Published:Updated:

Bigg Boss சீசன் 6: மதுரை முத்து vs ஜி.பி.முத்து - பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையப் போவது யார்?

மதுரை முத்து, ஜி.பி.முத்து

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என மதுரை முத்துவும் முடிவு செய்திருந்த நிலையில்தான், ஒரு செய்தி அவரின் காதில் வந்து விழுந்திருக்கிறது. அது என்னவென்றால்...

Published:Updated:

Bigg Boss சீசன் 6: மதுரை முத்து vs ஜி.பி.முத்து - பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையப் போவது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என மதுரை முத்துவும் முடிவு செய்திருந்த நிலையில்தான், ஒரு செய்தி அவரின் காதில் வந்து விழுந்திருக்கிறது. அது என்னவென்றால்...

மதுரை முத்து, ஜி.பி.முத்து
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. போட்டியாளர்கள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டனர். கடந்த சீசனில் போட்டியாளர்கள் பலரும் பொதுவெளியில் முகம் தெரியாதவர்களாக இருந்ததால் இந்த சீசனில் ரொம்பவே கவனமாகப் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

தற்போது ஒவ்வொரு போட்டியாளர்களுடனும் பேசி அவர்களது சம்பளம் மற்றும் இதர விஷயங்களை இறுதி செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவும் பிக் பாஸ் செல்ல இருக்கிறார் எனத் தகவல் கிடைத்திருக்கிறது.

மதுரை முத்து
மதுரை முத்து

'மதுரை வீரன்தானே...', 'ந்நோவ் முத்தண்ணா...' என அவரின் ஜோக்குகள் இல்லாத விஜய் டிவி நிகழ்ச்சியே இல்லை எனலாம். அந்த வகையில் அவர் பிக் பாஸ் வீட்டிற்கும் சென்றால், அங்கே ஒவ்வொரு நாளும் காமெடி களைகட்டும் என்பது சேனல் தரப்பு நம்பிக்கை. இது தொடர்பாக மதுரை முத்துவுக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம்.

"அண்ணனை இந்த சீசனுக்குக் கூப்பிட்டது உண்மைதான். அண்ணனும் சில நாள்கள் யோசனையிலேயே இருந்தார். தனக்கு நெருக்கமான நட்பு வட்டத்தினரிடம் 'நிகழ்ச்சிக்குப் போகலாமா வேண்டாமா' என ஆலோசனையும் கேட்டு வந்தார். நண்பர்கள் கலவையா கருத்துச் சொல்ல, முடிவெடுக்க முடியாத ஒரு சூழல்லதான் இருந்தார். ஆனா சேனல்ல இருந்து தொடர்ச்சியா கலந்துக்கச் சொல்லிக் கேட்டுட்டே இருந்ததால முதல் கட்டமா பேசிப் பார்க்கலாம்ன்னு பேசியிருக்கார்" என்றார்கள்.

முதல் சுற்றிலேயே, மதுரை முத்து கேட்ட சம்பளத்தைத் தருவதற்கு சேனல் தரப்பு சம்மதித்துவிட்டதாம். அதாவது முந்தைய சீசன்களில் பிரபலமானவர்களுக்குத் தரப்பட்ட சம்பளம் அளவுக்கு நல்லதொரு தொகையைத் தரச் சம்மதித்துள்ளார்கள்.

எனவே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என மதுரை முத்துவும் முடிவு செய்திருந்த நிலையில்தான், ஒரு செய்தி அவரின் காதில் வந்து விழுந்திருக்கிறது.

பிக் பாஸ் டீம், மதுரை முத்துவுக்கு முன்பே டிக் டாக் மற்றும் யூடியூப் பிரபலமான ஜி.பி.முத்துவிடமும் பேசி, அவரையுமே இந்த சீசனில் கலந்துகொள்ளச் சம்மதிக்க வைத்துள்ளனர் என்ற செய்திதான் அது.

ஜி.பி.முத்து
ஜி.பி.முத்து

அவ்வளவுதான், "ஏங்க அந்தாளு இருக்கிற ஷோவுல நான் கலந்துக்கறதா? ஆணியே பிடுங்க வேண்டாம். நீங்க லட்ச ரூபாய் சம்பளம் தந்தாலும் வேண்டாம் சாமி" எனச் சொல்லி விட்டாராம் மதுரை முத்து. ஜி.பி.முத்துவுக்கு என ரசிகர்கள் இருந்தாலும், பெரும்பாலும் நெகட்டிவ் விஷயங்களால் மட்டுமே வெளியே தெரிந்தவர் என்பதால், அவர் செய்வது நிஜமாகவே அப்பாவித்தனமாக இல்லை என அவரைத் தொடர்ந்து விமர்சிப்பவர்களும் இங்கே உண்டு. மதுரை முத்துவும் அதே கருத்தில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே தற்போது சேனல் தரப்பு இது குறித்து என்ன முடிவெடுக்கும் என்பதே கேள்வியாக உள்ளது. சின்னத்திரை வட்டாரத்தில் இந்தச் செய்திதான் தற்போது ஹாட் டாபிக்.

பிக் பாஸ் சீசன் 6-ல் யார் கலந்துகொள்ளலாம்? ஜி.பி.முத்துவா, மதுரை முத்துவா? உங்கள் கருத்தை கமென்ட்டில் சொல்லுங்கள்.