Published:Updated:

விஜய் டிவியின் `சூப்பர் சண்டே'யில் இன்று அம்மன் திருவிழா... என்ன ஸ்பெஷல்?

அம்மன் திருவிழா
அம்மன் திருவிழா

நவராத்திரிக்கு முன்னோட்டமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது ‘அம்மன் திருவிழா’ நிகழ்ச்சி.

ஒருவழியாக லாக்டௌன் தளர்த்தப்பட்டு, சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களின் ஷூட்டிங்குகள் தொடங்கப்பட்டாலும், சேனல்களில் வார இறுதி நிகழ்ச்சிகளில் பழைய விறுவிறுப்பு இன்னும் வரவில்லை.

எனவே சேனல்கள் ஒவ்வொன்றும் புதுப்புது உத்திகளைக் கையாண்டு பலவிதமான நிகழ்ச்சிகளை வழங்கி வார இறுதி ஸ்லாட்டுகளைத் தங்களுடையதாக்க முயன்று வருகின்றன.

அம்மன் திருவிழா
அம்மன் திருவிழா

அந்த வகையில் விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமை மதியப் பொழுதை ‘சூப்பர் சண்டே’ என்கிற பெயரில் சிறப்பு நிகழ்ச்சியாக வழங்கி வருகிறது. கடந்த வாரம் ‘ஸ்டார் ஜோடிகள்’ என விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வரும் ஜோடிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த வாரம் அதாவது இன்று பிற்பகல் 2.30க்கு ’சூப்பர் சண்டே’யில் ‘அம்மன் திருவிழா’ என்ற ஷோ ஒளிபரப்பாகிறது.

"ஆடி மாதம் முடிஞ்சிட்டுச்சில்ல'’ என்றால், "நவராத்திரி வருதில்லையா, அதுக்கான முன்னோட்டமாத்தான் இந்த நிகழ்ச்சி" என்கிறார்கள்

அம்மனாக ‘சரவணன் மீனாட்சி’ ரச்சிதா வருகிறார்.

``விஜய் சார் ஷூட்டிங்ல பேசாமலே இருந்தா எப்படி நடிக்கமுடியும்?!'' - சரண்யா மோகன்

இவருடன் ‘குக் வித் கோமாளி’, ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிகளின் போட்டியாளர்கள் திரளாகக் கலந்துகொள்ள இருக்கிறார்கள். நாட்டுப்புற இசையில் மாரியம்மன் பாடல்களுக்கு ஆர்ட்டிஸ்ட்டுகளின் அசத்தலான நடனங்கள் இடம்பெற உள்ளன.

அடுத்த கட்டுரைக்கு