Published:Updated:

"என்னால ஜால்ரா அடிக்க முடியாது!" - சீரியல் விலகல் குறித்து 'கனா' ராகவேந்திரன்

'கனா' ராகவேந்திரன்

'கனா காணும் காலங்கள்' சீரியலில் புலி கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர், ராகவேந்திரன். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'காற்றுக்கென்ன வேலி' தொடரில் நடித்துக் கொண்டிருந்தவர், அந்தத் தொடரில் இருந்து விலகுவதாகவும், மீடியாவை விட்டு விலகப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

"என்னால ஜால்ரா அடிக்க முடியாது!" - சீரியல் விலகல் குறித்து 'கனா' ராகவேந்திரன்

'கனா காணும் காலங்கள்' சீரியலில் புலி கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர், ராகவேந்திரன். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'காற்றுக்கென்ன வேலி' தொடரில் நடித்துக் கொண்டிருந்தவர், அந்தத் தொடரில் இருந்து விலகுவதாகவும், மீடியாவை விட்டு விலகப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

Published:Updated:
'கனா' ராகவேந்திரன்

'கனா காணும் காலங்கள்' சீரியலில் புலி கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர், ராகவேந்திரன். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'காற்றுக்கென்ன வேலி' தொடரில் நடித்துக் கொண்டிருந்தவர், அந்தத் தொடரில் இருந்து விலகுவதாகவும், மீடியாவை விட்டு விலகப் போவதாகவும் அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவரை சந்தித்து பேசிய போது,

'கனா' ராகவேந்திரன்
'கனா' ராகவேந்திரன்

'15 வருஷமா மீடியா துறையில் இருக்கிறேன். ஆரம்பத்தில் ஹீரோவுக்கு ஃப்ரெண்டா நடிச்சேன். இப்பவரைக்கும் அப்படித்தான் நடிச்சிட்டு இருக்கேன். யாரும் எனக்கு வாய்ப்பு கொடுக்க ரெடியா இல்லை. என்னால ஜால்ரா அடிக்க முடியாது அதுவும் எனக்கு வாய்ப்பு கிடைக்காம போனதுக்கு ஒரு காரணம்னு நினைக்கிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இத்தனை வருஷம் எனக்காக என் அம்மா, அப்பா கஷ்டப்பட்டாங்க. இன்னமும் அவங்களை கஷ்டப்படுத்த நான் விரும்பலை.. பதினைந்து நாள் ஷூட்டிங் ஸ்பார்ட்டிற்கு போவேன். ஆனா, ரெண்டு அல்லது மூணு நாள் மட்டும்தான் சீனிலேயே நான் இருந்திருப்பேன். அதுவும் சில நேரங்களில் பிரேமை நிரப்புற ஒரு பொருளாகவே இருந்திருக்கேன். சீரியலுக்காக கூப்பிடும்போது நீங்க தாங்க எல்லாமேன்னு சொல்லுவாங்க. ஆனா, போக போக தான் நம்ம கேரக்டரோட லட்சணம் தெரியும்.

'கனா' ராகவேந்திரன்
'கனா' ராகவேந்திரன்

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு மாச சம்பளமா ஆறாயிரம் ரூபாய் வாங்கினேங்க. கொஞ்சம் யோசிச்சு பாருங்க அதை வச்சு எப்படி என் குடும்பத்தை நடத்துறது? இத்தனை வருசம் என் அம்மா, அப்பா என்னோட கனவுக்காக முழு சுதந்திரம் கொடுத்தாங்க. ஆனா, திருப்பி நான் அவங்களுக்கு இத்தனை வருஷம் எதுவுமே கொடுக்கலைங்கிறது எனக்கு எவ்வளவு பெரிய மன அழுத்தத்தை கொடுத்திருக்கும்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு நாளைக்கு 3500 ரூபாய்தான் என்னுடைய சம்பளம். பிச்சைக்காரன் கூட என்னை விட அதிகமா சம்பாதிப்பான். ஜிபி முத்துன்னு ஒருத்தர் வீடியோவில் கெட்ட வார்த்தை பேசியே பிரபலமாகிட்டார். இன்னைக்கு யார்னாலும், எப்போனாலும் பிரபலமாகலாம்.

'கனா' ராகவேந்திரன்
'கனா' ராகவேந்திரன்

சீரியலில் என்ன கதை எழுதுறாங்க.. 7 மணிக்கு ஒரு சேனலில் பார்க்கிற சீரியலுடைய கதையை அப்படியே 8 மணிக்கு வேற ஒரு சீரியலிலும் பார்க்கலாம். இன்னமும் சிவாஜி காலத்து வசனங்களையே எழுதிட்டு இருக்காங்க. என்னை பொறுத்தவரை சப்போர்ட்டிங் ரோலில் நடிக்கிறவங்க எல்லாரும் ரொம்ப பாவங்க. சம்பளமும் கிடையாது.. சரி, நல்ல கேரக்டரில் நடிச்சிருக்கோம் என்கிற மனநிம்மதியும் கிடையாது. துணை நடிகர்களா நடிக்கிற பலருடைய குமுறல்கள் இதெல்லாம்!

'மாறன்' என்கிற கதாபாத்திரத்தில் காற்றுக்கென்ன வேலி தொடரில் ஃபிரெண்ட் கேரக்டர் பண்ணிட்டு இருந்தேன். அந்த கேரக்டருடைய டிராக் மாறுதுன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சு. அந்த கேரக்டர் இருந்தாலும், இல்லைன்னாலும் அது எந்த வகையிலும் சீரியலை பாதிக்காது. அதனால, எப்பனாலும் என்னை தூக்கிடலாம் என்பது எனக்கு தெரிஞ்சிடுச்சு. அதுதவிர, பொருளாதார ரீதியா ரொம்பவே கஷ்டமா இருக்கு. இன்னமும் நடிக்கணும் என்கிற என்னோட கனவை மட்டுமே நம்பிட்டு இருந்தா எதுவுமே பண்ண முடியாதுன்னு தெரிஞ்சிடுச்சு. அதனால தான் சீரியலில் இருந்து விலகிட்டேன். இனி மீடியாவே வேண்டாம் என நான் எடுத்த முடிவை நைட் 2 மணிக்கு என்னோட அம்மாகிட்ட சொன்னேன். ஆசையா ஒரு துறைக்குள் வர்றோம். வாய்ப்புக்காக போராடுறோம். இத்தனை வருஷத்துல திரும்பி பார்க்கும்போது நான் எங்கே என் பயணத்தை ஆரம்பிச்சேனோ அங்கேயே நிற்கிறேன்னா அது எவ்வளவு பெரிய வலியை கொடுக்கும்னு யோசிச்சு பாருங்க...

'கனா' ராகவேந்திரன்
'கனா' ராகவேந்திரன்

லீட் ரோலில் நடிக்கணும்னு எனக்கு ஆசை. என்னால நடிக்க முடியும்.. ஆனா, எனக்கு வாய்ப்பு கொடுக்க யாரும் தயாரா இல்லை!' என்றார்.

இன்னும் பல விஷயங்களை நேரடியாகவும், வெளிப்படையாகவும் ராகவேந்திரன் நம்மிடையே பகிர்ந்திருந்தார். முழு வீடியோ பேட்டியை காண லிங்கை கிளிக் செய்யவும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism