Published:Updated:

`அண்ணா ஆட்சி' `எம்.ஜி.ஆர் ஆட்சி'ன்னு யாரும் பேசறதில்ல! - தேர்தல் களத்தில் லொள்ளு சபா ஜீவா

லொள்ளு சபா ஜீவா

Lollu sabha 2.0: ``நெட்ஃபிளிக்ஸில் வெளியான முதல் எபிசோடு ஹிட். வரப்போற அடுத்த ஷோவுல இதுல வராதவங்களயும் கூட்டி வந்துடுவாங்க. சீக்கிரமே அதுக்கான ஷூட் தொடங்க இருக்கு!" - ஜீவா

Published:Updated:

`அண்ணா ஆட்சி' `எம்.ஜி.ஆர் ஆட்சி'ன்னு யாரும் பேசறதில்ல! - தேர்தல் களத்தில் லொள்ளு சபா ஜீவா

Lollu sabha 2.0: ``நெட்ஃபிளிக்ஸில் வெளியான முதல் எபிசோடு ஹிட். வரப்போற அடுத்த ஷோவுல இதுல வராதவங்களயும் கூட்டி வந்துடுவாங்க. சீக்கிரமே அதுக்கான ஷூட் தொடங்க இருக்கு!" - ஜீவா

லொள்ளு சபா ஜீவா
`லொள்ளு சபா' டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜீவா. பள்ளிப் பருவம் முதலே நடிகர் ரஜினி காந்தின் தீவிரமான ரசிகர். ரஜினி காந்த்தைப் போல மிமிக்ரி செய்துவருபவர். டிவி, சினிமா தாண்டி தற்போது தமிழருவி மணியன் தலைவராக இருக்கும் 'காமராஜர் மக்கள் கட்சி'யில் மாநில இளைஞரணித் தலைவராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்.

சமீபத்தில் கோயம்புத்தூரில் கட்சி நடத்திய ஊராட்சி உரிமைகள் விழிப்புணர்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பியவரைச் சந்தித்தேன்.

‘லொள்ளுசபா’ ஜீவா
‘லொள்ளுசபா’ ஜீவா

ஒருபுறம், நம்மூர் சினிமாக்களைக் கலாய்ச்ச 'லொள்ளு சபா' ஆட்களெல்லாம் மறுபடியும் கூட்டணி சேர்ந்து ஹாலிவுட் வெப் சீரிஸ்களைக் கலாய்க்க ஆரம்பிச்சிருக்கீங்க. இன்னொருபுறம், அரசியல்ல இறங்கி தமிழ்நாட்டுல மீண்டும் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம்'னு சொல்றீங்க. ஆக மொத்தத்துல ரொம்ப பிஸியா இருக்கீங்க போல' என்றபடி உரையாடலை ஆரம்பித்தேன். உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்..

`` `ஜோக்கிங் பேர்டு' ஷோ நெட்ஃபிளிக்ஸ் ஐடியா. `லொள்ளு சபா' டிவியில சக்ஸஸ் ஆன ஒரு ஸ்பூஃப் ஷோங்கிறதால எங்க டீமை அவங்க கன்சிடெர் செய்திருக்காங்க. இதுல என்ன வேடிக்கைன்னா, நாங்க மறுபடியும் இப்படி ஒரு நிகழ்ச்சிக்காகச் சந்திக்கப் போறோம்கிறது எங்களுக்கு முன்னாடியே தெரியாது. ஷூட்டிங் ஸ்பாட்டுலதான் ஒருத்தரையொருத்தர் பார்த்து சர்ப்ரைஸ் ஆனோம்னு சொன்னா நம்புவீங்களா? ஆனா அதுதான் உண்மை.

வெளியான முதல் எபிசோடு நல்ல ஹிட். அதனால அடுத்த எபிசோடுக்கும் உற்சாகமாத் தயாராகிட்டு இருக்காங்க. வரப்போற அடுத்த ஷோவுல இதுல மிஸ் ஆனவங்களையும் கூட்டிட்டு வந்துடுவாங்கன்னு நினைக்கிறேன். சீக்கிரமே அதுக்கான ஷூட் தொடங்க இருக்குனு சொல்லியிருக்காங்க'' என்றவரிடம், அரசியல் பயணம் குறித்துக் கேட்டேன்.

``எப்படி ரஜினி சார் ரசிகரா இருக்கேனோ, அதேபோல அடிப்படையில எனக்கு காமராஜரை ரொம்பவே பிடிக்கும். அவரது பிறந்த நாள், நினைவு நாட்களில் என்னால் முடிஞ்ச நலத்திட்ட உதவிகளைச் செய்திட்டிருந்தேன். இந்த நேரத்துலதான் தமிழருவி மணியன் அய்யா காந்திய மக்கள் இயக்கத்தை காமராஜர் மக்கள் கட்சியா மாத்தினார். ஐயாவுடன் எனக்கு முன்னாடியே அறிமுகம் இருந்ததால அவருடைய வழிகாட்டுதல்படி செயல்படலாம்னு நினைச்சேன்.

தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்

ஒரு பொறுப்பை எடுத்துகிடச் சொன்னது ஐயாதான். ரஜினி சார் ரசிகனா, காமராஜர் இயக்கமா ஏற்கெனவே ஃபீல்டு ஒர்க் பண்ணின அனுபவம் இப்பக் கொஞ்சம் கை கொடுக்குது. தமிழ்நாடு முழுக்க காமராஜர் மக்கள் கட்சியைக் கொண்டு போய்ச் சேர்க்கிற வேலைகளை முன்னெடுக்கத் தொடங்கி இருக்கோம். இந்த வேலைகள் கொஞ்சம் மெதுவாகத்தான் நடக்கும். ஆனாலும் நிச்சயம் தமிழ்நாடு நாங்க நினைச்ச ஒரு மாநிலமா மாறும்ங்கிற நம்பிக்கை இருக்கு.

தமிழ்நாடு முழுக்க எங்க நிர்வாகிகளுடன் சுற்றுப்பயணம் செய்ததுல ஒரு விஷயம் தெளிவாப் புரியுது. நான் சொல்றது வெறும் பரபரப்புக்காக அல்ல. கொஞ்ச நாளைக்கு முன்னாடி `வெற்றிடம்'ன்னு ஒரு பேச்சு அடிபட்டுச்சில்லையா, அது நிஜம்தான்.

தமிழ்நாட்டுல அந்த வெற்றிடம் உருவாகி ரொம்ப வருஷமா இருக்கு. என்னைக்கு காமராஜர் முதலமைச்சர் பதவியில இருந்து விலகினாரோ, அன்னைக்கு உண்டான வெற்றிடம். அவருக்குப் பின்னாடி எத்தனையோ முதலமைச்சர்கள் வந்து போயிட்டாங்க. ஆனாலும் இன்னைக்கும் எல்லாருக்கும் `காமராஜர் ஆட்சி'தான் உதாரணம் சொல்லத் தேவைப்படுது.

ஜீவா
ஜீவா

திராவிடக் கட்சித் தலைவர்கள்கூட `அண்ணா ஆட்சி போல', `எம்.ஜி.ஆர் ஆட்சி போல' இருக்கும்னு சொல்றது இல்லையே! அதனால்தான் காமராஜர் ஆட்சியை மீண்டும் தமிழகத்துல கொண்டு வருவதை இலக்கா கொண்டு ஓடத் தொடங்கியிருக்கோம். அடுத்தாண்டு நடக்க இருக்கிற மக்களவைத் தேர்தலை ஐயா வழிகாட்டுதலின் கீழ் கட்சி எதிர்கொள்ள இருக்கோம்" என்கிறார்.