Published:Updated:

"இர்ஃபானை `கனா காணும் காலங்கள்' ரீ-யூனியன்ல பார்த்தப்போ..!"- ஹரிப்ரியா

'கனா காணும் காலங்கள்' டீம்

''என்னுடைய சீரியல் என்ட்ரியே கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடர் மூலம்தான். அதனால 'கே.கே.கே' எனக்கு எப்பவுமே ரொம்ப ஸ்பெஷல்.''

"இர்ஃபானை `கனா காணும் காலங்கள்' ரீ-யூனியன்ல பார்த்தப்போ..!"- ஹரிப்ரியா

''என்னுடைய சீரியல் என்ட்ரியே கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடர் மூலம்தான். அதனால 'கே.கே.கே' எனக்கு எப்பவுமே ரொம்ப ஸ்பெஷல்.''

Published:Updated:
'கனா காணும் காலங்கள்' டீம்
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பட்டையைக் கிளப்பிய 'கனா காணும் காலங்கள்' தொடரின் ரீயூனியன் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. அந்த ரீயூனியன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிப்ரியாவிடம் பேசினேன்.

"என்னுடைய சீரியல் என்ட்ரியே கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடர் மூலம்தான் நடந்தது. அதனால அது எனக்கு எப்பவுமே ரொம்ப ஸ்பெஷல். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாங்க எல்லோரும் சேர்ந்து சந்திப்போம்னு கொஞ்சமும் எதிர்பார்க்கலை. இதுல நிறையப் பேர் எங்களுக்குள் பேசிட்டே தான் இருக்கோம். கொரோனா வந்ததாலதான் கடந்த இரண்டு வருஷமா எங்களால மீட் பண்ண முடியலை. ஆனாலும் ஒரே இடத்துல மீட் பண்றது விசேஷமில்லையா? சேனல்ல இருந்து ரீயூனியன்னு கூப்பிட்டதுமே மனசு ஜில்லுனு ஆகிடுச்சு.

'கனா காணும் காலங்கள்' ஸ்கூல் எபிசோடுக்குமே நான் பயங்கர ரசிகை. அந்த சீசனில் நடிச்சவங்களும் இந்த ரீயூனியனில் கலந்துக்க போறாங்கன்னு தெரிஞ்சதும் ரொம்பவே ஆவலா இருந்தேன். எங்க சீசனில் நடிச்ச எல்லோரும் அப்போ எப்படி இருந்தோமோ அதே மாதிரி நண்பர்களாதான் இப்பவும் இருக்கோம். வாழ்க்கையில் எவ்வளவோ மாறி இருக்கு. ஆனாலும், எங்களுக்கிடையிலான நட்பு மாறலை. ஜாலியா இருக்கணும்னு எதிர்பார்த்து போனோம். ஆனா, எதிர்பார்த்ததை விட பயங்கர ஜாலியா இருந்தது நிகழ்ச்சி.

கனா காணும் காலங்கள்
கனா காணும் காலங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நேர்ல சந்திச்சதும், அன்னைக்கு ஷூட்டிங் ஸ்பாட்ல ஒவ்வொருத்தரும் பண்ணின குறும்புச் சேட்டைகள்லாம் நினைவுக்கு வர, எல்லாத்தையும் அசை போட்டோம். இப்ப நடந்த இந்த ரீயூனியன் போலவே நாங்களும் தனியா எங்கேயாச்சும் மீட் பண்ணலாம்னு பிளான் பண்ணிட்டு இருக்கோம்.

ஏற்கெனவே எங்களுடைய டீம் மட்டும் வருஷத்துக்கு எப்படியும் மூணு தடவை கண்டிப்பா மீட் பண்ணிடுவோம்.

அதேபோல அன்னைக்கு இன்ஸ்டாகிராம் எல்லாம் கிடையாது. ஃபேஸ்புக்கே அப்போ புதுசு. அதனால அப்போ ஃபோட்டோஸ் போடுறது, ரீல்ஸ் எடுக்குறதெல்லாம் கிடையாது. அந்த ஏக்கத்தையெல்லாம் இந்த ரீயூனியன் மூலமா நிறைவேத்திக்கிட்டோம். நிறைய போட்டோஸ் வீடியோஸ், ரீல்ஸ்னு ஒவ்வொருத்தரும் ஆசை தீர எடுத்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'கனா காணும் காலங்கள்'ங்கிறதை வெறுமனே சீரியல்னு சொல்லிட முடியாது. அது ஒரு பிராண்ட். அந்த சீரியலில் நானும் ஒரு அங்கமா இருந்தேன்னு நினைக்கிறப்ப ரொம்பவே பெருமையா இருக்கு.

ரீயூனியன் செம ஜாலியா இருந்தது. அங்க எல்லாருக்கும் அவார்டு கொடுத்தாங்க. அதை வாங்கினப்போ அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. நிகழ்ச்சியில நான் ரொம்ப எமோஷனலான தருணமும் அதுதான்.

ஹரிப்ரியா
ஹரிப்ரியா

நிஷாவுக்குக் குழந்தை பிறந்ததும் பார்க்கக்கூட போக முடியலை. இப்போ அந்தப் பாப்பாவுக்கே இரண்டு வயசாகிடுச்சாம். 'ஸ்கூல் கனா'வில் சங்கவி கேரக்டர் பண்ணவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்களை மீட் பண்ணலாம்னு நினைச்சேன். ஆனா ஏனோ தெரியலை, அவங்க வரலை. அதே மாதிரி எங்க டீம்ல ரஜினி, மதன், சத்ரி, திரு இவங்களெல்லாம் வரலை. அவங்களை எல்லாம் ரொம்பவே மிஸ் பண்ணேன்.

'ஸ்கூல் கனா'வுல நடிச்சிருந்த பாண்டி அண்ணா, உன்னி அண்ணா கூட சேர்ந்து ஒர்க் பண்ணிட்டேன். இதுல நான் ரொம்ப கிரேஸி ஃபேன் அப்படின்னா அது இர்ஃபான் மேலதான். நான் பன்னிரெண்டு வருஷமா ஃபீல்டுல இருக்கேன். ஆனா, இதுவரை ஒரு தடவை கூட அவரை நேர்ல சந்திச்சதில்லை. அவரை இந்த ரீயூனியனில் சந்திச்சது பெரிய ஃபேன் மொமன்ட்டா இருந்தது.

வேற என்னலாம் அந்த ஷூட்ல நடந்ததுங்கிறதை டிவியில் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க!" எனப் புன்னகைக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism