Published:Updated:

விகடன் TV: செய்திகள் டு சீரியல் - மறுபடி வந்துட்டேன்!

ரேவதிப்ரியா
பிரீமியம் ஸ்டோரி
ரேவதிப்ரியா

பத்தாவது படிச்சிட்டிருக்கிறப்ப முதன்முதலா ‘மெட்டி ஒலி’ வாய்ப்பு கிடைச்சது

விகடன் TV: செய்திகள் டு சீரியல் - மறுபடி வந்துட்டேன்!

பத்தாவது படிச்சிட்டிருக்கிறப்ப முதன்முதலா ‘மெட்டி ஒலி’ வாய்ப்பு கிடைச்சது

Published:Updated:
ரேவதிப்ரியா
பிரீமியம் ஸ்டோரி
ரேவதிப்ரியா
‘மெட்டி ஒலி’ ரேவதிப்ரியா ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிரீயல் ஏரியாவுக்குள் வந்திருக்கிறார். இம்மாத இறுதியிலிருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘ராஜ பார்வை’ தொடரில் கமிட் ஆகியிருக்கும் ரேவதியிடம் பேசினேன்.
விகடன் TV: செய்திகள் டு சீரியல் - மறுபடி வந்துட்டேன்!

``சீரியல்ல பரபரப்பா இருந்தபோதே செய்தி சேனலுக்குப் போனது ஏன்?’’

‘‘பத்தாவது படிச்சிட்டிருக்கிறப்ப முதன்முதலா ‘மெட்டி ஒலி’ வாய்ப்பு கிடைச்சது. அந்த சீரியல்ல கடைக்குட்டிப் பொண்ணா என்னுடைய கேரக்டர் நல்லா ரீச் ஆனதால தொடர்ந்து சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள்ல வந்திட்டிருந்தேன். கடைசியா ‘உதிரிப்பூக்கள்’ சீரியல்ல நடிச்சிட்டிருந்தப்ப உடன் நடிச்சிட்டிருந்த ஒரு அக்கா, ‘புதுசா வர்ற சேனலுக்கு தமிழ் நல்லா வாசிக்கத் தெரிஞ்ச செலிபிரிட்டி வேணும்கிறாங்க; நீ போய்ப் பாரேன்’னு சொன்னாங்க. போய்ப் பார்ப்போமேன்னு போனதுதான். வாய்ஸ் டெஸ்ட்ல தேர்வாகிட்டதால உடனே சேரச் சொல்லிட்டாங்க.

புது சேனல், பரபரப்பா அரசியல் செய்திகளெல்லாம் வாசிக்கறது புது அனுபவமா இருந்து. ஆனா, சீரியல் பண்ணிட்டே செய்தி வாசிக்கறதுல பிரச்னை வந்தது. முதல் நாள் கிளிசரின் போட்டு நடிச்சுட்டு மறுநாள் செய்தி வாசிக்கப் போனா தொண்டை கரகரப்பாகிடும். அதனால ஒருகட்டத்துல நடிப்பை முழுசா விட வேண்டி வந்தது. ஆறு வருஷம் அப்படியே ஓடிடுச்சு. நிறைய சீரியல் வாய்ப்புகளை மிஸ் பண்ணினேன். தொடர்ந்து இப்படி மறுத்துட்டே வர்றது என்னவோ மாதிரி இருக்கவே இப்ப செய்தி வாசிப்பை ஃப்ரீலான்ஸாக்கிட்டு, திரும்பவும் வந்தாச்சு.’’

விகடன் TV: செய்திகள் டு சீரியல் - மறுபடி வந்துட்டேன்!

`` ‘மெட்டி ஒலி’ வாட்ஸ் அப் குழு இன்னைக்கும் ரொம்பவே ஆக்டிவா இருக்குதாமே?’’

‘‘ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ரீ யூனியன். அப்ப எல்லாரும் சந்திச்சோம். சரோக்கா, லீலாக்கா ரெண்டு பேரும் இன்னைக்கும் சீரியல்ல நடிச்சிட்டுதான் இருக்காங்க. இப்ப நானும் நடிப்புக்குத் திரும்பிட்டேன். தனம், விஜியும்கூட சீக்கிரம் நடிக்க வருவாங்கன்னு நம்பறோம். வாட்ஸ் அப் குரூப்ல ரொம்பவே ஆக்டிவா இருக்கறது சரோக்கா மட்டும்தான். எங்க அப்பாவா நடிச்ச டெல்லி குமார் சாருக்கு இன்னைக்கும் நான் பவானிக்குட்டிதான். ‘கம் பேக்’ பத்திச் சொன்னதும், ரொம்ப சந்தோஷப்பட்டார்.”