகளுடன் சீரியலில் அவர் நடித்த ஐஸ்வர்யா கேரக்டருக்கு வேறு நடிகையையும் கொண்டு வந்துவிட்டார்கள்.

என்றைக்கு சீரியல்களைக் கண்டு பிடித்தார்களோ அப்போதே ‘இவருக்குப் பதில் இவர்’ என ஸ்லைடு போட்டு ஆர்ட்டிஸ்டுகளை மாற்றும் வழக்கமும் தொடங்கி விட்டது என்று சொல்லலாம்.

‘இந்த ஆள்மாறாட்ட ஆட்டத்தையெல்லாம் புதுமுக நடிகர் நடிகைகள்கிட்ட மட்டுமே காட்டறாங்க’ என்கிற குமுறலை சீரியல் ஏரியாவில் சமீபமாக அதிகம் கேட்க முடிகிறது.சேனல்களுக்கிடையிலான‌ டி.ஆர்.பி யுத்தத்தில் தாங்கள் பலிகடா ஆவதாகச் சொல்கிறார்கள் இந்தப் புதுமுக நட்சத்திரங்கள்.

ஜனனி
ஜனனி

‘சீரியல்ல ஆர்ட்டிஸ்ட் மாறுவதைத் தப்பு சொல்லலை. சில நேரங்களில் உண்மையிலேயே அது தவிர்க்க முடியாத விஷயம்தான். ஆனா ஒரேநேரத்துல ரெண்டு சீரியல்ல நடிக்கக் கூடாது; வேற வேற சேனல்ல நடிக்கக் கூடாது’ங்கிற ரீதியில் ஏன் எங்களுக்கு மட்டும் நிபந்தனைகள் விதிக்கப்படுது? கட்டுப்பாடுகள், கேள்விகளெல்லாம் சினிமாவுல பிரபலமாகிட்டு பிறகு சீரியல் பக்கம் வர்றாங்களே அவங்களுக்குப் பொருந்தறது இல்லையே?

விகடன் TV: சினிமாக்காரர்களுக்கு ஒரு சட்டம், சீரியல் நடிகைகளுக்கு ஒரு சட்டமா?

சீரியலை மட்டுமே நம்பி வர்ற ஆர்ட்டிஸ்டு களுக்கு ஒரு சீரியல் ஹிட் ஆகறதே பெரிய விஷயமா இருக்கு. அப்படி ஒரு சீரியலாச்சும் ஹிட் ஆனாத்தான் தொடர்ந்து வாய்ப்பு. அதுவும் மாசத்துக்கு அதிகபட்சம் 15 நாளுக்கு மேல ஷூட்டிங் இருக்காது. ஒரு மாசத்துல ஒரு வாரம் மட்டுமே வேலைன்னுகூட இருந்திருக்கு. சீரியல் மூலம் கிடைக்கிற பிரபலம்கிறது ரொம்பச் சின்னது. இப்படிப்பட்ட சூழல்ல, ‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ங்கிறதுக்கு ஏத்தாப்ல வர்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தலாம்னா, அதையும் தடுக்கிறாங்க.

ஒரு நடிகை ஒரே நேரத்துல ரெண்டு சீரியல் நடிக்கலாம். கால்ஷீட் பிரச்னையெல்லாம் வரவே வராதுங்க. ஆனா டி.ஆர்.பிங்கிற விஷயம் முக்கியமாகிறப்பதான், ‘நீங்க வேற சீரியல்ல நடிக்கக் கூடாது’ங்கிற உத்தரவு வருது’’ என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த நடிகை.

பிரச்னைகளுக்கான காரணம் என்ன ஜனனியிடம் பேசினேன்.

விகடன் TV: சினிமாக்காரர்களுக்கு ஒரு சட்டம், சீரியல் நடிகைகளுக்கு ஒரு சட்டமா?

‘`ஒரே நேரத்துல ரெண்டு சீரியல்ல நடிக்கறதுங்கிறது நான் இப்ப புதுசாப் பண்ணலை. நாலஞ்சு வருஷமாவே இப்படித்தான் நடிச்சிட்டிருக்கேன். இந்த சேனலுக்கு 15 நாள் அந்தச் சேனலுக்கு 15 நாள்னு பிரிச்சு கால்ஷீட் தந்துதான் நடிச்சுட்டு வந்தேன். இதுல எந்தக் குளறுபடியும் வந்ததில்லை. திடீர்னு இப்ப ‘செம்பருத்தி’யில இருந்து ‘உங்க கேரக்டருக்கு முக்கியத்துவம் கூடப்போகுது. அதனால கூடுதலா தேதிகள் வேணும்னு கேட்டாங்க. எதுக்கு இப்படிக் கேட்டாங்கன்னு எனக்குத் தெரியலை. ஆனா என்னால அவங்க கேட்டபடி பண்ண முடியலை. அதனால இப்ப நான் சீரியல்ல இல்லை” என்கிறார் வருத்தத்துடன்.

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜேந்திரனிடம் இந்த விஷயம் குறித்துக் கேட்டேன்.

விகடன் TV: சினிமாக்காரர்களுக்கு ஒரு சட்டம், சீரியல் நடிகைகளுக்கு ஒரு சட்டமா?

‘`நான் டிவி நடிகர் சங்கத் தலைவரா இருந்த வரைக்கும் சீரியல் ஆர்ட்டிஸ்டுக்கு இந்த மாதிரி தொழில் ரீதியான பிரச்னை அதாவது சேனலுடன் அல்லது தயாரிப்புத் தரப்புடன் பிரச்னை வந்துச்சுன்னா தீர்த்து வைக்கிறதுதான் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் முக்கியமான வேலையா இருந்தது. சீரியல்ல நடிக்கணும்னா எங்க சங்கத்துல உறுப்பினரா இருக்கணும்கிறதை ஸ்ட்ரிக்ட் ஆக்கினேன். இந்த விதிகளுக்குக் கட்டுப் படலைங்கிற சூழல்ல நடிகை தேவயானி, விஜயலட்சுமி ரெண்டு பேரும் சீரியல்ல இருந்து வெளியேறின சம்பவமெல்லாம்கூட நடந்திருக்கு. ஆனா இன்னைக்கு டிவி நடிகர் சங்கத்துலயே பதவிச் சண்டை உச்சத்துக்குப் போய் சங்கத்தின் பேர் செய்திகளில் நாறிட்டிருக்கு. சங்கமே இப்படியிருந்தா ஆர்ட்டிஸ்டுகள் எங்க போய் என்ன தீர்வைத் தேட முடியும்?

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டா எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் இருக்கணும். கொடுத்த தேதிகளில் ஷூட்டிங் வராம ஆர்ட்டிஸ்டுகள் குழப்பத்தை உண்டாக்கினா அப்ப அவங்களைக் கேள்வி கேட்கலாம். அதில்லாம இங்க போகக் கூடாது; அங்க நடிக்கக் கூடாதுன்னு அவங்களைக் கட்டுப்படுத்தறது ஆரோக்கியமானதில்லை’’ என்கிறார்.

ஜனனி விவகாரம் குறித்து ‘செம்பருத்தி’ ஒளிபரப்பாகும் ஜீ தமிழ் சேனல் தரப்பின் கருத்தை அறியத் தொடர்புகொண்ட போது, ‘ஷூட்டிங்கிற்கான நாள்களை ஒதுக்கறதுலதான் பிரச்னை’ன்னு ஜனனியே சொல்லிட்டாங்களே. தவிர, எனக்குப் பதிலா வர்ற ஆர்ட்டிஸ்டுக்கும் எனக்குத தந்த ஆதரவைத் தரணும்னும் அவங்களே அவங்க ரசிகர்களுக்குக் கோரிக்கை வச்சிருக்காங்க. அதனால இந்த ஆள் மாற்றம் வலிந்து திணிக்கப்படலை. தவிர்க்க இயலாத சூழல்லதான் நடந்திருக்கு’ என்றார்கள்.பிரச்னைகளும் மெகா சீரியல் மாதிரி நீளும்போலிருக்கே?