Published:Updated:

"அவனுக்கு வேற பொண்ணு பார்த்துட்டோம், நீ விலகிப் போயிடு!"- ஷபானாவை மிரட்டுகிறார்களா ஆர்யன் வீட்டார்?

ஷபானா - ஆர்யன்

"நாம எல்லோருமே சில வலிகளை அனுபவிச்சுதான் வந்திருப்போம். பலருக்கு பலவிதமான பிரச்னை இருக்கு. சிலர் பிரியமான ஒருத்தரை இழந்திருக்கலாம்!" - ஷபானா

"அவனுக்கு வேற பொண்ணு பார்த்துட்டோம், நீ விலகிப் போயிடு!"- ஷபானாவை மிரட்டுகிறார்களா ஆர்யன் வீட்டார்?

"நாம எல்லோருமே சில வலிகளை அனுபவிச்சுதான் வந்திருப்போம். பலருக்கு பலவிதமான பிரச்னை இருக்கு. சிலர் பிரியமான ஒருத்தரை இழந்திருக்கலாம்!" - ஷபானா

Published:Updated:
ஷபானா - ஆர்யன்
திருமணம் முடிந்து சில வாரங்களே ஆன நிலையில், 'செம்பருத்தி' ஷபானா - 'பாக்கியலட்சுமி' ஆர்யன் தம்பதிக்கிடையில் கருத்து வேறுபாடு உருவாகி இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

சமூக வலைதளத்தின் வழியே முதன்முதலாக இந்த ஜோடி காதலை அறிவித்தபோதே ஒருவித ஆச்சர்யத்துடன் பார்த்தது டிவி உலகம். தொடர்ந்து ஷபானாவிடம் 'எப்போ கல்யாணம்' எனக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள் அவரது ரசிகர்கள்.

'இப்பதானே காதலைச் சொல்லியிருக்கிறாங்க, எப்படியும் ரெண்டு மூணு வருஷம் ஆகலாம்' என்றுதான் ஷபானாவுக்கு நெருங்கிய நண்பர்களே நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்தச் சூழலில் யாரும் எதிர்பாராதபடி திடீரென கடந்த மாதம் (நவம்பர்) முதல் வாரத்தில் இவர்களின் திருமணம் நடந்தது.

ஷபானா - ஆர்யன்
ஷபானா - ஆர்யன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில் திருமணத்துக்குப் பிறகு, அதாவது கடந்த சில தினங்களுக்கு முன் ஷபானா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் ஒரு பதிவு, 'இப்போதானே கல்யாணமாச்சு, அதுக்குள்ள இப்படியொரு பதிவு ஏன்' எனப் பலரையும் யோசிக்க வைத்திருக்கிற‌து.

"நாம எல்லோருமே சில வலிகளை அனுபவிச்சுதான் வந்திருப்போம். பலருக்கு பலவிதமான பிரச்னை இருக்கு. சிலர் பிரியமான ஒருத்தரை இழந்திருக்கலாம்" என்கிற ரீதியில் போகிறது அந்தப் பதிவு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஷபானாவுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படிப் பேசுகிறார்? அவரது நெருங்கிய நட்பு வட்டத்தில் சிலரிடம் பேசினேன்.
ரேஷ்மா
ரேஷ்மா

"ஷபானா - ஆர்யன் கல்யாணத்துல ஆர்யன் விட்டாருக்குச் சுத்தமா விருப்பமே இல்லை. ஆனா ஆர்யனுடன் நட்பில் இருந்த ரேஷமா ('பூவே பூச்சூடவா' தொடரில் நடித்தவர்) தான் இந்தக் கல்யாணத்துக்கு முழுக் காரணமா இருந்திருக்காங்க. அவசரம் அவசரமாத் திருமணம் முடிஞ்ச பிறகுமே ஆர்யனுடைய வீட்டுல இந்தக் கல்யாணத்தை ஏத்துக்கலை. அதனால கல்யாணம் முடிஞ்சு கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகியும் ஷபானா ஆர்யன் வீட்டுக்கே போகலைங்கிறாங்க.

இதுக்கிடையில் தேனிலவுக்காக புதுச்சேரிப் பக்கமுள்ள ஒரு ரிசார்ட்டுக்கு ரெண்டு பேரும் கிளம்பிப் போனாங்க. ஆனா அங்க என்ன நடந்ததோ நாலு நாள்னு ப்ளான் பண்ணிட்டுப் போனவங்க, மறுநாளே திரும்பிட்டாங்க. இப்ப ரெண்டு பேருக்கிடையில் மனக்கசப்பு பெரிதாகிட்டே போறதாத்தான் தெரியுது. கூடிய விரைவில் இது வெளியில வரலாம்.

ஷபானா – ஆர்யன்
ஷபானா – ஆர்யன்

ஆர்யன் வீட்டுத் தரப்புல இருந்து 'நீயா விலகிடு, நாங்க அவனுக்கு (ஆர்யனுக்கு) வேற ஒரு பொண்ணைப் பார்த்திருக்கோம்' என்கிற ரீதியிலும் ஷபானாகிட்டப் பேசினதாச் சொல்றாங்க‌'' என்கிறார்கள் இவர்கள்.

ரேஷ்மாதான் இந்தக் கல்யாணத்துக்குக் காரணம் என்கிற விஷயம் தெரிந்ததும் ஆர்யன் வீட்டார் ரேஷ்மா வீட்டிற்குப் போய் சண்டை பிடித்ததும் நடந்தது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.