சினிமா
Published:Updated:

விகடன் TV: “எல்லாமே அனுபவம்தானே!” - தத்துவம் சொல்லும் ரச்சிதா.

ரச்சிதா
பிரீமியம் ஸ்டோரி
News
ரச்சிதா

- தத்துவம் சொல்லும் ரச்சிதா

‘சரவணன் மீனாட்சி’ முதல் சீசனின் ஹீரோவும் அதே சீரியலின் 2 மற்றும் 3வது சீசன்களின் ஹீரோயினும் ஜோடியாக நடிக்கும் `நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட். (தலையே சுத்திடுச்சு தலைவா!)

லஞ்ச் பிரேக்கில் இருந்த ரச்சிதா முன் போய் அமர்ந்தேன்.

விகடன் TV: “எல்லாமே அனுபவம்தானே!” - தத்துவம் சொல்லும் ரச்சிதா.

`` ‘சீரியல் தயாரிக்கப் போறேன்’னு ஜீ தமிழ் பக்கம் போனீங்க... மறுபடியும் விஜய் டிவிக்கே நடிக்க வந்துட்டீங்களே?’’

``நாச்சியார் புர’த்தைப் பொறுத்தவரை நான் ஹீரோயினா நடிச்சேன். மத்த பொறுப்பெல்லாம் தினேஷ்தான் பார்த்தார். அதனால தயாரிப்பு அனுபவம்னு எதுவும் எனக்குக் கிடைக்கலை. அதுக்காக கசப்பான அனுபவம்னு எடுத்துக்கத் தேவையில்லை. அனுபவங்கள் எல்லாத்துலயும் நாம கத்துக்க விஷயம் இருக்குதானே, அப்படி எடுத்துக்க வேண்டியதுதான்.

அந்த அனுபவத்தை மறக்க நினைச்சிட்டிருந்த நேரத்துலதான் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலுக்குக் கூப்பிட்டாங்க. விஜய் டிவி எனக்கு ஏற்கெனவே பரிச்சயமான இடம்கிறதால வந்துட்டேன்.’’

விகடன் TV: “எல்லாமே அனுபவம்தானே!” - தத்துவம் சொல்லும் ரச்சிதா.
விகடன் TV: “எல்லாமே அனுபவம்தானே!” - தத்துவம் சொல்லும் ரச்சிதா.

``முதல் சீசனின் ஹீரோவும் அடுத்த இரண்டு சீசன்களின் ஹீரோயினும் சேர்ந்து நடிக்கறீங்க. எப்படி இருக்கு இந்த காம்பினேஷன்?’’

‘‘ `சரவணன் மீனாட்சி’ என் வாழ்க்கையில ரொம்பவே முக்கியமான சீரியல். செந்திலைப் பொறுத்தவரை இந்த சீரியலைத் தொடங்கி வச்சதே அவர்தான். விஜய் படத்துல ஒரு டயலாக் வருமே, ‘நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்’னு, அந்த மாதிரிதான்.

ஆனாலும் கூட நா.இ.ந.இ. ஷூட்டிங் ஜாலியா போயிட்டிருக்கு. `எங்கூட நடிக்கிற அனுபவம் உங்களுக்கு எப்படி இருக்கு’ங்கிற ரீதியில சமயத்துல என்னைப் பேட்டில்லாம் எடுக்க ஆரம்பிச்சிடுவார் செந்தில்.’’

விகடன் TV: “எல்லாமே அனுபவம்தானே!” - தத்துவம் சொல்லும் ரச்சிதா.
விகடன் TV: “எல்லாமே அனுபவம்தானே!” - தத்துவம் சொல்லும் ரச்சிதா.

``லாக் டௌன் காலத்துல என்ன பண்ணிட்டிருந்தீங்க?’’

‘‘உருப்படியா எதுவும் செய்யலை. இதைச் சொல்றதுக்குக் கொஞ்சம் கூச்சமாதான் இருக்கு. ஊரடங்கு தொடங்குன சமயத்துல எதேச்சையா பெங்களூருக்கு அம்மா வீட்டுக்குப் போயிருந்தேன். அதனால அங்கேயே செட்டில் ஆகிட்டேன். விரும்பியதைச் சமைச்சுச் சாப்பிடறது, டிவியில படங்கள் பார்க்கறது, தூங்கறதுன்னே கழிஞ்சது. இப்படிக் கட்டுப்பாடு இல்லாம இருந்ததால கொஞ்சம் வெயிட் போட்டுடுச்சுன்னுகூட நினைக்கேன். பாவம், கணவர்தான் இங்க தனியா சமைச்சுச் சாப்பிட்டுட்டிருந்தார்.”