Published:Updated:

``ஜோடியாதான் நடிப்போம்னு அடம் பிடிச்சு நடிச்சாங்க!" – `பகல் நிலவு' அஸீம் வீட்டிலும் பஞ்சாயத்து!

அஸீம்

சின்னத்திரையில் ஈஸ்வர் - ஜெயஸ்ரீ, மகாலட்சுமி விவகாரமே இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள் `சேம் ப்ளட்’ என்கிற மாதிரி அதே ரகத்தில் இன்னொரு விவகாரம் வந்துள்ளது.

``ஜோடியாதான் நடிப்போம்னு அடம் பிடிச்சு நடிச்சாங்க!" – `பகல் நிலவு' அஸீம் வீட்டிலும் பஞ்சாயத்து!

சின்னத்திரையில் ஈஸ்வர் - ஜெயஸ்ரீ, மகாலட்சுமி விவகாரமே இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள் `சேம் ப்ளட்’ என்கிற மாதிரி அதே ரகத்தில் இன்னொரு விவகாரம் வந்துள்ளது.

Published:Updated:
அஸீம்

`கத்திரிக்காய் எந்த நேரத்திலும் முத்திப்போய் கடைத்தெருவுக்கு வரலாம்’ என்கிற நிலையில் நம் காதில் டீடெயிலாக விஷயத்தைப் போட்டார்கள், பெயர் குறிப்பிட விரும்பாத சிலர்.

அவர்கள் வார்த்தைகளிலேயே கேட்கலாம்.

Azeem
Azeem

`` `தெய்வம் தந்த வீடு’, `பகல் நிலவு’, `கடைக்குட்டிச் சிங்கம்’னு சில சீரியல்கள்ல நடிச்சாருல்ல அஸீம்... அவர் வீட்டுலேயும் பிரச்னை முத்துற கட்டத்துக்குப் போயிடுச்சு. சில ஆண்டுகளுக்கு முன்னாடி ஸோயாங்கிறவங்ககூட இவருக்குத் திருமணம் நடந்தது. அவங்க டிவி ஏரியாவுல இருக்கிறவங்க இல்ல, பெரியவங்களா பார்த்து ஏற்பாடு செய்த திருமணம். ரெண்டு மூணு வருஷம் நல்லபடியாத்தான் வாழ்ந்துகிட்டிருந்தாங்க. இடையில என்ன பிரச்னை, யார் வில்லனா வந்தாங்கனு தெரியல. சில வருஷங்களா பிரச்னை பெருசா வெடிச்சுகிட்டிருக்கு. ரெண்டு பேருமே விவாகரத்துக்குத் தயாராகிட்டதாகச் சொல்றாங்க’’ என அஸீமுடன் நடித்த நடிகர் ஒருவரே சொல்ல, குறுக்கிட்டு, ``இனிமே அவங்களுக்கிடையில சமரசத்துக்கு வாய்ப்பில்லைனு தெரியுது'' என்றபடி தொடர்ந்தார் ஒரு டெக்னீஷியன்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``அந்தப் பொண்ணு பாவம் சார். எங்க பார்வையில இவர் மேலதான் தப்பு இருக்கறதா தெரியுது. என்ன சொல்றது... குணம் அந்த மாதிரி இருக்கு. முதல்ல வேறோரு சேனல்ல நல்லா போயிட்டிருந்த சீரியல்ல நடிச்சார். ஷூட்டிங் ஸ்பாட்ல செயல்பாடுகள் பிடிக்காமத்தான் அந்தத் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

மறுபடியும் பிரைம் டைம் சீரியல் அமைஞ்சது. ஒழுங்கா நடிச்சுகிட்டுப் போயிட்டிருக்கலாம். அதுல இவருக்கு ஜோடியா ஒரு பொண்ணு வந்தது. அறிமுகமானப்போ பள்ளிக்கூடம் போயிட்டிருந்த பொண்ணு சார் அது. அவங்ககூட இவருக்குப் பழக்கமாகிடுச்சு. வழக்கம்போல சிறந்த புதுமுக ஜோடின்னு இவங்களுக்கு அவார்ட் கொடுத்தாங்களா... அதுல இருந்துதான் வீட்டுலேயும் பிரச்னை தொடங்கியிருக்கு. சில நாள் பிரச்னை, ஷூட்டிங் ஸ்பாட் வரைக்கும் வந்திருக்கு. அப்படி வந்த பிறகுதான் எங்களுக்கெல்லாம் விஷயம் தெரிய வந்தது. இப்போ என்னன்னா, மனைவியைப் பல வழியில அஸீம் டார்ச்சர் செய்யிறதா சொல்றாங்க'' என்கிறார் அந்த டெக்னீஷியன்.

சக யூனிட் ஆட்கள் குறிப்பிடும் அந்த நடிகையும் அஸீமும் சேர்ந்து நடித்த சீரியல் முடிவுக்கு வர, ``அடுத்த சீரியலிலும் ரெண்டு பேரும் ஜோடியாதான் நடிப்போம்'' என்று அடம்பிடித்து, அதில் வெற்றியும் பெற்றார்களாம் சமபந்தப்பட்ட அந்த நடிகையும் அஸீமும்.`வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுச்சா’ எனக் கொதித்த அஸீமின் மனைவி தரப்பு ஆக்ரோஷமாகவே, கமிட்டான சில மாதங்களிலேயே தொடரிலிருந்து அந்த நடிகை மட்டும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

Azeem
Azeem

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அஸீமுடன் நட்பு வட்டத்தில் இருக்கும் சிலரோ, ``அந்த நடிகையுடன் இப்போ தொடர்பு இருக்கானு தெரியாது. அவங்க சீரியல்ல இருந்து வெளியேறிய பிறகுதான் கணவன் மனைவிக்கிடையே பிரச்னை முத்திடுச்சு'' என்றார்கள்.

`சம்பந்தப்பட்ட இருவரிடமே பேசிவிடலாமே’ என முதலில் அஸீமைத் தொடர்புகொண்டேன்.

அஸீம்
அஸீம்

``உங்களுக்கும் உங்க மனைவிக்கும் இடையே பிரச்னையாமே'' என நாம் தொடங்குவதற்குள், ``வதந்தியைப் பரப்புறாங்க சார். அதுல உண்மையில்ல'' எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார் அஸீம்.

அஸீமின் மனைவி ஸோயாவிடமும் பேசினேன்...

``எங்களுக்கிடையில பிரச்னை போயிட்டிருக்குங்கிறது உண்மைதான். நாங்க ரெண்டு பேரும் இப்போ சேர்ந்து வசிக்கலைங்கிறதும் நிஜம். உடன் நடிச்ச நடிகையுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததும் நிஜம்தான். மேற்கொண்டு இந்த விவகாரம் தொடர்பா நான் எதையும் பேச விரும்பல. விவகாரம் வெளியில வரும்போது வரட்டும்'' என்றார் ஸோயா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism