Published:Updated:

`வீட்டுலயே அடைஞ்சி கெடக்குறது மன அழுத்தத்தைக் கொடுக்குது!' - போலீஸ் புகார் குறித்து மதுமிதா

அய்யனார் ராஜன்

காவல்துறையில ஒரு கம்ப்ளைன்ட் பதிவானா புகாருக்கு ஆளானவங்களை விசாரிக்கக் கூப்பிடுவாங்க இல்லையா, இதுவரைக்கும் என்னிடம் யாரும் பேசலை. ஒருவேளை அப்படிக் கூப்பிட்டா, அங்க நான் பேச வேண்டியதைப் பேசுவேன்.

Madhumitha
Madhumitha

சின்னத்திரையில் 'சின்னப் பாப்பா பெரிய பாப்பா' ஷோவிலும் சினிமாவில் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தவர் மதுமிதா. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். சில தினங்களுக்கு முன் ஷோவின் சில விதிமுறைகளை மீறியதாகத் திடீரென அதிலிருந்து வெளியேற்றவும் செய்தனர். இந்நிலையில், தற்போது அந்தத் தொலைக்காட்சி சார்பில் மதுமிதா மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து மதுமிதாவிடம் பேசினோம்.

Madhumitha
Madhumitha

``ஷோவுல இருந்து வெளியேறி வந்ததுலயிருந்து வீட்டுக்குள்ளேயேதான் முடங்கிக் கிடக்கிறேன். கையில பட்ட காயத்துக்குக்கூட வீட்டுல இருந்தேதான் சிகிச்சை எடுத்துட்டிருக்கேன். வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கறதே ஒருவித மன அழுத்தத்தைக் கொடுக்குது. ஆனாலும் இருக்கேன். `முகத்தை மறைச்சிகிட்டாவது போறேன், என்னை விடுங்களே'ன்னு கேட்டுப் பார்த்தேன்.

ஆனா சேனல்ல இருந்து அனுமதிக்கல. இப்போ காவல் துறையில ஒரு கம்ப்ளைன்ட் பதிவானா புகாருக்கு ஆளானவங்களை விசாரிக்கக் கூப்பிடுவாங்க இல்லையா, இதுவரைக்கும் என்னிடம் யாரும் பேசலை. ஒருவேளை அப்படிக் கூப்பிட்டா, அங்க நான் பேச வேண்டியதைப் பேசுவேன். மத்தபடி அந்த நிகழ்ச்சி குறித்து எதுவும் பேச விரும்பலைங்க'' என்றதோடு முடித்துக் கொண்டார்.