Published:Updated:

``இந்தக் காலத்துப் பசங்க எவ்வளவு சூப்பரா சமைக்கிறாங்க; ஹுசைனுக்கு ஒரு மண்ணும் தெரியாது!" - மணிமேகலை

மணிமேகலை, ஹுசைன்
மணிமேகலை, ஹுசைன்

`என்னதான் யூடியூப்ல `சமைப்பது எப்படி'னு தேடி வீடியோ பார்த்து சமைச்சாலும், பக்கத்துல இருந்து பெரியவங்க சொல்லிக் கொடுக்கிற மாதிரி இருக்குமா சொல்லுங்க.’

`குக் வித் கோமாளி', `கலக்கப் போவது யாரு சேம்பியன்ஸ்' என பிஸியாக இருந்து வருகிறார் தொகுப்பாளினி மணிமேகலை. புத்தாண்டுக் கொண்டாட்டம், மீம்ஸ், குக்கிங் எனப் பல்வேறு விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்…

மணிமேகலை, ஹுசைன்
மணிமேகலை, ஹுசைன்

``இந்தப் புத்தாண்டுக்கு நான் ஷூட்ல இருந்தேன். திருமணத்துக்குப் பிறகு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து கொண்டாடாத முதல் புத்தாண்டு இது. நான் இல்லாம ஹுசைன் ஃப்ரெண்ட்ஸ் கூட ஜாலியா என்ஜாய் பண்ணிருப்பார். நான்தான் அவரைக் கொஞ்சம் மிஸ் பண்ணேன்."

``விஜய் டிவி `Mr & Mrs சின்னத்திரை' நிகழ்ச்சிக்குப் பிறகு அடுத்த வாய்ப்புக்காக காத்திட்டு இருக்க வேண்டிய சூழல் உருவாகும்னு நினைச்சேன். ஆனா, விஜய் டிவியில இருந்து அடுத்த வாய்ப்பைக் கொடுத்தாங்க. அதுவும் என்னுடைய ஃபேவரைட் `கலக்கப்போவது யாரு சேம்பியன்ஸ்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குற வாய்ப்பைக் கொடுத்தாங்க."

மணிமேகலை
மணிமேகலை

``அந்த செட்டே செம ஃபன்னா இருக்கு. எப்பவுமே சிரிச்சிட்டே இருக்க முடியாது. அதே மாதிரி `குக் வித் கோமாளி'யில நானும் ஒரு கோமாளியா இருக்கேன். ஏன்னா, எனக்கு சுத்தமா சமைக்கத் தெரியாது."

``இந்த நிகழ்ச்சியைப் பார்த்துட்டு நாலு பேரு அசிங்கமா திட்டுவாங்க. அதைக் கேட்டாவது சமைக்கக் கத்துக்கலாம்னுதான் இந்த நிகழ்ச்சியிலே கலந்துகிட்டேன். ஆனா, அந்த நிகழ்ச்சியைப் பார்த்துட்டு நிறைய பேர் ஹுசைனை பாவம்னு சொல்றாங்க; மீம்ஸ் போட்டுக் கலாய்க்கிறாங்க."

மணிமேகலை, ஹுசைன்
மணிமேகலை, ஹுசைன்

``பொதுவா நம்முடைய ஜெனரேஷன் பெண்கள் பெரும்பாலும் கல்யாணம் வரைக்குமே சமைக்க முயற்சி பண்றதே இல்லை. கல்யாணத்துக்கு முன்னாடி காலேஜ், வேலைனு ஓடிட்டிருப்போம். அதுக்கப்புறம் அம்மா, மாமியார் கத்துக்கொடுப்பாங்க. ஆனா, எங்களுடைய கல்யாணம் ரெண்டு வீட்டையும் எதிர்த்துதான் நடந்தது. எங்களுக்கு நல்லது கெட்டது சொல்லக்கூட பெரியவங்க யாரும் இல்லை."

``என்னதான் யூடியூப்ல `சமைப்பது எப்படி'னு தேடி வீடியோ பார்த்து சமைச்சாலும், பக்கத்துல இருந்து பெரியவங்க சொல்லிக் கொடுக்கிற மாதிரி இருக்குமா சொல்லுங்க. ஹுசைனுக்கும் சுத்தமா சமைக்கத் தெரியாது. இப்போதைக்கு குக்தான் வீட்டுல சமைக்கிறாங்க. மதியம் மட்டும் சமைச்சிக் கொடுப்பாங்க. மூணு வேலைக்கும் சமைக்கச் சொன்னா குடும்பத்துக்குக் கட்டுப்படி ஆகாது. அதனால ஒரு வேளைதான் சமைப்பாங்க. காலையில ஷூட்ல சாப்பிடுவேன்."

மணிமேகலை, ஹுசைன்
மணிமேகலை, ஹுசைன்

``நாங்க ரெண்டு பேரும் இப்போ பிஸியா ஓடிட்டு இருக்கோம். ஒரு நல்ல நிலைமைக்கு வந்தாதான் எங்களை வீட்டுல ஏத்துப்பாங்க. `குக் வித் கோமாளி' ஷோ பார்த்துட்டு நிறைய பேர் என்னைக் கலாய்க்குறாங்க. ஹுசைன் பாவம்னு சொல்றாங்க. அங்க மத்தவங்க சமைக்கிறதைப் பார்த்து எனக்கும் சமைக்கணும்னு ஆர்வமா இருக்கு."

பிஜிலி, மணிமேகலை
பிஜிலி, மணிமேகலை

``அந்த செட்ல எனக்கு இருக்கிற ஒரே ஆறுதல் பிஜிலி அண்ணன்தான். அவருக்கும் சமையல் தெரியாது, எனக்கும் சமையல் தெரியாது. செம ஜாலி டைப் அவர். ஆனா, ரஜினி பத்தி பேசினா மட்டும் கோவம் வந்துடும்."

``இந்தக் காலத்துல பசங்க எவ்வளவு அருமையா சமைக்கிறாங்க. ஆனா, ஹுசைனுக்கு ஒரு மண்ணும் தெரியாது. சமைக்கத் தெரியலைன்னுதான் நாங்க மாத்தி மாத்தி திட்டிப்போம்."

மணிமேகலை
மணிமேகலை

``சமீபத்துல உழவர் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிக்காக பொள்ளாச்சி பக்கத்துல இருக்கிற ஒரு கிராமத்துக்குப் போயிருந்தோம். அங்க ஒரு மிளகாய் தோட்டத்துக்குப் போனோம். வேற லெவல் அனுபவம் கிடைச்சது. மிளகாய் தோட்டத்துல இருந்தப்போ கைகளை முகத்துல தேய்க்கக் கூடாதுன்னு சொன்னாங்க. நான் அதை மறந்து மேக்-அப்பை சரி செய்யப்போய் முகம் எல்லாம் எரிச்சலாகிடுச்சு. அங்க வேலை செய்யிறவங்க எல்லாம் அந்த எரிச்சலைப் பழகிட்டதா சொன்னாங்க. இன்னும் பல விஷயங்கள் அவங்க சொன்னாங்க."

``அங்க இருக்கிற மிளகாயை அடிமட்ட விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விக்கிறதைப் பத்தியும் சொன்னாங்க. கஷ்டமா இருந்தது. நம்மலாம் சும்மா வாய் வார்த்தையா விவாசாயிகள், விவசாயம்னு பேச்சிட்டிருக்கோம். ஒரு நாள் நேர்ல பார்த்தாதான் அவங்க எவ்வளவு கஷ்டப்படுறாங்கனு புரியுது. அவங்களுக்கு எப்போதான் விடிவு காலம் வரும்னு தெரியலை.''

மணிமேகலை
மணிமேகலை

``ஷூட், காமெடி, கொண்டாட்டம்னு வாழ்க்கை ஜாலியா போகுது. சில சினிமா வாய்ப்புகளும் வருது. ஆனா, நடிப்புல எனக்கு அந்தளவுக்கு ஈடுபாடு இல்ல. 90 வயசு வரைக்கும் தொகுப்பாளினியா இருந்துட்டுப் போயிடுறேன்’’ என்றார் புத்துணர்ச்சியுடன்.

அடுத்த கட்டுரைக்கு