Published:Updated:

`பாக்கியலட்சுமி' தொடரிலிருந்து விலகினாரா ஆர்யன்?!

ஆர்யன்

'சின்னத்திரையில் தொடர்ந்து நடிகர்கள் விலகலும், 'இவருக்கு பதில் இவர்' என்கிற டெம்ப்ளேட்டும் தற்போது அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது. முன்னணி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் திடீரென அந்தத் தொடரிலிருந்து விலகிவிடுகிறார்கள்!'

சின்னத்திரையில் தொடர்ந்து நடிகர்கள் விலகலும், 'இவருக்கு பதில் இவர்' என்கிற டெம்ப்ளேட்டும் தற்போது அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது. முன்னணி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் திடீரென அந்தத் தொடரில் இருந்து விலகிவிடுகிறார்கள்.

ஆர்யன்
ஆர்யன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் 'பாக்கியலட்சுமி'. இந்தத் தொடரில் நடிகர் ஆர்யன், செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சமீபத்தில், இவர் 'செம்பருத்தி' தொடரில் கதாநாயகியாக நடிக்கும் ஷபானாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், திடீரென ஆர்யன் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகியதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

'கடைக்குட்டி சிங்கம்' தொடரை தொடர்ந்து ஆர்யனின் இரண்டாவது ப்ராஜக்ட் 'பாக்கியலட்சுமி'. இந்தத் தொடரில் அண்ணன் கதாபாத்திரத்தில் இவர் நடித்து வந்தார். இந்தநிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து ஆர்யன் விலகியதாகத் தெரிகிறது.

ஆர்யன்
ஆர்யன்

ஆனால், இது குறித்து ஆர்யன் தரப்பிலோ, சேனல் தரப்பிலோ அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. அவர் சீரியலில் இருந்து விலகியதாக வரும் பதிவிற்கு அவருடைய ரசிகர்கள் சிலர்.. 'சரியான முடிவு.. அவர் ஹீரோ மெட்டீரியல்' என கம்மென்ட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆர்யன், செழியன் கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!