Published:Updated:

``விரைவில் ஒரு மிகப்பெரிய அறிவிப்பு காத்திருக்கு..!’’ – `லவ் குரு’ ராஜவேல்

`லவ் குரு’ ராஜவேல், திருமணம் தொடருக்கு எழுத்துப் பணிகள் மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பு வரவுள்ளதாக சொல்கிறார்!

  'லவ்' குரு ராஜவேல்
'லவ்' குரு ராஜவேல்

`கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியின் ஸ்டார் சீரியல் ``திருமணம்’’. இந்த மெகா சீரியலுக்கு இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. திருமணம் தொடரில் வரும் ரொமாண்டிக் வசனங்கள் தான் இளம்தலைமுறையினர் மத்தியில் இந்த சீரியல் பிரபலமாக முக்கிய காரணம்.

ராஜவேல்
ராஜவேல்

இந்த தொடரில் `யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ உள்ளிட்ட முன்னணி படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் `இயக்க மேற்பார்வை’ செய்கிறார். பிதாமகன், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட முன்னணித் திரைப்படங்களின் ஒளிப்பதிவாளரான பாலசுப்ரமணியம் இத்தொடரில் ஒளிப்பதிவு மேற்பார்வை செய்கிறார்.

`லவ் குரு’ என்னும் பிரபல எஃப்.எம் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜவேல், திருமணம் தொடருக்கு எழுத்துப் பணிகள் மேற்கொண்டு வந்தார். தற்போது அந்த தொடரில் தன் பணிகள் நிறைவுக்கு வருவதாக ராஜவேல் முகநூலில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி விஜய் தொலைக்காட்சியில் விரைவில் வெளியாக உள்ள புதிய தொடருக்கு எழுத்து பணிகள் மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

``விரைவில் ஒரு மிகப்பெரிய அறிவிப்பு காத்திருக்கு..!’’ – `லவ் குரு’ ராஜவேல்

இதுகுறித்து ராஜவேலை தொடர்பு கொண்டு பேசினோம். ``விஜய் டிவி-யில் விரைவில் பெரிய பட்ஜெட்டில் சரித்திர தொடர் உருவாக்கப்பட உள்ளது. சர்வதேச நிறுவனம் ஒன்று தயாரிக்கும் இந்த தொடர், மக்களுக்கு மிகவும் பிடித்த ஒரு ஆளுமையைப் பற்றிய சரித்திர தொடராக இருக்கும். விஜய் டிவி விரைவில் இதற்கான முறையான அறிவிப்பை வெளியிடுவார்கள்’’ என்றார்.