Published:Updated:

`இன்விடேஷன் கொடுக்க கால் பண்ணா, எல்லோரும் ஒரே பதிலைச் சொல்றாங்க!’- நெகிழும் `கல்லூரியின் கதை’ வெற்றி

வெற்றி , சுஷ்மா, கவின்

`கனா காணும் காலங்கள் -2' சீரியலில் நடித்த பெரும்பாலானோர் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டு ஒரு சின்ன ரி-யூனியன் நிகழ்வாக மாற்றிவிட்டனர்.

`இன்விடேஷன் கொடுக்க கால் பண்ணா, எல்லோரும் ஒரே பதிலைச் சொல்றாங்க!’- நெகிழும் `கல்லூரியின் கதை’ வெற்றி

`கனா காணும் காலங்கள் -2' சீரியலில் நடித்த பெரும்பாலானோர் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டு ஒரு சின்ன ரி-யூனியன் நிகழ்வாக மாற்றிவிட்டனர்.

Published:Updated:
வெற்றி , சுஷ்மா, கவின்

`கனா காணும் காலங்கள்', `கல்லூரியின் கதை', `சரவணன் மீனாட்சி' உள்ளிட்ட சீரியல்களின் மூலம் பிரபலமானவர் வெற்றி (எ) பிரேம் குமார். இவரின் திருமணம் கடந்தவாரம் சென்னையில் நடந்து முடிந்தது.

`வெற்றி, சுஷ்மா
`வெற்றி, சுஷ்மா

`கனா காணும் காலங்கள் -2' சீரியலில் நடித்த பெரும்பாலானோர் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டு ஒரு சின்ன ரி-யூனியன் நிகழ்வாகவே மாற்றிவிட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருமணம் குறித்துப் பேசிய வெற்றி, ``நான் இப்போ தியேட்டர் ஆர்டிஸ்ட். திரைப்படங்களிலும் நடிச்சிட்டு இருக்கேன். என் மனைவி சுஷ்மா பப்ளிக் ரிலேஷன்ஸ் துறையில் இருக்காங்க. காதல் திருமணம்தான். நான் சின்னத்திரையை விட்டுட்டு நாடகக் கலைக்கு வந்துவிட்டேன். என் குடும்பம் இப்போவரைக்கும் என்னுடைய முடிவுகளுக்கு குறுக்கே நிற்கவில்லை.

திருமணப் பேச்சு வந்தபோது, சுஷ்மா வீட்ல என்னைப் பத்தி விசாரித்தபோது என் குடும்பம் தரப்பில், நான் நாடகக் கலைஞனா இருக்கேன்னு சொன்னாங்க. ஆரம்பத்தில் கொஞ்சம் யோசிச்சாலும், பிறகு ஒப்புக்கிட்டாங்க. எந்த பிரச்னையும் இல்லாம திருமணம் நடந்து முடிஞ்சிருக்கு.’’

வெற்றி
வெற்றி

திருமண வரவேற்பு நிகழ்வில் பாரம்பர்ய கலைஞர்கள் தப்பாட்டம் மற்றும் தேவராட்டம் ஆடி வந்திருந்தவங்களை அசர வெச்சிட்டாங்க. எந்த மேற்கத்திய இசையும் இல்லாம முழுக்க முழுக்க பாரம்பர்ய இசையோட என் திருமண நிகழ்ச்சி நடந்ததில் எனக்குப் பெருமிதமா இருக்கு’’ என நெகிழ்ந்தவர்,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``கனா காணும் காலங்கள், கல்லூரியின் கதை ஆகிய சீரியல்களில் என்கூட நடிச்ச பலரும் திருமணத்துக்கு வந்திருந்தாங்க. நான் சில வருடங்களா நாடகக் கலை மீது கவனம் செலுத்தியதால என்கூட சீரியலில் நடிச்சவங்ககூட தொடர்பில இல்லாம இருந்தேன். என் திருமணத் தேதி முடிவானதும் அவங்க எல்லாரையும் திருமணத்துக்கு கூப்பிடணும்னு முடிவு பண்ணினேன். நேர்ல வந்து பத்திரிகை கொடுக்கிறதுக்காக, அவங்களுக்குக் கால் பண்ணி அட்ரஸ் கேட்டேன். எல்லாரும் சொல்லி வெச்ச மாதிரி ஒரே பதிலை சொன்னாங்க.

கனா காணும் காலங்கள் டீமுடன் வெற்றி
கனா காணும் காலங்கள் டீமுடன் வெற்றி

```பத்திரிகைய வேஸ்ட் பண்ணாத. நீ சொன்னதே போதும், நாங்க ஓடி வந்திருவோம். சும்மா மீட் பண்ண வேணும்னா நேர்ல வா, பத்திரிகைலாம் கொடுக்க வேணாம்’னு சொல்லிட்டாங்க. இவ்வளவு நாள் பேசாம இருந்தாலும், விட்டுப்போன அதே இடத்தில் நட்பு தொடர்வது அழகான விஷயம். உண்மையில் இவங்க எல்லாரும் சேர்ந்து என்னை நெகிழவெச்சிட்டாங்க. என் திருமண நிகழ்வு இசையோடும் அன்போடும் நிறைவா நடந்து முடிந்தது’’ என்றார் உற்சாகக் குரலில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism