Published:Updated:

"கமலின் பிக் பாஸ் காஸ்ட்யூம் பெயின்ட்டால் வடிவமைக்கப்பட்டதா?" - காஸ்ட்யூம் டிசைனர் அம்ரிதா ராம்

அம்ரிதா ராம் ( Sarpana B. )

"பிக்பாஸ் இறுதிப்போட்டி ட்ரெஸ்ஸை யாரையாவது திரும்பப் பண்ணச் சொல்லுங்க பார்ப்போம். பெயிண்ட்டை ஊத்தினால் எல்லா இடத்திலும் பட்டுடும். அதை எப்படி பண்றோம்ங்கிறதுதான் திறமை. கமல் சார்தான்..." - காஸ்டியூம் டிசைனர் அம்ரிதா ராம்

Published:Updated:

"கமலின் பிக் பாஸ் காஸ்ட்யூம் பெயின்ட்டால் வடிவமைக்கப்பட்டதா?" - காஸ்ட்யூம் டிசைனர் அம்ரிதா ராம்

"பிக்பாஸ் இறுதிப்போட்டி ட்ரெஸ்ஸை யாரையாவது திரும்பப் பண்ணச் சொல்லுங்க பார்ப்போம். பெயிண்ட்டை ஊத்தினால் எல்லா இடத்திலும் பட்டுடும். அதை எப்படி பண்றோம்ங்கிறதுதான் திறமை. கமல் சார்தான்..." - காஸ்டியூம் டிசைனர் அம்ரிதா ராம்

அம்ரிதா ராம் ( Sarpana B. )
அசிம், விக்ரமன் ரசிகர்களின் சூடாக்கும் விமர்சனப் பதிவுகளுக்கிடையே, பிக் பாஸ் பைனலில் கமல்ஹாசன் அணிந்திருந்த காஸ்டியூமும் சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது.
Bigg Boss 6 Grand Finale
Bigg Boss 6 Grand Finale

`கறைபடிந்த தீர்ப்பை சொல்லப்போகிறோம் என்பதற்கான குறியீடுதான் இந்த ட்ரெஸ்'... 'வின்னர் அசிம் என்பதைத்தான் ஆண்டவர் இப்படி சிம்பாளிக்கா உணர்த்துறார்'... 'பெயிண்ட்டை ஊத்தின மாதிரி இருக்கு' என்று அடுக்கடுக்கான குறியீடுகளைக் கண்டுப்பிடித்து ட்ரோல் செய்து வருகிறார்கள். இந் நிலையில், 'பிக்பாஸ்' அனைத்து சீசனுக்கும் கமல்ஹாசனின் காஸ்டியூம் டிசனைரனாகப் பணியாற்றிவரும் பிரபல காஸ்டியூம் டிசைனர் அம்ரிதா ராமிடம் பேசினோம்,

"கமல் சார் அணிந்திருக்கும் ஆடை எங்கள் கே.ஹெச் ஹவுஸ் பிராண்டுதான். பிக்பாஸ் இறுதிப்போட்டி என்பதால், கமல் சார் ஆடையை சிறப்பாக வடிவமைக்கத் திட்டமிட்டோம். இந்தமுறை 'நான் டெனிம் போடுறேன். ஜாக்கெட் மாதிரியான ஆடை வேண்டும்' என்றார் கமல் சார். அதனால்தான், கதர் டெனிமிலேயே ஜாக்கெட்டை வடிவமைத்தேன். டெனிமில் இந்தக் கலெக்‌ஷனுக்குப் பெயர் Chaos. ரொம்ப ஸ்பெஷலான கலெக்‌ஷன். ஓவியர் பிகாசோ, 'Chaos வடிவத்தில் இருப்பதுதான் கலை' என்பார். இந்தக் கலெக்‌ஷனில் ஒவ்வொரு டிசைனும் வித்யாசமா இருக்கும். அதற்கேற்றதுபோல், கமல் சார் ட்ரெஸ்ஸை முழுக்க முழுக்க கைகளாலேயே வடிவமைத்தேன். மெஷினுக்கே செல்லவில்லை. எம்பிராய்டிங் கூட கைகளால்தான் போட்டேன்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்
Sarpana B.

வடிவமைப்பையெல்லாம் முடித்துவிட்டு கலை இயக்குனர் ஜாக்சனிடம் பெயிண்ட் பண்ணக் கொடுத்தேன். 'விசாரணை', 'வட சென்னை', 'அசுரன்' பத்திற்கெல்லாம், ஜாக்சன் தான் கலை இயக்குனர். நான், 'வட சென்னை' படத்தில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றும்போது நண்பரானார். அவர், பெயிண்டிங் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது. அதனால், 'இந்தமாதிரி டிசைன்ல பெயிண்ட் பண்ணனும்'னு சொல்லிக் கொடுத்தேன். இரண்டே நாட்களில் கமல் சாரின் பேன்ட்- ஜாக்கெட்டிற்கு பெயின்ட் அடித்துக் கொடுத்துவிட்டார் ஜாக்சன். எல்லாம் முடித்தபிறகு, கமல் சாருக்கு இந்த ட்ரெஸ் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. சனிக்கிழமை பிக்பாஸ் ஷூட்டிங்.

வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்குத்தான் ட்ரெஸ் பெயின்ட் ஆகி வந்தது. உடனே, கமல் சாரிடம் காட்டினோம். "எக்ஸலென்ட். ரொம்ப நல்லாருக்கு. குட் ஜாப்" என்று பாராட்டினார். அவரது பாராட்டே எங்களுக்கு பெரிய விஷயம்" என்று உற்சாகமாக பேசுபவரிடம், "சமூக வலைதளங்களில் பெயின்ட் ஊத்தின மாதிரி இருக்குன்னு எல்லோரும் ட்ரோல் செய்றாங்களே?" என்றோம்

அம்ரிதா ராம்
அம்ரிதா ராம்

"இது எல்லாமே டெக்னிக்தான். கலையை கலையாக மட்டுமே பார்க்கவேண்டும். இந்தத் ட்ரெஸ்ஸை யாரையாவது திரும்பப் பண்ணச் சொல்லுங்க பார்ப்போம் ரொம்ப கஷ்டம். பெயின்ட்டை ஊத்தினால் எல்லா இடத்திலும் பட்டுடும். அதை எப்படி பண்றோம்ங்கிறதுதான் கலை; தனித்திறமை. சமூக வலைதளங்களில் வரும் பதிவுகளை நான் பார்ப்பதில்லை. அதற்கெல்லாம், நேரமும் இல்லை. ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறேன். அரிம், விக்ரமன் பற்றியும் நான் பேச விரும்பவில்லை. அவர்களுக்கும் டிசைனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் வேலையை சரியாக செய்துள்ளேன்" என்கிறார் அழுத்தமாக.