Published:Updated:

``தகாத மெசேஜ்னாலதான் போனை உடைச்சேன்; ஆனா, அடிச்சதா சொல்லிட்டாங்க!- `மின்னல்' தீபாவின் பாய் ஃப்ரெண்டு

`மின்னல்'  தீபா
`மின்னல்' தீபா

தற்போது, தீபாவை அடித்ததாகச் சொல்லப்படும் `சிட்டி' என்கிற அந்த இளைஞர், அன்று ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது குறித்து நம்மிடம் பேசினார்.

`யாரடி நீ மோகினி' சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டில், `மின்னல்' தீபாவை இளைஞர் ஒருவர் அடித்தார் என சில தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. அந்த விவகாரம் இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது. சம்பவம் நடந்த அன்றே `மின்னல்' தீபாவிடம் பேசியிருந்தோம்.

```சினிமாவுலயும் டி.வி-யிலயும் எவ்ளோ நாளா நடிச்சிட்டிருக்கேன். ஏதாவது சர்ச்சையில நான் சிக்கியிருக்கேனா... ஃப்ரெண்டுனு சொல்லிப் பழகியதாலதான் இந்த வினை. எனக்கும் என் கணவர் ரமேஷுக்கும் இடையில பிரச்னை இருக்குங்கிறதைத் தெரிஞ்சுகிட்டு, எங்க குடும்பத்துல குழப்பம் விளைவிக்க நினைக்கிறார், அந்தாளு'' என்ற தீபா, அன்று ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததையும் நம்மிடம் விவரித்திருந்தார்.

`மின்னல்' தீபா
`மின்னல்' தீபா

அப்போது, தீபாவின் கணவர் ரமேஷிடமும் பேசியிருந்தோம். ``அந்த நபர் தீபாவை ஒருதலையாக் காதலிச்சிருக்கார். ஷூட்டிங் ஸ்பாட்ல அன்னிக்கு பிரச்னை ஆனதும், உடனே நானும் ஸ்பாட்டுக்குப் போயிட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்த எல்லாருமே அவரை எச்சரித்து அனுப்பியதோட பிரச்னை முடிஞ்சிடுச்சு'' எனச் சொல்லியிருந்தார் ரமேஷ்.

இந்நிலையில் தற்போது, தீபாவை அடித்ததாகச் சொல்லப்படும் `சிட்டி' என்கிற அந்த இளைஞர், அன்று ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது குறித்து நம்மிடம் பேசினார்.

``சென்னையில இருக்கிற பிரபல ஹோட்டல்களோட `பப்'களுக்குப் போற பழக்கம் உள்ளவன் நான். அப்படிப் போறப்பதான் ஒரு ஹோட்டல்ல தீபாவை சந்திச்சேன். அங்க போன் நம்பர் பகிர்ந்துக்கிட்டு ஃப்ரெண்டானோம். அடிக்கடி சந்திச்சுப் பழகினதும், ஒருகட்டத்துல பர்சனல் விஷயங்களை எல்லாம் பேசத் தொடங்கினோம். அப்பத்தான் அவங்களோட திருமண வாழ்க்கையில நிறைய பிரச்னைகள் இருக்குன்னும், கணவரைப் பிரியணும்கிற முடிவுல இருக்கிறதாகவும் சொன்னாங்க. `விவாகரத்து பெற உதவி பண்ண முடியுமா'னு கேட்டாங்க. எனக்குத் தெரிஞ்ச வக்கீலை அறிமுகம் செஞ்சு வெச்சேன். அந்த வழக்கு இன்னும் நடந்திட்டிருக்கு.

அந்த ரிலேஷன்ஷிப் நல்லபடியாத்தான் போயிட்டிருந்தது. திடீர்னு என்ன நடந்ததோ, அவங்க நடவடிக்கைகள்ல சில மாற்றங்கள் தெரிய ஆரம்பிச்சது. அதுபத்தி கேட்டதுக்கு சரியான பதில் சொல்லலை. ஷூட்டிங் ஸ்பாட்ல தகராறு நடந்ததுக்கு ஒரு வாரம் முன்னாடியும் எங்களுக்கிடையில பிரச்னை ஏற்பட்டிருந்தது. அதனால நான் பேசறதை நிறுத்திட்டேன். உடனே அவங்க மறுபடியும் என்கிட்ட சரண்டராகி வந்தாங்க. `நீங்க பேசாட்டி தூக்க மாத்திரை போட்டுக்குவேன்'னு மிரட்டினாங்க. அதுக்குப் பிறகு பேசினேன். ரெண்டு நாள் கழிச்சு, மறுபடியும் என்னைப் பத்தி தப்புத் தப்பா என்னுடைய ஃப்ரெண்ட்ஸ் சிலர்கிட்ட சொல்லிட்டு, என்கூட பேசறதைத் தவிர்த்தாங்க.

`மின்னல்' தீபா
`மின்னல்' தீபா
`நான் லவ் பண்றது அவங்க புருஷனுக்கே தெரியும்!' - `மின்னல்' தீபாவுடன் ரகளை செய்த இளைஞர்

`` `ஏன் இப்படி நடந்துக்கறீங்க?'ன்னு கேட்கத்தான் அன்னிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனேன். அங்க போய் வெளியில இருந்து போன் பண்ணினா, மணிக்கணக்குல அவங்க போன் பிஸியாவே இருந்தது. நேர்ல பார்த்ததும், `யார்கிட்ட பேசினீங்க'ன்னு கேட்டு போனை வாங்கிப் பார்த்தா, ஒரு நம்பர்ல இருந்து ஆபாசமா மெசேஜ்லாம் வந்திருக்கு. `யார் அது'னு கேட்டதுலதான் வாக்குவாதம் ஆரம்பமானது. அவங்க சரியான பதிலைச் சொல்லாம, என்னையும் அங்க இருந்து வெளியேறச் சொன்னதால, ஆத்திரப்பட்டு அவங்க போனை உடைச்சேன், அவ்ளோதான். மத்தபடி நான் அவங்களை அடிக்கலை.

இதுதான் நடந்த நிஜம். ஆனா, அவங்க ஏதோ கணவனும் மனைவியும் ஒற்றுமையா வாழ்ந்திட்டிருக்கறதாகவும், நடுவுல நான் புகுந்து அவங்க குடும்பத்துல குழப்பம் விளைவிக்கறதாகவும், அப்பட்டமா பொய் சொல்லியிருக்காங்க'' என்கிறார் சிட்டி.

டி.ஆர்.பி-யை அதிகரிக்க, சீரியல்களின் ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் நடக்கிற இந்தக் களேபரங்களைப் படம்பிடிச்சாலே போதும் போல!

அடுத்த கட்டுரைக்கு