Published:Updated:

`தாடி பாலாஜி மகளுக்கு உதவல.. பழையபடி ஹெச்.ஆர்!' - `பிக் பாஸ்' நித்யா திடீர் முடிவு?

’பிக் பாஸ்’ நித்யா
’பிக் பாஸ்’ நித்யா

`பிக் பாஸ் - 2' சீசனின் இறுதியில் கமல்ஹாசன் முன்னிலையில் இருவரும் மனம் மாறி சேர்ந்துவிட்டதாகக் காட்டப்பட்டது. ஆனால், இன்றுவரை தாடி பாலாஜி தனியாகவும் நித்யா தன் மகள் போஷிகாவுடன் தனியாகவும்தான் வாழ்ந்து வருகிறார்கள்.

நடிகர் `தாடி' பாலாஜியின் மனைவி நித்யா. இவர்கள் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து நடனமாடிய போதுதான் இவர்களுக்கிடையில் இருந்த குடும்பப் பிரச்னை வெளியுலகத்துக்குத் தெரியவந்தது.

தொடர்ந்து போலீஸ் புகார், கோர்ட் என இவர்களது வீட்டு விவகாரம் பொதுவெளிக்கு வந்ததைத் தொடர்ந்து கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

நித்யா
நித்யா

இந்த நிலையில், `பிக் பாஸ்’ இரண்டாவது சீசனில் இருவருமே போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல, பழையபடி இவர்களின் குடும்ப விவகாரம் மீடியாவில் அடிபட்டது. அந்த சீசனின் இறுதியில் கமல்ஹாசன் முன்னிலையில் இருவரும் மனம்மாறி சேர்ந்துவிட்டதாகக் காட்டப்பட்டது.

ஆனால், இன்றுவரை `தாடி' பாலாஜி தனியாகவும் நித்யா தன் மகள் போஷிகாவுடன் தனியாகவும்தான் வாழ்ந்து வருகிறார்கள்.

``என் பொண்டாட்டியை டைவர்ஸ் பண்ணிட்டீங்களே... அப்புறம் ஏன் வர்றீங்க?'' - `தாடி' பாலாஜி பஞ்சாயத்து

பாலாஜியைப் பிரிந்ததிலிருந்து கடந்த சில ஆண்டுகளாக மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார் நித்யா. கொரோனாவால், இப்போது பள்ளியைத் திறக்கமுடியாததால், பள்ளியைத் தொடர்ந்து நடத்த இயலாத சூழலில் இருக்கிறாராம்.

``ஐ.டி துறையில் பெரிய கம்பெனியிலும் பிறகு பிரபலமான ஒரு மருத்துவமனையில் ஹெச்.ஆர் அதிகாரியா இருந்தவர் நித்யா. பாலாஜியைக் கல்யாணம் செய்த பிறகு அந்த வேலையிலிருந்து விலகிட்டார்.

நித்யா
நித்யா

குடும்ப வாழ்க்கையில பிரச்னை வந்து கணவரைப் பிரிந்து இருந்தாலும், சொந்தக் காலில் நிற்கணும்னு நினைக்கிறாங்க. அவங்க வழக்கு எப்ப எப்படி முடியும்னு தெரியல. முடிஞ்சாலும் ஜீவனாம்சமா பெருசா எதுவும் கிடைக்குமான்னும் தெரியல. ஏன்னா மகள் போஷிகாவுக்குச் செய்யச் சொன்ன சில விஷயங்களையே பாலாஜி செய்யலைன்னு சொல்லிட்டிருந்தாங்க.

இப்ப கொரோனாவால் குழந்தைகள் ஸ்கூல்ல சேர்க்கையே இல்லைனு சொல்லிட்டிருந்தாங்க. அதனாலேயே பழையபடி வேலைக்குப் போகலாம்னு முடிவெடுத்திருக்காங்க’’ என்கிறார்கள் நித்யாவின் நெருங்கிய நண்பர்கள் சிலர்.

நித்யா முன்பு பணிபுரிந்த நிறுவனத்திலிருந்தே அழைப்பு வந்துள்ளதாம். வேறு சில நிறுவனங்களுக்கும் ரெஸ்யூம் அனுப்பி வைத்திருக்கிறாராம்.

எப்படியே சீக்கிரமா ஹெச்.ஆர். அதிகாரியாக மாறத் தயாராகிவிட்டார் நித்யா.

அடுத்த கட்டுரைக்கு