சினிமா
Published:Updated:

விகடன் TV: சீரியல் ஹீரோ என்றாலே டம்மிதானா?.

கார்த்திக்
பிரீமியம் ஸ்டோரி
News
கார்த்திக்

‘சீரியலில் தனக்கு முக்கியத்துவம் குறைந்ததாகக் கருதியே வெளியேறினார்’

ஜீ தமிழ் சேனலில் சுமார் 800 எபிசோடுகளைத் தாண்டி ஒளிபரப்பாகி வரும் பிரைம் டைம் சீரியலான ’செம்பருத்தி’ தொடரிலிருந்து ஹீரோ கார்த்திக் வெளியேறியிருக்கிறார்.

சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்ற தொடரிலிருந்து வெளியேறியதற்கான காரணம் குறித்து கார்த்திக் எதுவும் சொல்லாத நிலையில், அவருக்கு நெருக்கமான சிலர் சொன்ன தகவல், ‘சீரியலில் தனக்கு முக்கியத்துவம் குறைந்ததாகக் கருதியே வெளியேறினார்’ என்பதே.

விகடன் TV: சீரியல் ஹீரோ என்றாலே டம்மிதானா?.

`சீரியல்களில் ஹீரோக்களை விட ஹீரோயினுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது’ என்பது சீரியல் தொடங்கிய காலம்தொட்டே இருந்து வருகிற பேச்சுதான்.

விகடன் TV: சீரியல் ஹீரோ என்றாலே டம்மிதானா?.

‘சீரியல் பார்க்கிறவர்களைக் கணக்கெடுத்தால் ஆண்களை விடப் பெண்களே அதிகம் இருப்பார்கள்; அப்படி இருக்கும் போது சீரியல்களின் கதை அவர்களை மையப்படுத்தித்தானே இருக்கும்’ என்கிற சீரியல் விமர்சகர்கள், ‘கதையும் அதைக் கொண்டு போகிற விதமும்தான் ஒரு சீரியலின் வெற்றியைத் தீர்மானிக்கிறது’ என்கிறார்கள்.

விகடன் TV: சீரியல் ஹீரோ என்றாலே டம்மிதானா?.

ஜீ தமிழ் சேனலைப் பொறுத்தவரை சீரியல் நன்கு ஒளிபரப்பாகி வரும் வேளையில் வெளியேறுகிற இரண்டாவது ஹீரோ கார்த்திக். ஏற்கெனவே சில வருடங்களுக்கு முன் `யாரடி நீ மோகினி’ தொடரிலிருந்து சஞ்சீவ் வெளியில் போனார். அவருமேகூட `முக்கியத்துவம் குறைந்ததாகக் கருதியே வெளியேறினார்’ என்றார்கள். ‘‘சீரியல்கள்ல இருந்து நடிகர்கள் வெளியேறுவதற்கான காரணம் இதுதான்னா, அதனால பாதிக்கப்படறது சம்பந்தப்பட்டவங்கதான். ஏன்னா, சீரியல்ங்கிறது சினிமா இல்ல. சினிமா நடிகர்களைக் கொண்டாடுகிற மாதிரி டிவி ஹீரோக்கள் கொண்டாடப் படுறாங்களா? அப்படி இருக்கறப்ப கிடைக்கிற வாய்ப்பைத் தவற விடாம இருக்கறதுதான் புத்திசாலித்தனம். ‘யாரடி நீ மோகினி’ தொடரையே எடுத்துக்கலாம். 300 எபிசோடு கடந்த நிலையில சஞ்சீவ் வெளியேறினார். பதிலுக்கு வேற ஹீரோ கமிட் ஆகி இதோ 1000 எபிசோடைத் தாண்டி ஒளிபரப்பாகிட்டுதானே இருக்கு?’’ என்கிறார் டிவியில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கும் சீனியர் நடிகர் ஒருவர்.

விகடன் TV: சீரியல் ஹீரோ என்றாலே டம்மிதானா?.

சீரியல் ஹீரோக்களின் மனநிலையை அவர்களிடமே கேட்கலாமென `சந்திரலேகா’ அருணிடம் பேசினேன். ‘`சீரியல்ங்கிறது பெண்களை மையப்படுத்தியதுதான். அதோட ஆடியன்ஸ் யாருங்கிறதைப் பொறுத்துதானே அதோட மேக்கிங் இருக்கும். அதேநேரம் ஆண்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவமும் கிடைக்குதுங்கிறதுதான் என் கருத்து. ஒரு பெண்ணைக் காட்டினா அவளோட அப்பா, அண்ணன், கணவர்னு யாராவது ஒரு ஆணைக் காட்டறப்பதான் ஒரு குடும்பப் பின்னணி கிடைக்கும். அப்படித்தான் காட்டிட்டு வர்றாங்க’’ என்றவர், ‘‘வருஷக் கணக்குல ஒரு சீரியல்ல நடிச்சுட்டு திடீர்னு வெளியேறி, `முக்கியத்துவம் இல்லை’ன்னு சொல்றாங்கன்னா, அதுல உண்மையிருக்காதுங்கிறது என் தனிப்பட்ட கருத்து. ஏன்னா, டம்மியாத்தான் நம்மை வச்சிருக்காங்க’ன்னு தெரிஞ்சா, கமிட் ஆன மூணாவது மாசமே வெளியேறியிருக்கணுமே?’’ என்கிறார் அருண்.