Published:Updated:

"Cooku with Comali தாமு சாரும், பட் சாரும் அப்போ ரொம்ப ஸ்ட்ரிக்ட்!" - `ஜோடி' பிரியா ஷேரிங்ஸ்!

`ஜோடி' பிரியா

`கனா காணும் காலங்கள்' சீரியலில் நடிக்க கேட்டப்ப எனக்கு ஆக்டிங் செட் ஆகாதுன்னு சொல்லி போகல. 'சரவணன் மீனாட்சி' சீரியலில் என் நிஜ கேரக்டர் மாதிரியான ரோல் என்பதால் ஓகே சொன்னேன்.

"Cooku with Comali தாமு சாரும், பட் சாரும் அப்போ ரொம்ப ஸ்ட்ரிக்ட்!" - `ஜோடி' பிரியா ஷேரிங்ஸ்!

`கனா காணும் காலங்கள்' சீரியலில் நடிக்க கேட்டப்ப எனக்கு ஆக்டிங் செட் ஆகாதுன்னு சொல்லி போகல. 'சரவணன் மீனாட்சி' சீரியலில் என் நிஜ கேரக்டர் மாதிரியான ரோல் என்பதால் ஓகே சொன்னேன்.

Published:Updated:
`ஜோடி' பிரியா

சின்னத்திரையில் நடன நிகழ்ச்சி மூலம் என்ட்ரியானவர் பிரியா. `ஜோடி' பிரியா என்றால்தான் இவர் முகம் சட்டென நினைவிற்கு வரும்! 'சரவணன் மீனாட்சி' தொடரில் எதார்த்தமாய் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். பிறகு திருமணமாகி மீடியாவில் இருந்து விலகியிருக்கிறோம். தற்போது பிரியா என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளக் பிரியாவைத் தேடிச் சென்றோம். இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க அந்தக் குழந்தையின் அம்மா அந்தக் குழந்தைகளின் பின்னால் சாப்பாடு ஊட்டுவதற்காக ஓடிக் கொண்டிருந்தார். அந்த அம்மாதான் நாம் தேடி வந்த பிரியா என்பது தெரிந்தது. அன்று பார்த்த அதே தோற்றம். சற்றும் மாறாத அவருடைய இயல்பான குணம். அவருக்கே உரித்தான சிரித்த முகத்துடன் நம்மை வரவேற்றார். குழந்தைகள் தூங்கிய பிறகு தான் ஓய்வு எடுக்கும் நேரத்தை பேட்டிக்காக ஒதுக்கியிருந்தார். அவருடனான உரையாடலில் இருந்து...

பிரியா
பிரியா

"முதல்ல இத்தனை வருஷம் ஆகியும் என்னை மறக்காம ஞாபகம் வச்சியிருக்கிற உங்களுக்கு ரொம்ப நன்றி. என்னுடைய கெரியரில் எதுவும் தீர்மானித்து நடந்தது கிடையாது. சின்ன வயசில இருந்தே டான்ஸ் ஆடப் பிடிக்கும். பல மேடை நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடுவேன். அப்படி ஒரு நிகழ்ச்சியில் என்னைப் பார்த்துட்டு தான் `மானாட மயிலாட' நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டாங்க. அதுதான் என்னோட முதல் ரியாலிட்டி ஷோ. அங்கதான் என் டான்ஸ் பயணம் ஆரம்பிச்சது. எதார்த்தமா அமைஞ்ச பயணத்தை விரும்பி ஏத்துக்கிட்டேன்.

பிறகு `ஜோடி' நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டேன். அந்த நிகழ்ச்சியில் நானும், சுனிதாவும் சேர்ந்து ஆடினோம். அதே நிகழ்ச்சியில் வேற சீசனில் தனித்தனியாக பிரிந்தும் ஆடினோம். நானும், சுனிதாவும் இப்ப வரை நல்ல ப்ரெண்ட்ஸ். அப்ப என்கிட்ட எப்படி பழகினாங்களோ அப்படித்தான் இப்பவரைக்கும் இருக்காங்க. சின்ன மாற்றத்தைக்கூட அவங்ககிட்ட நான் உணரல. இந்த இடத்துக்கு வர்றதுக்காகவும், இந்த வாய்ப்புக்காகவும் அவங்க எவ்வளவு நாள் வெயிட் பண்ணாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். இப்ப அது அவங்களுக்கு கிடைச்சிருக்கிறது ரொம்பவே சந்தோஷமா இருக்கு.

பிரியா
பிரியா

ஆரம்பத்தில் மேடை நிகழ்ச்சிகளில் நான் டான்ஸ் ஆடப் போகும்போது எங்க வீட்ல அந்த அளவுக்கு சப்போர்ட் இல்ல. என் தங்கச்சிங்க ரெண்டு பேருமே செமையா படிப்பாங்க. நான் மட்டும்தான் படிப்புல கவனம் செலுத்தாம இருந்தேன். `மானாட மயிலாட' போட்டியில் கலந்துக்க ஆரம்பிச்ச பிறகுதான், நான் உண்மையாவே இந்த கெரியரில் கவனம் செலுத்துறேன்னு என்னை புரிஞ்சுகிட்டு சப்போர்ட் பண்ணினாங்க. ஆனா, அப்பவும் இதுதான் என் கெரியர்னுலாம் நான் நினைக்கவே இல்ல. எப்பவும் லிவ் வித் பிரசெண்ட் என்பதை தான் நான் ஃபாலோ பண்றேன் என்றவரிடம் கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி குறித்துக் கேட்கவும் சிரிக்கிறார்.

வெங்கடேஷ் பட் சார், தாமு சார், சுரேஷ் சார் இவங்க மூன்று பேரும் தான் அந்த நிகழ்ச்சியின் நடுவர்கள். இப்ப குக்கு வித் கோமாளியில் இருக்கிற மாதிரி அப்ப ஜட்ஜஸ் இல்ல. ஆஃப் ஸ்கிரீனில் ஜாலியா இருப்பாங்க.. ஆன் ஸ்கிரீன்ல ரொம்பவே ஸ்ட்ரிக்டா இருப்பாங்க. எனக்கு குக்கிங்கில் ஆர்வம் அதிகம். ஆரம்பத்தில் அந்த ஷோவுக்குள் போகும்போது எனக்கு அவ்வளவா சமைக்கத் தெரியாது. பிறகு, நானே ஆர்வமா ஒவ்வொரு டிஷ்ஷா கத்துக்கிட்டு சமைக்க ஆரம்பிச்சிட்டேன். ஒருமுறை நான் சமைச்சது நல்லா இல்லைன்னு பட் சார், 'பேசிக் குக்கிங் முதலில் கத்துக்கோங்க'ன்னு சொன்னார். அது ரொம்ப ஒரு மாதிரி ஆகிடுச்சு. அதுக்கு அடுத்த எபிசோடிலேயே செமையா சமைச்சு 'செஃப் ஆஃப் தி வீக்' வாங்கினேன். அதை மோடிவேஷனலா எடுத்துக்கிட்டு தொடர்ந்து சமைக்க ஆரம்பிச்சிட்டேன். அந்த ஷோவில் செகண்ட் ரன்னர் அப் ஆனேன். டான்ஸிலும் சரி, குக்கிங்கிலும் சரி நடுவர்கள் சொல்ற பாசிட்டிவ், நெகட்டிவ் ரெண்டு கம்மென்ட்ஸையும் மனசில வச்சிப்பேன். திட்டுகள்தான் நம்ம வளர்ச்சிக்கு உதவும் என்றவர் சீரியல் குறித்து பகிர்ந்து கொண்டார்.

பிரியா
பிரியா

எனக்கும், நடிப்பிற்கும் சுத்தமா செட் ஆகாது. என்னுடைய கேரக்டர் ரொம்ப ஜாலியா துறுதுறுன்னு இருக்கிறது. என்னை ஒரு நாள் முழுக்க கிளிசரின் போட்டு சோகமா முகத்தை வச்சு அழுது நடிக்க சொன்னா என்னால முடியவே முடியாதுங்க.. 'கனா காணும் காலங்கள்' சீரியலில் நடிக்க கேட்டப்ப எனக்கு ஆக்டிங் செட் ஆகாதுன்னு சொல்லி போகல. 'சரவணன் மீனாட்சி' சீரியலில் என் நிஜ கேரக்டர் மாதிரியான ரோல் என்பதால் ஓகே சொன்னேன். அந்த செட் பயங்கர ஜாலி... ரொம்பவே கம்பர்டபுளான டீம். அதனால அந்த சீரியலில் என்ஜாய் பண்ணி நடிச்சேன். எனக்கு சீரியல் அந்த அளவுக்கு கம்பர்டபுள் இல்லைங்கிறதனால தொடர்ந்து அதில் கவனம் செலுத்தல.

வீட்ல திருமணம் பண்ணனும்னு சொல்லி மாப்பிள்ளை பார்த்தாங்க. படிச்சவர், அதே மாதிரி மீடியா ஃபீல்டு இல்லாத ஒருத்தரை திருமணம் செய்துக்கணும்னு நினைச்சேன். அதுக்கு ஏற்ற மாதிரி வீட்ல பார்த்தாங்க. கிட்டத்தட்ட 6 மாசம் மாப்பிள்ளை பார்க்கிறது நடந்துச்சு. கடைசியா ரெண்டு பேரை ஓகே பண்ணி வச்சிருந்தேன். இதுல யாரு நம்மளை ஓகே சொல்றாங்களோ அவங்களை திருமணம் பண்ணிக்கலாம்னு இருந்தேன். இவர் ஓகே சொல்லி மாட்டிக்கிட்டார் என்றவர் செல்லமாய் தன் கணவரை பார்த்து கண் அடிக்கிறார்.

பிரியா
பிரியா

நான் எதிர்பார்த்ததைவிட ரொம்ப ரொம்ப நல்ல மனிதர் எனக்கு கணவரா கிடைச்சார். பெரிய அளவில் ஏதோ பாக்கியம் பண்ணியிருக்கேன்போல! அவருக்கு நான் டான்ஸ் ஆடுறது, நடிக்கிறதுன்னு எதுவுமே தெரியாது. கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் கழிச்சு தான் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டோம். முதல் குழந்தை பிறந்த பிறகு உடனே இரண்டாவது குழந்தையும் பெத்துக்கிட்டேன். பெண் குழந்தைங்க வேணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். அதே மாதிரியே எனக்கு ரெண்டும் பெண் குழந்தைங்கதான். பிறகு மீடியாவிற்கு வரணும்னு எந்த அவசியமும் ஏற்படல.. அதற்கான நேரமும் இல்ல. குழந்தைங்களை பார்த்துக்கிறதுலேயே நேரம் சரியா இருக்கு. அதனால தான் வந்த வாய்ப்புகளையும் ஏத்துக்க முடியல.

குழந்தைங்களுக்கு படிப்பு ரொம்ப முக்கியம். அதை கண்டிப்பா அவங்களுக்கு கொடுத்துடணும் என்பதில் உறுதியா இருக்கேன். அதே மாதிரி பெண் பிள்ளைகளை தைரியமா வளர்க்கணும். நான் ஸ்கூல், காலேஜ் படிக்கும்போதெல்லாம் பஸ்ல தான் போயிட்டு வருவேன். சுடிதாரில் சேஃப்டி பின் குத்தி வச்சுருப்பேன். வேணும்னே உரசினாங்கன்னா பின் வச்சி குத்தி விட்டுடுவேன். எனக்கு கொஞ்சம் குருட்டு தைரியம் அதிகம். ஒரு சூழலை எப்படி சமாளிக்கணும் என்பதை பக்குவமா அவங்களுக்கு சொல்லிக் கொடுத்திடுவேன். இப்ப உள்ள குழந்தைங்க பயங்கர தெளிவாகவே இருக்காங்க என்றவரிடம் பாட்டும் கத்துக்கிட்டீங்களாமே எனக் கேட்டோம்.

பிரியா
பிரியா

ரொம்ப லேட்டா தாங்க அதுவும் கத்துக்கிட்டேன். சீக்கிரமே போயிருந்தா இடையில் நிறுத்தாம முழுசா கத்துட்டு இருந்திருப்பேன். நாலு வருஷம் மியூசிக் கத்துக்கிட்டேன். என்னுடைய குரு பின்னி கிருஷ்ணகுமார். மேடம் ரொம்ப ஸ்வீட். அவங்க எக்ஸலண்ட் டீச்சரும் கூட! அப்போதெல்லாம் ஷிவாங்கியை பார்த்திருக்கிறேன் அவ்வளவுதான்.. அவங்க கூட பேசி, பழகினதெல்லாம் இல்லை. ரொம்ப ஆசைப்பட்டு மியூசிக் கத்துக்கிட்டேன். மேமுடைய கிளாஸை ஒரு நாள் கூட மிஸ் பண்ண மாட்டேன். திருமணம் முடிவானதால தொடர்ந்து கத்துக்க முடியல என்றவரிடம் 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்துப்பீங்களான்னு கேட்டோம்.

வாய்ப்பு அமைஞ்சா நிச்சயம் கலந்துப்பேன். ஆனா, இப்போதைக்கு ரீ- என்ட்ரி குறித்து எந்தப் பிளானும் இல்ல. குழந்தைங்க, கணவர்னு ஜாலியா வாழ்க்கையை கொண்டாடிட்டு இருக்கேன்!' என்றார்.