சினிமா
Published:Updated:

விகடன் TV: “கல்யாணத்துக்கு முன்னாலயே சண்டை போட்டேன்!”

வனஜா
பிரீமியம் ஸ்டோரி
News
வனஜா

எங்களோட வீட்டு ஃபங்ஷன் எல்லாத்துக்கும் மெட்டி ஒலி ஃபேமிலியையும் தவறாமல் கூப்பிடுவேன். அ

`மெட்டி ஒலி' லீலாவை நிச்சயம் சீரியல் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். லீலா கதாபாத்திரத்தில் நடித்த வனஜா தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘ராஜாமகள்’ தொடரில் நடித்துவருகிறார். அவரை ஒரு தேநீர் இடைவேளையில் சந்தித்தேன்.

“எத்தனையோ கேரக்டர்களில் நடிச்சிருந்தாலும் இன்னும் மக்கள் என்னை லீலாவாகத்தான் கொண்டாடுறாங்க. அந்தத் தொடரில் நானும் செல்வமும் காதலிப்போம். ஆனால், எங்க குடும்பத்துக்காக சேராமல் பிரிஞ்சிடுவோம். எதார்த்தமான அந்தக் கேரக்டர் பலருடைய வாழ்க்கையோடும் பொருந்தும் என்பதால் அந்த அளவிற்கு அந்தக் கேரக்டருக்கு வரவேற்பு கிடைச்சது.

எங்களோட வீட்டு ஃபங்ஷன் எல்லாத்துக்கும் மெட்டி ஒலி ஃபேமிலியையும் தவறாமல் கூப்பிடுவேன். அவங்களும் அப்படித்தான்! அதே மாதிரி, ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கும் போதும் எங்களோட நிஜப் பெயர்களைப் பயன்படுத்த மாட்டோம். தனம் அக்கா, சரோ அக்கான்னு எங்க கேரக்டர் பெயர்களைச் சொல்லித்தான் பேசிப்போம்” என்றவர் ‘சிங்கம்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

விகடன் TV: “கல்யாணத்துக்கு முன்னாலயே சண்டை போட்டேன்!”

“ ‘சிங்கம்’ படத்தில் நடிக்கும்போது என் பல்லில் கறை வரையணும்னு சொன்னாங்க. என் கணவர்தான் அசிஸ்டென்ட் டைரக்டரா அந்தப் படத்தில் ஒர்க் பண்ணினார். அவர் என்கிட்ட இந்த மாதிரியெல்லாம் என் கேரக்டர் இருக்கும்னு எனக்குச் சொல்லவே இல்லை. அப்போ எங்களுக்குத் திருமணம் ஆகவும் இல்லை. அவர் கேரக்டர் குறித்துச் சொல்லவும் அவர்கூட ரொம்பவே சண்டை போட்டேன். எப்படி அந்தக் கேரக்டரில் நடிக்கிறதுன்னு ரொம்பவே யோசிச்சேன். என் அப்பா, ‘இது வெறும் கதாபாத்திரம்தான்... எதுவும் யோசிக்காமல் நடி’ன்னு சொன்னாங்க. அதனாலதான் அதுல நடிச்சேன். அந்தப் படத்துக்குப் பிறகுதான் நானும், என் கணவரும் திருமணம் பண்ணிக்கிட்டோம்.

நிறைய சீரியல், பட வாய்ப்புகள் எல்லாமே வந்துச்சு. நான் ரொம்ப யோசிச்சு செலக்டிவ் ஆன புராஜெக்ட்ஸ்தான் பண்ணிட்டிருக்கேன். இப்போ ‘ராஜாமகள்’ தொடரிலும், சன் டி.வி-யில் ‘அபியும் நானும்’ தொடரிலும் நடிச்சிட்டிருக்கேன். தனியா ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சிருக்கேன். நடிப்பைத் தவிர்த்து அதுல என்ன வீடியோ போடலாங்கிற பிளானிங்லேயே நேரம் சரியா இருக்கு!” என்று சிரிக்கிறார் வனஜா.