Published:Updated:

மீண்டும் `கோலங்கள்... கோலங்கள்...', வீசப் போகும் `தென்றல்' - சீரியல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

கோலங்கள்

'கோலங்கள்', 'தென்றல்' - இன்றைய டிஜிட்டல் தலைமுறைக்கு டபுள் ட்ரீட்டாக இந்த இரண்டு சீரியல்களும் இப்போது மறு ஒளிபரப்பாக இருக்கின்றன.

மீண்டும் `கோலங்கள்... கோலங்கள்...', வீசப் போகும் `தென்றல்' - சீரியல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

'கோலங்கள்', 'தென்றல்' - இன்றைய டிஜிட்டல் தலைமுறைக்கு டபுள் ட்ரீட்டாக இந்த இரண்டு சீரியல்களும் இப்போது மறு ஒளிபரப்பாக இருக்கின்றன.

Published:Updated:
கோலங்கள்
`கோலங்கள்... கோலங்கள்’ என்கிற அந்த டைட்டில் சாங் கேட்காத தமிழ் வீடுகளே இல்லை என்கிற ஒரு சூழல் இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்தது. பிரைம் டைமில் ஒளிபரப்பான விகடன் ஒளித்திரையின் `கோலங்கள்’ தொடருக்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு அத்தகையது.

சினிமாவில் முன்னணிக் கதாநாயகியாக ரவுண்ட் வந்த நடிகை தேவயாணிக்கு சின்னத்திரையிலும் தனி ரசிகர் கூட்டம் இந்த சீரியலில் இருந்துதான் கிடைத்தது. இன்று வரை தேவயாணியைப் பொதுவெளியில் பார்க்கிற பத்து பேரில் நான்கு பேராவது ‘அபி’ என்ற அவரது அந்தக் கேரக்டர் பெயரை உச்சரிக்காமல் நகர மாட்டார்கள்.

கோலங்கள்
கோலங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரசிகர்கள் மத்தியில் இந்தத் தொடருக்குக் கிடைத்த வரவேற்பின் எதிரொலியாக தொடரில் நடித்த நடிகர் நடிகைகளும் புகழடைந்தனர். தேவயாணிக்கு சிறந்த நடிகை விருது, நடிகை தீபா வெங்கட்டுக்கு ’சிறந்த தோழி’க்கான விருது, அஜய்க்கு சிறந்த வில்லன் விருது என இந்த சீரியல் அள்ளிக் குவித்த விருதுகளும் நிறைய.

இத்தகையை வீச்சையும் ரீச்சையும் கொடுத்த ‘கோலங்கள்’ சீரியல் மீண்டும் உங்கள் வீடுகளுக்கு வரப் போகிறது.

வரும் மே 16-ம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது `கோலங்கள்’.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
`கோலங்க’ளைத் தொடர்ந்து அடுத்த சர்ப்ரைஸ் `தென்றல்’ தொடர். ஆம், மே 16 முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது விகடன் ஒளித்திரையின் இன்னொரு மெகா ஹிட்டான `தென்றல்' சீரியலும்.

ஸ்ருதி ராஜ், தீபக், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்த இந்த சீரியல் 1300 எபிசோடுகள் கடந்து ஒளிபரப்பானது நினைவிருக்கலாம்.

தென்றல்
தென்றல்

அப்போதே இணையத்தில் வைரலான தொடர். பெண்கள், வயதானவர்கள் என்பதைத் தாண்டி இளைஞர்களையும் வெகுவாகக் கவர்ந்த சீரியல் என்றாலும் மிகையில்லை.

அன்று தவறவிட்டவர்களுக்கு மட்டுமல்ல, இன்றைய டிஜிட்டல் தலைமுறைக்கும் சேர்த்தே டபுள் ட்ரீட்டாக இந்த இரண்டு சீரியல்களும் இப்போது மறு ஒளிபரப்பாக இருக்கின்றன. பார்த்து ரசிக்கத் தயாராகிட்டீங்கதானே?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism