விஜய் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் `கனா காணும் காலங்கள்' வெப் சீரிஸில் அபி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தீபிகாவும், கெளதம் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ராஜ வெற்றி பிரபுவும் காதலித்து வருவதாக சமூகவலைதள பக்கங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வந்தன.
இந்நிலையில் தீபிகா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் காதலிப்பதை உறுதி செய்து பதிவொன்றை பதிவிட்டிருக்கிறார். அதில்,
`எங்களிடையே எப்போதும் நிலைத்திருக்கும் ஒன்று `நட்பு'. `நண்பனே எனக்கு காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ' என்பதை இப்போது உணர்கிறேன். ஆம், உங்களுடைய தீபிகாவிற்கும், ராஜ வெற்றி பிரபுவுக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டுவிட்டது. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம்.
எங்கள் காதல் கதை இப்படி அழகாக எழுதப்படும் என கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. பிரபஞ்சம் சரியான நேரத்தில் எங்களை ஆசீர்வதித்து, ஒன்று சேர்த்தது என்று நாங்கள் முழு மனதுடன் நம்புகிறோம்!

உங்களுடைய அன்புக்கும், ஆதரவிற்கும் நாங்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். எங்களுடைய பயணத்தின் முக்கிய அங்கமாக நீங்கள் இருப்பதற்கு எங்களுடைய நன்றி! அடுத்த நான்கு நாட்களுக்கு என்ன நடக்க இருக்கிறது என்பதை அறிய நீங்களும் ஆவலுடன் காத்திருக்கிறீர்களா?" என குறிப்பிட்டிருக்கிறார்.
ராஜ வெற்றி பிரபு இதே பதிவுடன், `தேன்மொழி பூங்கொடி மைண்டு ஃபுல்லா நீயடி.. வான்மதி பைங்கிளி தோழி இப்போ காதலி!' என்கிற பாடல் வரியை குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த மாதமே இவர்களுடைய திருமணம் நடக்க இருக்கிறது. இவர்களுடைய பதிவிற்கு பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.