Published:Updated:

``ஷுட்டிங்ல அதுக்கு நான் சரிப்பட மாட்டேனாம்... அதான் லவ் பண்லாம்னு இருக்கேன்!" -  KPY அஞ்சலி

பிரபாகரன், அஞ்சலி
பிரபாகரன், அஞ்சலி

தேன்மொழி சீரியலில் பள்ளி மாணவியாகத் துறுதுறுவென சுட்டித்தனம் செய்துகொண்டிருந்த அஞ்சலியைத் திடீரென சீரியலில் காணவில்லை.

`தேன்மொழி' சீரியலில் பள்ளி மாணவியாகத் துறுதுறுவென சுட்டித்தனம் செய்துகொண்டிருந்த அஞ்சலி, திடீரென சீரியல் பக்கம் வரமால் இருந்தார். என்ன நடந்தது என அவரையே தொடர்புகொண்டு கேட்டோம்.

அஞ்சலி
அஞ்சலி

``நான் சென்னைப் பொண்ணு. பி.காம் முடிச்சிட்டு சி.ஏ படிச்சிட்டிருந்தேன். ஆனா, பாதியிலே நிறுத்திட்டேன். நிறைய படிக்க வேண்டியிருக்கு. ஈசியா இருக்கும்னு நினைச்சு சேர்ந்துட்டேன். ஆனா படிக்க முடியலை. இதெல்லாம் நமக்கு செட் ஆகாதுனு சி.ஏ படிக்கிறதை விட்டுட்டு சின்னத்திரைக்கு வந்துட்டேன். கூடிய சீக்கிரமே வெள்ளித்திரையிலும் என்னைப் பார்க்கலாம்."

``சன் லைஃப்ல மசாலா கஃபே நிகழ்ச்சியிலதான் நான் முதன்முதலா காமெடி கான்செப்ட் பண்ணேன். அங்கதான் என்னுடைய கணவர் பிரபாகரனையும் சந்திச்சேன். விஜய் சேதுபதி வாய்ஸ் பேசி பர்ஃபார்ம் பண்ணிட்டிருந்தார். அந்த வாய்ஸ் எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போய்... `நீங்க, விஜய் சேதுபதி வாய்ஸ் சூப்பரா பேசுறீங்க'னு நேராவே போய் சொல்லிட்டேன். அதுக்கப்புறம் மூணு மாசம் கழிச்சி, ரெண்டு பேரும் ஒரு நிகழ்ச்சி சேர்ந்து பண்ணவேண்டியிருந்தது. அதுக்கப்புறம் நண்பர்களாகி, காதலர்களாகி, இப்போ கல்யாணமும் பண்ணிக்கிட்டோம்."

பிரபாகரன், அஞ்சலி
பிரபாகரன், அஞ்சலி

``என்னைப் பார்க்கிறப்போவே பிரபாவுக்கு பிடிச்சிப் போயிடுச்சு. இதை ரொம்ப நாள் கழிச்சுதான் என்கிட்ட சொன்னார். அதுக்குப் பிறகு, நாங்க லவ் பண்றது வீட்டுக்குத் தெரியவந்து, பெரிய பிரச்னையாகிடுச்சு. எங்க வீட்டுல ரொம்ப ஸ்ட்ரிக்ட். `நீ அவன்கூடவே போயிடு'னு வீட்டை விட்டு அனுப்பிட்டாங்க. நானும் வைராக்கியத்தோட அவர்கூட கிளம்பி வந்துட்டேன். அவங்க வீட்டு சம்மதத்தோட, போன ஜூன்லதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ரொம்ப வேகமா எல்லாமே நடந்து முடிஞ்சிடுச்சு."

``சன் லைஃப் மசாலா கஃபே நிகழ்ச்சி முடியுற நேரத்துல `கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியை அறிவிச்சாங்க. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பர்ஃபார்ம் பண்ணவேண்டிய சூழல் ஏற்பட்டது. ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி நல்லா இருந்ததால சீசன் முழுக்கவே சேர்ந்து பர்ஃபார்ம் பண்ணோம். கமென்ட்டும் பாசிட்டிவ்வா வந்தது. ஸ்க்ரிப்ட்ல நிறைய ஐடியாஸ் கொண்டு வர்றதுக்கு பிரபா எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணுவார்."

அஞ்சலி
அஞ்சலி

``ரெண்டு பேருமே ஜாலி டைப்தான். இருந்தாலும் நிறைய சண்டைகள் வரும். பெரும்பாலும் அவர்தான் என்னைச் சமாதானம் செய்வார். சண்டை வர்ற சமயம்லாம் சோஷில் மீடியாவுல சேர்ந்து எடுத்துக்கிட்ட போட்டோக்களை டெலீட் பண்ணிடுவோம். இப்போகூட பிரபா என்னை வெறுப்பேத்த, ஃபேஸ்புக்ல சிங்கிள்னு ஸ்டேட்டஸ் போட்டிருக்கார். இப்படி நிறைய சேட்டைகள் பண்ணுவோம். எங்க வீட்டுலேயும் எங்களை மன்னிச்சு ஏத்துக்கிட்டாங்க."

`` 'தேன்மொழி சீரியல் வாய்ப்பு வந்தப்போ, ஜாக்குலின் நயன்தாராகூட நடிச்சிட்டிருந்தா. ஹீரோயின் ஆகிட்டா என்னைக் கண்டுக்க மாட்டானு பயந்தேன். ஆனா, அவ கொஞ்சம்கூட ஆட்டிட்யூட் காட்டலை. `தேன்மொழி' செட்டே ரொம்பக் கலகலனு இருக்கும். அந்த சீரியலுக்காக ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டு நடிச்சிட்டிருந்தேன். என்னைப் பார்த்து பிரபா ஷாக் ஆகிட்டார். `உண்மையைச் சொல்லு. உனக்கு இப்போ என்ன வயசு'னு கலாய்ச்சிட்டிருந்தார்."

அஞ்சலி
அஞ்சலி

``அந்த சீரியல்ல என்னுடைய கேரக்டரைக் கொஞ்சம் வித்தியாசமா எடுத்துட்டுப் போறாங்க. அதுக்கு நான் செட்டாக மாட்டேன்னு, எனக்குப் பதில் இன்னொரு நடிகையை கமிட் பண்ணியிருக்காங்க. நான் ரொம்ப சின்னப் பொண்ணு மாதிரி தெரியிறேனாம். அந்த சீக்வென்ஸுக்கு லவ் போர்ஷன் வைக்கப்போறாங்க. என் முகத்துல மெச்சூரிட்டி இல்லையாம் அப்போ என்கிட்ட கேடாங்க, நானும் ஓகே சொல்லிட்டேன்."

அஞ்சலி
அஞ்சலி

``லைஃப்ல அடுத்தகட்ட வாய்ப்புகளை நோக்கி பயணிக்கிறேன். ஜாக்குலின்தான் என்னை ரொம்ப மிஸ் பண்ணுவா. நானும் அவளை மிஸ் பண்றேன். அடுத்ததா ஒரு படத்துல கமிட் ஆகியிருக்கேன். பிப்ரவரி மாசம் ஷூட் ஆரம்பிக்குது. அதுவரை நாங்க ஜாலியா லவ் பண்ணலாம்னு இருக்கோம்."

`` 'ஏன் இவ்ளோ சின்ன வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க'ன்னு சிலர் கேட்கிறாங்க. நாங்களே இதை நிறைய முறை யோசிச்சு வருத்தப்பட்டிருக்கோம்."

அஞ்சலி
அஞ்சலி
``அஜித், பக்கத்துல உட்கார்ந்து பேசுவார்... விஜய்கூட பேச அம்புட்டு ஆசை!’’ - சீனி பாட்டி

``பொறுப்பில்லாம, வாழ்க்கையோட சீரியஸ்னஸ் தெரியாம வாழ்ந்துட்டு இருந்த எங்களுக்கு, இந்தத் திருமணம் பொறுப்பா இருக்க கத்துக்கொடுத்திருக்கு. செலவுகளைக் குறைச்சுக்கிட்டு எதிர்காலத்துக்கு சேர்த்துவைக்கத் தொடங்கியிருக்கோம். லவ், எங்க வாழ்க்கையை அழகாக்கியிருக்கு’’ என்றார் உற்சாகத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு