Published:Updated:

`` `என்னடா... என்னைக் கலாய்ச்சியாமே'னு விஜய் சார் கேட்டார்!'' - `லொள்ளு சபா' ஜீவா

‘லொள்ளுசபா’ ஜீவா
‘லொள்ளுசபா’ ஜீவா

லாக்-டவுண் சூழலில் ரசிகர்களின் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கேற்ப இப்போது மீண்டும் விஜய் டி.வி-யில் காலை 7.30லிருந்து 9 மணி வரை ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது ’லொள்ளு சபா’. நிகழ்ச்சி பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள ஜீவாவைத் தொடர்புகொண்டோம்.

`போக்கிரி’, `ஆனந்தம்’, `தவமாய் தவமிருந்து’ எனப் பல படங்களை கையிலெடுத்து காமெடி கதகளி ஆடிய `லொள்ளு சபா’ நிகழ்ச்சி, இந்த லாக்-டவுண் சூழலில் ரசிகர்களின் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கேற்ப இப்போது மீண்டும் விஜய் டி.வி-யில் காலை 7.30 - 9 மணி வரை ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. ஏப்ரல் 15 முதல் நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

சந்தானம், ஜீவா, மனோகர், சுவாமிநாதன் என ‘லொள்ளு சபா’ டீமின் கவுன்ட்டர் கலாய்க்கும், நடிப்புக்கும் இப்போதும் பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. நிகழ்ச்சி குறித்தான பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலாக போய்க்கொண்டிருக்க, நிகழ்ச்சி பற்றிய நினைவுகளைப் பகிரும்படி ஜீவாவை போனில் அழைத்தோம்.

‘லொள்ளுசபா’
‘லொள்ளுசபா’
விஜய், அஜித்தை இப்படிலாமா கலாய்ச்சிருக்காங்க?!  2K கிட்டின் `லொள்ளு சபா' அனுபவம்

``15 வருஷம் கழிச்சு `லொள்ளு சபா’ மறுபடியும் போடுறாங்க. டிவி-ல ரீடெலிகாஸ்ட் பண்ணின லொள்ளு சபா எபிசோடுகளைப் பார்த்தேன். இன்னிக்கு பண்ண மாதிரி அவ்வளவு ஃப்ரெஷ்ஷா இருக்கு. 90ஸ் கிட்ஸ்ஸுக்கு மட்டுமில்ல, இப்ப இருக்கிற 2K கிட்ஸுக்கும் `லொள்ளு சபா’ பிடிச்சிருக்கு. தொலைக்காட்சில அப்ப ஹிட்டான சீரியல்கள் நிறைய இப்ப திரும்பவும் போட்டுட்டு இருக்காங்க. அந்த வகையில, `கனா காணும் காலங்கள்’, `லொள்ளு சபா’, இது ரெண்டும் திரும்பவும் போடணும்னு அவ்வளவு வேண்டுகோள் வந்ததைப் பார்க்கும்போது சந்தோஷமா இருந்தது” என உற்சாகம் குறையாமல் பேசுகிறார் `லொள்ளு சபா’ ஜீவா.

இத்தனை வருஷங்கள் கழிச்சு `லொள்ளுசபா’ மறுஒளிபரப்பு செய்யறது எப்படி இருக்கு?

‘லொள்ளுசபா’
‘லொள்ளுசபா’

``இந்த 21 நாள்கள் லாக்-டவுண் பண்ணது 20 வருஷம் பின்னாடி போன மாதிரி இருக்கு. ஒரு பக்கம் `மகாபாரதம்’, `லொள்ளு சபா’, `மெட்டி ஒலி;, `சக்திமான்’னு நாஸ்டால்ஜியா சீரியல்களும், இன்னொரு பக்கம் `முத்து’ மாதிரியான என்னைக்குப் பார்த்தாலும் சலிக்காத படங்களும் போட்டுட்டு இருக்காங்க. அன்னிக்கு `லொள்ளு சபா' பண்ணப்ப இத்தனை வருடங்கள் கழிச்சும் இந்த அளவுக்குப் பேசப்படும்னு தெரிஞ்சு பண்ணோமானு தெரியாது. ஆனா, ஒவ்வொரு எபிசோடுக்குமே உழைச்சோம். அதுக்கான பலன்தான் இப்ப அனுபவிச்சுட்டிருக்கோம். இன்டர்நேஷனல் ஆடியன்ஸைக் குறிவெச்சு 7.30-க்கு ஒளிபரப்புறாங்களான்னு தெரியல. ரசிகர்களுக்காக இப்போ 15-ம் தேதியிலருந்து இரவு 10 மணிக்கு ஒளிபரப்ப இருக்காங்க"

`லொள்ளு சபா’ நிகழ்ச்சில உங்களால் மறக்க முடியாத அனுபவம்?"

சந்தானம், ஜீவா
சந்தானம், ஜீவா

`` 'லொள்ளு சபா’ நிகழ்ச்சியே எங்களுக்கு மறக்க முடியாத அனுபவம்தான். அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சி முடிஞ்ச பிறகும் அதைப் பத்தின பேச்சே எங்களைச் சுத்தி இருந்தது. இவ்வளவு வருஷம் கழிச்சு இப்பவும் சமூக வலைதளங்கள்ல டிரெண்ட்ல இருக்க ஒரே காமெடி நிகழ்ச்சினா அது, `லொள்ளு சபா’தான். `போக்கிரி’ படத்துக்கான எபிசோடு பண்ணும்போதுதான் கொஞ்சம் பிரச்னை ஆச்சு. ஆனா, அதெல்லாம் சரியாகி, `குருவி’ படத்துல விஜய் சார்கூட நடிச்சேன். இதையல்லாம் தாண்டி நிறைய பிரபலங்கள், `எங்க படத்தை எடுத்து பண்ணுங்க'ன்னு எல்லாம் சொல்லியிருக்காங்க. ஆடியன்ஸும் அடுத்த வாரம் என்ன படம் பண்ணப் போறீங்கன்னு ஆர்வமா கேட்பாங்க. இந்த மாதிரி நிறைய மறக்க முடியாத அனுபவங்கள் எல்லாம் இருக்கு. இப்போ சந்தானம்கூட `பிஸ்கோத்து’ல நடிச்சிருக்கேன். அந்த படத்துல `லொள்ளு சபா’ எபிசோடு மாதிரி ஒரு காட்சி வெச்சிருக்கோம். `லொள்ளு சபா’வையே படமா பண்ணுங்கன்னு நிறைய கோரிக்கைகள் எல்லாம் வருது. எங்களுக்கும் அந்த ஐடியா இருக்கு. சீக்கிரமே அதுக்கான வேலைகள் எல்லாம் பார்க்க இருக்கோம்.”

`லொள்ளு சபா சீசன் 2’ கொண்டு வர ஐடியா இருக்கா?

‘லொள்ளுசபா’  டீம்
‘லொள்ளுசபா’ டீம்

``கண்டிப்பா இருக்கு. விஜய் டி.வியே எங்க கிட்ட மறுபடியும் `லொள்ளு சபா’ கொண்டு வரச் சொல்லி கேட்டாங்க. அது ஒரு டீம் வொர்க். அப்ப நிகழ்ச்சி பண்ண மாதிரியே இப்பவும் ஆடியன்ஸுக்குத் தரமானதா தரணும். அதுக்கான செலவு, இப்ப டீம்ல எங்களோட மார்க்கெட் வேல்யூ அப்படி இப்படினு நிறைய விஷயங்கள் இருக்கு. ஏன்னா, இப்ப வெளியாகுற வெப்சீரிஸ்கள் எல்லாம் படங்களுக்கு இணையா தரமா இருக்கு. அது மாதிரி தரமான மேக்கிங்கோட, நல்ல பட்ஜெட்ல `லொள்ளு சபா’ இருக்கணும். அதைத்தான் ஆடியன்ஸும் எதிர்ப்பார்ப்பாங்க. மறுபடியும் பண்றதுக்கு எங்க டீம் ரெடியா இருக்காங்க. அவங்களை எல்லாம் திரும்ப சேர்க்குறது அரை மணி நேரத்து வேலைதான். அதனால, `இப்படி பண்ணு, அப்படி பண்ணு’னு எந்த ஒரு வட்டத்துக்குள்ளயும் நிறுத்தாம, ஜாலியா விட்டா, இன்னும் நல்லா பண்ணலாம்.

காலத்துக்கு ஏத்த மாதிரி `லொள்ளு சபா'வை இன்னும் சிறப்பா செய்யணும்னு ஆசைப்படுறோம். நிறைய OTT தளங்களும் எங்ககிட்ட கேட்டாங்க. நானே தயாரிச்சு நேரடியா டிஜிட்டல் ரிலீஸ் பண்ற ஐடியாவும் இருக்கு. இன்னும் 20 வருஷம் கழிச்சு போடுற மாதிரியான கன்டென்ட்டும் நம்மகிட்ட இருக்கு. ஒரே விஷயம் பட்ஜெட்தான். பார்ப்போம் என்ன நடக்குதுனு”

`லொள்ளு சபா2’ வந்தா இப்ப வந்திருக்க எந்தப் படங்களை நிகழ்ச்சிக்குள்ள எடுத்துட்டுவருவீங்க?

’என்னை நோக்கி பாயும் தோட்டா’
’என்னை நோக்கி பாயும் தோட்டா’

``தலைவர் படம் `தர்பார்’ல இருந்தே ஆரம்பிக்கலாமே. ‘விஸ்வாசம்’, ‘காலா’ பண்ணலாம். `என்னை நோக்கி பாயும் சேட்டா’னு கேரளால இருந்து ஒரு சேட்டா கிளம்பி வர்றார்னு ஒரு ஃப்ளோல பண்ணா பயங்கரமா இருக்கும். அவ்வளவு ஏன் கொரோனாவை வெச்சுகூட பண்ணலாம். இப்ப டிரெண்டிங்கை வெச்சு, `அமைதிப்படை’, `முகமது பின் துக்ளக்’னு நிறைய விஷயங்கள் பண்ணலாம்."

நிறைய பாராட்டுகள் வந்த மாதிரி மிரட்டல்களும் வந்துருக்கும். அந்த அனுபவம்?

ஜீவா, சுவாமிநாதன்
ஜீவா, சுவாமிநாதன்

``சுவாமிநாதன் சார், மனோகர் அண்ணன் இவங்களுக்கெல்லாம் பார்சல் பாம் அனுப்பினாங்கன்னு கிளப்பிருக்காங்க. ஆனா, எனக்கு நேரடியா எந்த மிரட்டலும் வந்தது இல்லை. ஏன்னா, பெரும்பாலும் கதைல நான் ஹீரோவா மத்தவங்களை கலாய்ச்சிட்டு இருப்பேன். `போக்கிரி’, `தேவர்மகன்’ படங்கள் மட்டும் கொஞ்சம் பிரச்னையாச்சு. இந்த மாதிரி பிரச்னைகளாலும் நிறைய பேர்கிட்ட நிகழ்ச்சி போய்ச் சேர்ந்தது."

சோஷியல் மீடியால நிகழ்ச்சி தொடர்பான ரெஸ்பான்ஸ் பார்க்கும்போது எப்படி இருக்கு?

‘லொள்ளுசபா’
‘லொள்ளுசபா’

``ரொம்ப சந்தோஷமா இருக்கு. நிறைய மீம்ஸ்லாம் உலவிட்டிருக்கு. இதைத்தான் நாங்க அப்பவே `லொள்ளுசபா’வா பண்ணினோம்னு நினைச்சுப்பேன். இப்ப எல்லாரும் மீம் வடிவத்துல தனித்தனியா பண்ணிட்டு இருக்காங்க. இதையெல்லாம் தாண்டி, இப்பவும் நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் இருக்கறதுல சந்தோஷம்.”

`` 'பேக்கரி' எபிசோடு பார்த்துட்டு விஜய் ரொம்ப கோபப்பட்டார்னு சொன்னாங்களே... அப்புறம் எப்படி அவரோட நடிச்சீங்க?"

``பிரச்னைகள், அதோட வருத்தம் யாருக்குனாலும் கொஞ்ச நாள்தான்.`போக்கிரி’ படத்துக்கான எபிசோடு பண்ணும்போதுதான் கொஞ்சம் பிரச்னை ஆச்சு. ஆனா, அதெல்லாம் சரியாகி, `குருவி’ படத்துல நான் நடிச்சேன். `லொள்ளு சபா’ நிகழ்ச்சி உதயநிதி சார்க்கு ரொம்பப் பிடிக்கும். அவர் மூலமாதான் எனக்கு `குருவி’ படத்துல நடிக்க வாய்ப்பு வந்தது. அங்க போன பிறகுதான் விஜய் சாரும் எங்க நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர்னு எனக்குத் தெரியும். `என்னடா என்னை கலாய்ச்சியாமே?’னு செட்ல என்கூட ஜாலியா பேசிட்டு இருந்தார். பாக்யராஜ் சார், ஊர்வசி மேடம், எஸ்.ஏ.சி சார்னு எங்களைச் சுத்தி இருந்த எல்லாருமே இந்த நிகழ்ச்சியை ரசிக்க கூடியவர்களாதான் இருந்தாங்க. இத்தனை வருடங்கள் கழிச்சும் `லொள்ளு சபா’ ட்ரெண்டிங்ல இருக்கிறதால, படமா எடுக்கும்போது பெரிய தயாரிப்பாளர்கள் படத்தைத் தயாரிக்க முன்வருவாங்கங்கிற நம்பிக்கை இருக்கு. ஸ்கிரிப்ட் வேலைகள்ல எங்க இயக்குநர் ராம்பாலா சார் இறங்கியிருக்கார். சந்தானம், யோகிபாபு, சுவாமிநாதன் சார், மனோகர் அண்ணன்னு எங்க டீமும் தயாரா இருக்காங்க."

``வில்லன் படிச்ச ஸ்கூல்ல, விஜய்தான் ஹெட்மாஸ்டர்டா!" - `மாஸ்டர்' படத்தின் ரீல் விமர்சனம்
அடுத்த கட்டுரைக்கு