Published:Updated:

``நல்லவேளை நாங்க நடிக்கும்போது யூடியூப் சேனல்ஸ் இல்லை..!''- `மெட்டி ஒலி' சிஸ்டர்ஸ் ரீ-யூனியன்

`மெட்டி ஒலி'
News
`மெட்டி ஒலி'

‘மெட்டிஒலி’ சீரியல் குறித்தான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள ’மெட்டிஒலி’ சகோதரிகளை ஸூம் வழியே ஒருங்கிணைத்தோம்.

லாக்டெளன் சூழலில் நாஷ்டால்ஜியா சீரியல்களில் இப்போதும் ட்ரெண்டிங்கில் இருப்பது ‘மெட்டிஒலி’. அந்த சீரியல் குறித்தான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள ’மெட்டிஒலி’ சகோதரிகளை ஒருங்கிணைத்தோம்.

‘மெட்டி ஒலி காயத்ரி!
‘மெட்டி ஒலி காயத்ரி!

சந்திப்பு ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை நேரம் போவதே தெரியாத அளவுக்குக் கலகலவென ரீயூனியனைச் சிறப்பித்தார்கள் சகோதரிகள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

” ’மெட்டி ஒலி’க்குப் பிறகு இவ்வளவு நாள்கள் நாங்க வாட்ஸ் அப்ல, ஃபோன்லதான் பேசிட்டு இருந்தோம். வீடியோ கால்ஸ் கூட அவ்வளவு பேசிக்கலை. ஆனா, இந்த லாக்டெளன் சூழல்ல மறுபடியும் எங்களைச் சந்திக்க வச்சு, பழைய நினைவுகளைப் பேசறதுக்கு ஒருங்கிணைச்ச விகடனுக்கு நன்றி!” என ஆரம்பித்தார் வனஜா.

’ஆமாம்’ என அனைவரும் ஆமோதிக்க, ‘மெட்டி ஒலி’ நாள்களுக்கு அழைத்துச் சென்றோம்.

’மூன்றாவது முறையா ‘மெட்டி ஒலி’ ரீடெலிகாஸ்ட் பண்ணறாங்க. இப்பயும் மக்கள்கிட்ட அதே ஆதரவு இருக்கே’ என நாம் கேட்க, சீரியலில் சரோவாக வந்த காயத்ரி முதலில் ஆரம்பித்தார்.

வனஜா
வனஜா

“வனஜா சொன்ன மாதிரி, ரொம்ப நாள் கழிச்சு நாங்க எல்லோரும் சந்திக்கிறோம். பல வருஷங்கள் சீரியலுக்காக ஒண்ணா இருந்தோம். அதுக்குப் பிறகு, எதாவது நிகழ்ச்சிகள்லதான் சந்திப்போம். ஆமா, நீங்க கேட்ட மாதிரி ஒரு சீரியல் இத்தனை வருஷம் கழிச்சு மறுபடியும் போடும்போது அதே மாதிரியான ஆதரவு மக்கள் தரதுல சந்தோஷம்” எனப் பூரிக்க,

” ’மெட்டி ஒலி’ எனக்கு மறக்க முடியாத அனுபவம். சீரியல்ல நடிச்ச எல்லாருமே எனக்கு இன்னொரு குடும்பம் மாதிரி. அந்த சமயத்துல நான் ஸ்கூல் படிச்சிட்டுருந்த பொண்ணு. அதனால, டைரக்டர் திருமுருகன் சார் எனக்கு ஒவ்வொரு காட்சி பத்தியும், நடிக்கிறது பத்தியும் பொறுமையா சொல்லித்தருவார். அந்த வயசுல எனக்கு இந்த சீரியலோட ஹிட் பத்தின சீரியஸ்னஸ்லாம் புரியலை. கொஞ்ச வருஷம் கழிச்சுதான் எனக்குப் புரிய ஆரம்பிச்சது” என சீரியஸ் நோட் தந்தார் ரேவதிப்பிரியா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''சீரியலோட டைட்டில் சாங், ‘அம்மி மிதித்து’ பயங்கர ஹிட். அதைப்பத்தி…’' எனக் கேள்வி முடிக்கும் முன்பே ஆஜரானார் காயத்ரி.

“ஒரு முறை ‘மெட்டி ஒலி’ நிகழ்ச்சிக்காக நான், அந்த சீரியல்ல எனக்கு நாத்தனாரா நடிச்ச அருணாதேவி, சாந்தி மாஸ்டர், நாங்க அஞ்சு பேர்னு எல்லாருமே சிங்கப்பூர் போயிருந்தோம். அந்தப் பாட்டுக்காக நாங்க ஸ்டேஜ்ல ஆடினதை மறக்கவே முடியாது. ரேவதி அப்போ குட்டிப்பொண்ணுங்கறதால, அவ டான்ஸ் பார்க்கறதுக்கு க்யூட்டா இருக்கும். நாங்க இப்பவே இவ்வளவு அட்ராசிட்டி பண்றோம்ன்னா, சீரியல் டைம்ல நினைச்சுப் பாருங்க எப்படி இருந்திருப்போம்னு. எங்க யூனிட்டையே அதகளம் பண்ணிருவோம். திருமுருகன் சார் நிலைமைய நினைச்சுப் பாருங்க. பாவம் அவரு எங்க எல்லாரையும் சமாளிக்கணும். அதான், எல்லாரையும் கல்யாணம் பண்ணி ஒவ்வொரு வீட்டுக்கும் அனுப்பி வெச்சிட்டாரு போல” எனச் சிரிக்கிறார்.

Uma
Uma

''உங்க அக்கா தங்கைகளைப் பத்திச் சொல்லுங்க?'’ இது வனஜாவுக்கு.

“ரேவதி செட்லயே குட்டி பொண்ணுங்கறதால, எங்க எல்லாருக்குமே செல்ல தங்கச்சி. உமா என்னுடைய சொந்த தங்கச்சி. அதனால, செட்ல இன்னும் ஜாலியா இருப்போம். சீரியல்ல அவளுக்கும் எனக்குமான காட்சிகள்ல சண்டை செல்லம் கொஞ்சறது எல்லாமே ரியலா வந்தது. நானும் காயு அக்காவும் சேர்ந்து செம அரட்டை அடிப்போம். காவேரி பெரிய அக்காங்கறதால, எங்க எல்லாரையும் செல்லமா அதட்டிட்டே இருப்பாங்க.”

“எங்க எல்லாருடைய சீரியல் கதாபாத்திரங்களுமே, எங்களுடைய ரியல் கேரக்டருக்கும் பெரும்பாலும் ஒத்துப் போகும். டெல்லி குமார் அப்பா, போஸ் மாமா எல்லாருமே அப்படித்தான். காஸ்ட்டிங்னு சொல்லுவாங்களே, அது அவ்வளவு பொருத்தமா இருக்கும். எங்களுக்கு ஒரு தாய்மாமா இருந்தா எவ்வளவு அன்பா அக்கறையா இருப்பாரோ அது மாதிரிதான் போஸ் மாமா இப்பவரைக்குமே இருப்பார். வெளிய எதாவது ஒரு நிகழ்ச்சில பார்த்து அஞ்சு நிமிஷம் நாங்க பேசினா கூட அந்த அன்பு இப்ப வரைக்குமே மாறாமா இருக்கும். ‘மெட்டிஒலி’ முன்னாடி வரைக்கும் எங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாது. ஆனா, இப்ப ஒவ்வொருத்தருடைய குடும்பம், அவங்களுடைய உறவுகள்னு எல்லாமே எங்களுக்குத் தெரியும். அதனால ‘மெட்டி ஒலி’ அனுபவம் எங்க வாழ்க்கைக்குமானது” என்றார் காயத்ரி நெகிழ்ச்சியாக.

உமா தனது அனுபவத்தைப் பகிர்ந்தார், ”எனக்கு எதேச்சையா வந்த வாய்ப்புதான் இந்த ‘மெட்டி ஒலி’. கதை எதுவும் கேட்காமல் கமிட் ஆனேன். சீரியல்ல என்னுடைய முதல் காட்சியே கோயில்ல விளக்கேத்துறதுதான். ஆனா, சீரியல் ஹிட் ஆகி இந்த அளவுக்கு மக்கள்கிட்ட போய் சேரும்னு எதிர்பார்க்கவே இல்லை.”

“ ’மெட்டி ஒலி’ சீரியல் அப்போ நான் ஸ்கூல் படிச்சிட்டுருந்த பொண்ணு. ஸ்கூல்ல போய் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட ஷூட்டிங் அனுபவங்கள் எல்லாம் சொல்லும்போது அவங்களுக்கு அது புது எக்ஸ்பீரியன்ஸ். ‘மெட்டி ஒலி’ ஷூட்டிங் கிளம்பறேன் அப்படினாலே எனக்குப் பயங்கர குஷி ஆகிடும். ஷூட்டிங்ல ஆரம்பத்துல நாங்க அஞ்சு பேரும் ஒண்ணா இருந்தோம். அதுக்குப் பிறகு அக்காங்களுக்குக் கல்யாணம் ஆகிப் போனதும் நிஜமாவே கஷ்டமா இருந்தது. நானும் காவேரி அக்காவும் மட்டும்தான் வீட்ல இருப்போம். மத்த அக்காங்களை அவங்க வீட்ல போய் பார்க்கற மாதிரியான சீன் வரும்போதுலாம் எங்களுக்கு பிக்னிக் போறமாதிரிதான். என் வீட்ல இருக்குறதை விட, ‘மெட்டி ஒலி’ சீரியல்ல இருக்குறதுதான் அப்போ எனக்கு ஜாலி” என்று குதூகலமாகிறார் ரேவதி.

Revathi Priya
Revathi Priya

‘மெட்டி ஒலி’ எந்த அளவுக்கு உங்க கரியர்ல திருப்பு முனையா இருந்துருக்கு?

காயத்ரி: “அதுக்கு முன்னாடி திருமுருகன் சார்கூட ரெண்டு சீரியல் வொர்க் பண்ணியிருந்தேன். அதைவச்சுதான் ‘மெட்டி ஒலி’க்கும் என்னைக் கூப்பிட்டார். அப்போ நான் பாம்பேல இருந்ததால, இந்த சீரியல்ல கமிட் ஆகனுமான்னு யோசிச்சேன். கதையை வச்சு கன்வின்ஸ் பண்ணினாங்க. சென்னைல அம்மா வீடு, என்னுடைய ஃப்ரெண்ட்ஸ்னு நிறைய பேர் இருந்ததால எனக்கு ரொம்ப வசதியா இருந்தது. சீரியல்ல எங்க எல்லோருக்கும் கல்யாணம் ஆகி ஒவ்வொரு வீட்டுக்கும் போனதுக்குப் பிறகு எங்க காம்பினேஷன் சீன் எப்போ வரும், அப்பா கூட இருக்குற மாதிரியான காட்சிகள் எப்போ வரும்னு எதிர்பார்ப்போம்.”

வனஜா: “ ’மெட்டி ஒலி’ எங்களுக்குப் பிறந்த வீடு மாதிரி. ஷூட்டிங் போகணும்னாலே அக்காங்களைப் பார்க்கப் போறோம்ன்னு சந்தோஷமாவே இருக்கும். சாயங்காலம் ஆனா, ஷுட்டிங் நடக்குற வீடு இருக்க ஏரியா தெருவுல நடக்குறது, கிரிக்கெட் விளையாடுறது, பாட்டுப் பாடறதுன்னு செமையா இருக்கும்.”

உமா: “ரேவதிதான் எங்களுக்கு என்டர்டெய்னர். அவ பெயரே ‘மொக்க’ ரேவதிதான். எதாவது ஒரு மொக்க ஜோக் சொல்லிட்டே இருப்பா. நானும் ரேவதியும் கடைக்குட்டிங்க அப்படிங்கிறதால எதாவது ஒரு சம்பவம் நடந்தா நாங்கதான் மாட்டுவோம். அக்காங்க எஸ்கேப் ஆகிடுவாங்க. ரொம்ப சந்தோஷமான நாள்கள் அதெல்லாம். சீரியல் முடிஞ்சதுக்குப் பிறகுதான் நாங்க இன்னும் க்ளோஸ் ஆனோம். நல்லவேளை அப்போலாம் இந்த யூடியூப் மாதிரியான விஷயங்கள் இல்லை. இப்போ போய்டிருக்க சீரியல் பத்தியெல்லாம் கன்னாபின்னானு செய்திகள் போடுறாங்க. அதெல்லாம் எதுவும் இல்லாம வந்தது ஒரு நிம்மதி.”

ரேவதி: “நிறைய சீரியல்கள் பண்ணியாச்சு. ஆனாலும் இப்பவும் வெளிய போனா, ‘மெட்டி ஒலி’ பவானிதானேன்னு கேக்கறாங்க. எனக்கு மட்டுமல்ல எங்க எல்லாருக்குமே இந்த சீரியல்தான் அடையாளம். திருப்புமுனை. நான் நல்லா படிக்கிற, அப்பா பேச்சைக் கேட்குற பொண்ணா, அந்த சீரியல்ல இருப்பேன். நிஜத்துலயும் அப்படித்தான். ‘உன்ன மாதிரியே இருக்கணும்’னு பசங்க கிட்ட சொல்லிருக்கேம்மா’னு வெளிய நிறைய பேர் சொல்லுவாங்க. அதெல்லாம் கேட்கும்போது சந்தோஷமா இருக்கும்.”

‘உங்க இயக்குநர் திருமுருகன் பத்திச் சொல்லுங்க?’

திருமுருகன்
திருமுருகன்

“ஷூட்டிங் ஸ்பாட்ல பர்ஃபெக்ட்டா இருப்பார். ஆர்ட்டிஸ்ட் எல்லாரையும் உட்கார வச்சு இன்னைக்கு ஷெட்யூல்ல என்ன நடக்கப்போகுதுனு தெளிவா சொல்லிடுவார். சீரியல் முடியிற வரைக்கும் தனம், லீலா, பவானின்னு எங்களை அந்த கதாபாத்திரமாதான் பார்த்தார். அதேமாதிரி அவர் நடிக்க வரும்போது, நடிகரா மட்டும்தான் இருப்பார். டைரக்டர்ங்கறதை அங்க வெளிப்படுத்த மாட்டார்.”

சீரியல் முடிஞ்சதும் எப்படி இருந்தது? ’மெட்டி ஒலி -2’ வாய்ப்பிருக்கா?

‘மெட்டி ஒலி'
‘மெட்டி ஒலி'

“அதுக்குள்ள முடிஞ்சிருச்சான்னு எங்களால நம்பவே முடியலை. கடைசி நாள் எல்லாரும் பயங்கரமா அழுதுட்டோம். எங்க லக்கேஜ் எல்லாம் எடுத்து வச்சாச்சு. ஆனாலும், அந்த வீட்டை விட்டுப்போக மனசு இல்லாம இருந்தோம். திருமுருகன் சார் அப்பவே இல்லைன்னு சொல்லிட்டார். ஆனா, நாங்க அஞ்சு பேரும் மறுபடியும் ஒரு சீரியல்ல இணைஞ்சு வேலை பார்க்க ஆர்வமா இருக்கோம். அதுக்கான வாய்ப்பு வந்தா சந்தோஷம்.”