Published:Updated:

"புதுசா நடிக்க ஆசைப்படுறவங்க சிலர் இந்த மாதிரி ஆட்கள்கிட்ட ஏமாந்துடாதீங்க" - `கயல்' அபி நவ்யா

அபி நவ்யா
News
அபி நவ்யா

லீட் ரோலுக்கான சீரியல் ஆடிஷனுக்கு போனப்போ என்கிட்ட நேரடியாக முகத்துக்கு நேரா அட்ஜஸ்மென்ட் பண்ண சொல்லிக் கேட்டிருக்காங்க. இதுவரைக்கும் கிட்டத்தட்ட 250 ஆடிஷனுக்கு போயிருப்பேன். பல இடங்களில் அப்படியான விஷயத்தை நேரடியாகவே கேட்டிருக்கேன்.

நியூஸ் ஆங்கராக நம்மிடையே பரிச்சயமானவர், அபி நவ்யா. தற்போது, சன்டிவியில் ஒளிபரப்பாகும் 'கயல்' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனந்த விகடன் ஆங்கர் டு ஆக்டர் பகுதிக்காக அவரைச் சந்தித்தோம். அப்போது பேசியதிலிருந்து,

அபி நவ்யா
அபி நவ்யா

நியூஸ் ஆங்கராக இருக்கும் போதுதான் எனக்கு சன் டிவியில் 'பிரியமானவள்' தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அந்த சீரியலில் நடிச்ச பிறகு தொடர்ந்து சீரியல் வாய்ப்புகள் வர இப்ப நியூஸ் ஆங்கர், சீரியல் ஆர்ட்டிஸ்ட்னு ரெண்டையும் பேலன்ஸ் பண்ணிட்டு இருக்கேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பொதுவா, சீரியலுக்குள் நடிக்கணும்னு வர்றவங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது சீரியலில் இருக்கணும். அப்படி இல்லைன்னா நீச்சல் அடிச்சு வர்றது ரொம்பவே கஷ்டம். லீட் ரோலுக்கான சீரியல் ஆடிஷனுக்கு போனப்போ என்கிட்ட நேரடியாக முகத்துக்கு நேரா அட்ஜஸ்மென்ட் பண்ணச் சொல்லிக் கேட்டிருக்காங்க. இதுவரைக்கும் கிட்டத்தட்ட 250 ஆடிஷனுக்கு போயிருப்பேன். பல இடங்களில் அப்படியான விஷயத்தை நேரடியாகவே கேட்டிருக்கேன்.

அபி நவ்யா
அபி நவ்யா

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் காஸ்டிங் டைரக்டர்னு சொல்லி ஒருத்தர் எனக்கு மெசேஜ் அனுப்பினார். என்னுடைய அங்க அடையாளத்தை துல்லியமாக அந்த நபர் கேட்கிறார். அந்த நபரிடம் `செருப்பால அடிப்பேன்னு' சொல்லவும் ஓடிட்டான். அக்கவுண்ட் செக் பண்ணும்போது போலி அக்கவுண்ட் என தெரிஞ்சது. புதுசா நடிக்க ஆசைப்படுறவங்க சிலர் இந்த மாதிரி ஆட்கள்கிட்ட ஏமாந்துடாதீங்க.. நம்மளுடைய புகைப்படத்துடன் கூடிய புரொபைல் கேட்பாங்களே தவிர வேற எதுவும் கேட்க மாட்டாங்க. இப்படியும் பல பெண்கள் ஏமாந்துடுறாங்க. இந்த மாதிரியான ஆட்களிடம் எச்சரிக்கையா இருக்கணும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்னும் எத்தனை மீ டூ புகார் வந்தாலும் இந்த மாதிரியான ஆட்களை திருத்தவே முடியாதுங்க.. பெண்கள்தான் இந்த மாதிரியான ஆட்களிடம் ஜாக்கிரதையாக இருக்கணும்! என்றார்.

அபி நவ்யா
அபி நவ்யா

இது தவிர, பர்சனல் விஷயங்கள் பலவற்றை அபி நவ்யா இன்றைய ஆனந்த விகடன் (13.01.2022) பகுதியில் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.