Published:Updated:

"என் கண் முன்னாடி அவ இறந்துபோவான்னு நான் நினைச்சுப் பார்க்கல" - தங்கை பற்றி 'மெட்டி ஒலி' வனஜா

`மெட்டி ஒலி' டீம்
News
`மெட்டி ஒலி' டீம்

" `வனஜா, நான் இப்படி இருக்கிறதுக்குப் போய் சேர்ந்திடலாம்னு' என்கிட்ட சொல்லியிருக்கா. அவளுக்கு மட்டுந்தான் அந்த வலி என்னன்னு தெரியும். அவ உடம்பு அவளுக்கு ஒத்துழைக்கல!"

'மெட்டி ஒலி' தொடரில் விஜி கதாபாத்திரத்தில் நடித்தவர், உமா மகேஸ்வரி. உடல்நலக் குறைவால் சில மாதங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்தார். 'மெட்டி ஒலி' தொடரில் லீலாவாக நடித்திருந்த நடிகை வனஜாவின் உடன்பிறந்த சகோதரிதான் உமா. அவருடைய இறப்பு குறித்து பல வதந்திகள் பரவி வந்த நிலையில், வனஜா அவருடைய யூடியூப் பக்கத்தில் இதுகுறித்த வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில்,

'மெட்டி ஒலி' உமா
'மெட்டி ஒலி' உமா

என்னுடைய சேனலுக்காக உமாவைப் பேட்டி எடுக்க ஆசைப்பட்டேன். எதார்த்தமான கலந்துரையாடல் மாதிரி அந்தப் பேட்டி இருக்கட்டும்னு நினைச்சு அவகிட்ட பர்மிஷன் கேட்டேன். அவளைப் பற்றிய விஷயங்கள் யாருக்கும் தெரியக்கூடாதுன்னு நினைப்பா. அதனால, அவள் சார்ந்த விஷயங்கள் எதுவா இருந்தாலும் அவகிட்ட பர்மிஷன் கேட்காம பண்ண மாட்டேன். அவகிட்ட கேட்டப்போ, உடம்பு சரியானதும் கண்டிப்பா பண்ணலாம்னு சொல்லியிருந்தா. ஆனா, இப்படி இந்த நிலைமையில் அவளைப் பத்தி வீடியோ பண்ணுவேன்னு கொஞ்சமும் நினைக்கவே இல்லை. ரொம்பவே கஷ்டமா இருக்கு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உமா எங்க கூடவே இருக்கிறதாகத்தான் நாங்க நினைக்கிறோம். என்னைவிட ரெண்டு வயசு சின்னவள். எங்கே போனாலும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் போவோம். உமா சின்ன வயசில இருந்தே , இது எனக்கு பிடிச்சிருக்கு, பிடிக்கலைன்னு எதுவுமே ஓப்பனா பேச மாட்டா.

'மெட்டி ஒலி' உமா
'மெட்டி ஒலி' உமா

திருமணத்துக்குப் பிறகும் சந்தோஷமா அவ வாழ்க்கையை கொண்டு போனா. குழந்தை இல்லைங்கிற வருத்தம் மட்டும் அவளுக்கு இருந்துச்சு. டெஸ்ட் பண்ணி பார்த்ததில் ரெண்டு பேருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லைன்னு தெரிஞ்சது. அவளுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம்! அதனால, கடவுள் எப்போனாலும் எனக்கு கொடுப்பார்னு நம்பிட்டு இருந்தா. ரெண்டு பேருமே சந்தோஷமா குடும்பம் நடத்தினாங்க. அவ ஆசைப்பட்ட எல்லாமும் அவ லைஃப்ல அவளுக்கு நடந்துச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவ மேல ஒரே ஒரு கோபம்தான். நிறைய விஷயங்கள் ஷேர் பண்ண மாட்டா. ரொம்ப யோசிப்பா. அவ மஞ்சள் காமாலைக்கு ட்ரீட்மென்ட் எடுத்து அது குணமாகிடுச்சு. அவ உடம்பு ஒத்துழைக்கலையா என்னன்னு எங்களுக்கே புரியலை. அவ வீட்டுக்கு போகும்போது எவ்வளவு ஆசைகள், கனவுகளோடு அவ வாழ்ந்திருக்கான்னு தெரியுது.

கணவருடன் 'மெட்டி ஒலி' உமா
கணவருடன் 'மெட்டி ஒலி' உமா

அவளுக்கு டிராவல் பண்ணுறதுனா ரொம்பப் பிடிக்கும். உணவு பிரியை. 3 மாசத்துக்கு முன்னாடிகூட ஹெல்த் சரியாகிடுச்சுன்னா இந்த இடங்களுக்கெல்லாம் டிராவல் பண்ணலாம். இந்த சாப்பாட்டை எல்லாம் டேஸ்ட் பண்ணலாம்னு சொன்னா. ஏன் கடவுள் இவ்வளவு சீக்கிரம் அவளைக் கூட்டிட்டு போனாருன்னு தெரியலை.

என் கண் முன்னாடி அவ இறந்து போவான்னு நான் கொஞ்சமும் நினைச்சுப் பார்க்கலை. வனஜா, நான் இப்படி இருக்கிறதுக்கு போய் சேர்ந்திடலாம்னு என்கிட்ட சொல்லியிருக்கா. அவளுக்கு மட்டும்தான் அந்த வலி என்னன்னு தெரியும். அவ உடம்பு அவளுக்கு ஒத்துழைக்கலை. அவகிட்ட அவ்வளவு பாசிட்டிவா பல விஷயங்கள் சொல்லிட்டே இருந்தேன். 'மெட்டி ஒலி 2' ஆரம்பிக்கப் போறாங்க சீக்கிரம் சரியாகி வான்னு பொய்கூட சொல்லியிருக்கேன்.

'மெட்டி ஒலி' உமா
'மெட்டி ஒலி' உமா

என் பையனுக்கு உமா இறந்ததே புரியலை. அவன் சித்திகிட்ட பேசட்டுமா அம்மான்னு கேட்குறான். அவன்கிட்ட என்ன சொல்றதுன்னே தெரியலை. சந்தோஷமா வாழ்ந்துட்டு போயிருக்கா. அவளுடைய ஆத்மா சாந்தியடையணும்!

அவளுடைய ஹெல்த் பற்றி நிறைய வதந்திகள் வந்துட்டு இருக்கு. அவளுக்கு உடம்பில் பிரச்னை இருந்தது உண்மைதான். அது என்னன்னு கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடியே அவ ரொம்ப வெக்ஸ் ஆகிட்டா. மஞ்சள்காமாலை ட்ரீட்மென்ட் எடுத்து சரியாகிடுச்சு. அவளுடைய ஹெல்த் ஏதோ அவளுக்கு ஒத்துழைக்கலை. அவளைப் பற்றி வரும் வதந்தி எதுவும் உண்மையில்லை!' எனக் கூறியிருக்கிறார்.