Published:Updated:

`10 வருஷமா பேசாம இருந்தவங்க எல்லாம் தேடி வந்து பேசினாங்க!' - 'கனா காணும் காலங்கள்'-இர்ஃபான்

இர்ஃபான்

இந்த புரொமோ வந்ததும் பலரும் இன்ஸ்டாகிராமில் என் புரொபைலைத் தேடி இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணியிருந்தாங்க. இத்தனை நாள் கழிச்சு ஆடியன்ஸ் என்னை ஞாபகம் வச்சுருக்கறதே மிகப் பெரிய விஷயம்!

`10 வருஷமா பேசாம இருந்தவங்க எல்லாம் தேடி வந்து பேசினாங்க!' - 'கனா காணும் காலங்கள்'-இர்ஃபான்

இந்த புரொமோ வந்ததும் பலரும் இன்ஸ்டாகிராமில் என் புரொபைலைத் தேடி இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணியிருந்தாங்க. இத்தனை நாள் கழிச்சு ஆடியன்ஸ் என்னை ஞாபகம் வச்சுருக்கறதே மிகப் பெரிய விஷயம்!

Published:Updated:
இர்ஃபான்

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் தொடர்களில் முக்கியமான இடம் 'கனா காணும் காலங்கள்' தொடருக்கும் உண்டு. அந்தத் தொடரில் நடித்த இர்ஃபானுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. சீரியலில் நடித்துக் கொண்டிருந்த இர்ஃபான் பிறகு படங்களில் கவனம் செலுத்தினார். கடந்த மூன்று ஆண்டுகளாக சினிமா, சீரியல் என எதிலும் முகம் காட்டாமல் ஒதுங்கியிருந்த நிலையில் தற்போது விஜய் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் 'கனா காணும் காலங்கள்' வெப் சீரிஸின் மூலம் 9 ஆண்டுகள் கழித்து ரீ- என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவரிடம் பேசினோம்.

இர்ஃபான்
இர்ஃபான்

நிறைய சீரியல் ஆஃபர் வந்துச்சு. நான் வேண்டாம்னு வந்த வாய்ப்புகளை தவிர்த்தேன். `கனா காணும் காலங்கள்' வெப் சீரிஸிற்காக கூப்பிட்டப்போ இந்தத் தொடர் மூலமாகத்தான் என் கரியர் ஆரம்பமாச்சு. அதை எப்படி வேண்டாம்னு சொல்றது என்கிற எண்ணத்தால ஓகே சொல்லிட்டேன். அதுமட்டுமில்லாம இது சீரியல் டைப் கிடையாது. வெப் சீரிஸ் என்பதால் எந்த மறுப்பும் சொல்லாம வாய்ப்பை ஏத்துக்கிட்டேன். `சரவணன் மீனாட்சி' தொடருக்குப் பிறகு கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழிச்சு நடிக்க வந்திருக்கேன்.

இந்த புரொமோ வந்ததும் பலரும் இன்ஸ்டாகிராமில் என் புரொபைலைத் தேடி இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணியிருந்தாங்க. இத்தனை நாள் கழிச்சு ஆடியன்ஸ் என்னை ஞாபகம் வச்சுருக்கறதே மிகப் பெரிய விஷயம்! நான் வர்ற புரொமோ, ஒரே ஒரு சீன் தான் வந்திருக்கு. அடுத்த வாரத்தில் இருந்துதான் நான் வர்ற காட்சிகளே வரப் போகுது ஆனா அதுக்குள்ள இந்த அளவுக்கு அன்பை கொடுப்பாங்கன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல. `கனா காணும் காலங்கள்' வினீத் என கூப்பிட்டுட்டு இருந்தவங்க இப்ப`கனா காணும் காலங்கள்' ஜெர்ரின்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.

இர்ஃபான்
இர்ஃபான்

சீரியலுக்குப் பிறகு, படங்கள் பண்ணினேன். அப்புறம் மூன்று ஆண்டுகளா எதுவும் பண்ணாம ஒதுங்கியிருந்தேன். எல்லாரும் எப்ப மறுபடி நடிப்பீங்கன்னு கேட்டுட்டே இருந்தாங்க. சும்மா ஒருசிலர் கேட்குறாங்கன்னு தான் நினைச்சிருந்தேன். ஆனா, இப்ப தான் உண்மையாகவே எனக்காக எத்தனை பேர் வெயிட் பண்ணியிருக்காங்கன்னு புரிஞ்சிக்க முடியுது. எப்பவும் நான் என்னுடைய பெஸ்டைக் கொடுப்பேன். இந்த வெப் சீரிஸ் டீம்ல இருக்கிற எல்லாருமே பயங்கரமா ஹார்டு ஒர்க் பண்றாங்க. நிச்சயம் உங்க எல்லாருக்கும் இந்த சீரிஸும் பிடிக்கும்.

காலேஜ் முடிச்சதும் சினிமாதான் எல்லாமேன்னு முடிவு பண்ணிட்டுதான் வந்தேன். சினிமா, சீரியல்னு பண்ணினேன். எங்க வீட்ல எனக்கு பன்னிரண்டு வருஷம் வாய்ப்பு கொடுத்தாங்க. ஒரு நேரத்தில் சினிமா வாய்ப்புகள் கம்மியாக ஆரம்பிச்சது. இனி பிசினஸில் கவனம் செலுத்தலாம்னு முடிவெடுத்து தான் மீடியாவில் இருந்து விலகினேன். 'குக்கு வித் கோமாளி' சீசன் 2 -விற்காக கேட்டப்ப பிசினஸ் மீட்னால பாம்பேவில் இருந்தேன். அதனால, அந்த வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன். மீடியா கனவு எப்பவும் உள்ளுக்குள் இருந்துட்டே இருக்கும்.

இர்ஃபான்
இர்ஃபான்

'கனா' மூலமாகவே என் ரீ-என்ட்ரி அமைஞ்சது ரொம்பவே சந்தோஷம். எத்தனை பேருக்கு இது கிடைக்கும்னு தெரியல. நான் படிச்ச ஸ்கூல்ல இப்ப வாத்தியார் ஆகிட்டேன். ஆரம்பத்தில் கொஞ்சம் பதற்றமா இருந்துச்சு. பிறகு, செட் ஆகிடுச்சு. அந்த டைம் சோசியல் மீடியா எதுவும் கிடையாது. எங்க சீரியல் ரீச் ஆகியிருக்கான்னுகூட எங்களுக்கு தெரியாது. எங்க எல்லாரையும் கூப்பிட்டு ஃபேன் மீட் மாதிரி வச்சுருந்தாங்க. அங்க கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் வந்திருந்தாங்க. அப்பதான் இந்த சீரியல் மெகா ஹிட்னு தெரிஞ்சது. இப்ப ஆடியன்ஸ் உடனுக்குடன் இன்ஸ்டாகிராமில் அவங்களுடைய கருத்தை நேரடியா நம்மகிட்ட தெரிவிச்சிடுறாங்க.

எனக்கு பெரிய ஆச்சரியமா இருக்கு. நம்ம நடிக்கும்போது தப்பா இருக்குன்னா அதைத் திருத்திட்டு நடிக்க வாய்ப்பு கிடைக்குது. நம்ம வாத்தியாரை கிண்டல் பண்ணிட்டு இருப்போம்.. இப்ப நாமளே வாத்தியார் ஆகிட்டோம்.. நமக்கு இவ்வளவு வயசாகிடுச்சாடான்னு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கலாய்ச்சி கிண்டல் பண்ணி பேசிட்டு இருக்கிறோம். என் ஃபேமிலியில் எல்லாருக்கும் நான் கம்பேக் கொடுத்தது ரொம்பவே சந்தோஷம். அதிலும் குறிப்பா என் அப்பாவுக்கு பயங்கர ஹாப்பி. பிசினஸையும், நடிப்பையும் பேலன்ஸ் பண்ணி பண்ணுன்னு அட்வைஸ் பண்ணினார் என்றவரிடம் சீரியல் புரொமோ குறித்துக் கேட்டோம்.

இர்ஃபான்
இர்ஃபான்

டிசம்பரில் இந்த ப்ராஜக்ட் கன்ஃபார்ம் பண்ணினேன். கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் இந்த புரொமோவிற்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். என் கேரக்டர் ரொம்ப சூப்பரா எழுதியிருக்காங்க. புதுவித அனுபவமா இருந்துச்சு. அந்த புரொமோ இந்த அளவுக்கு ரீச் ஆகும்னு நிஜமா எதிர்பார்க்கல. அன்னைக்கு மட்டும் சோஷியல் மீடியாவில் ஒரே நாளில் எனக்கு ஆயிரம் மெசேஜ் வந்துச்சு. பத்து வருஷமா என்கிட்ட பேசாம இருந்தவங்க எல்லாம் போன் பண்ணி பேசினாங்க. அடுத்த வாரம் என் எபிசோட் வரும். அதுவும் எல்லாருக்கும் பிடிக்கும்னு நம்புறேன் என்றவரிடம் தொடர்ந்து மீடியாவில் உங்களை எதிர்பார்க்கலாமா எனக் கேட்டதும்,

நிச்சயமா.. சீரியலில் நடிப்பேனான்னு தெரியல.. ஆனா, தொடர்ந்து ஓடிடியில் எது கிடைச்சாலும் பண்ணலாம் என்கிற ஐடியாவில் இருக்கேன். தவிர, 'குக்கு வித் கோமாளி' வாய்ப்பு மறுபடி கிடைச்சா நிச்சயம் மிஸ் பண்ணாம கலந்துப்பேன்!' என்றார்.