Published:Updated:

மோக்‌ஷிதா வெளியேறியதற்குக் காரணம் அர்ச்சனாவா? `மீனாட்சி பொண்ணுங்க' சீரியலில் நடந்தது என்ன?

மோக்‌ஷிதா

ஒரு ஆர்ட்டிஸ்ட் வெளியேறினா எப்படிங்க அடுத்த நாளே இன்னொரு நடிகரை ரீ-பிளேஸ் செய்ய முடியும்? ஆனா இங்க அது நடந்தது. - மோக்‌ஷிதா

மோக்‌ஷிதா வெளியேறியதற்குக் காரணம் அர்ச்சனாவா? `மீனாட்சி பொண்ணுங்க' சீரியலில் நடந்தது என்ன?

ஒரு ஆர்ட்டிஸ்ட் வெளியேறினா எப்படிங்க அடுத்த நாளே இன்னொரு நடிகரை ரீ-பிளேஸ் செய்ய முடியும்? ஆனா இங்க அது நடந்தது. - மோக்‌ஷிதா

Published:Updated:
மோக்‌ஷிதா
ஜீ தமிழ் சேனலில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'மீனாட்சி பொண்ணுங்க'. `வீடு' படத்தில் நடித்த முன்னாள் ஹீரோயின் அர்ச்சனா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவரும் இந்த சீரியலில் அர்ச்சனாவின் மகள்களில் ஒருவராக நடித்த மோக்‌ஷிதா திடீரென தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
பாலு மகேந்திராவின் 'வீடு' படத்தில் பானு சந்தர், அர்ச்சனா
பாலு மகேந்திராவின் 'வீடு' படத்தில் பானு சந்தர், அர்ச்சனா

கன்னடத்தில் ஒளிபரப்பாகி வரும் 'செம்பருத்தி' தொடரில் ஹீரோயினாக நடித்துவந்த மோக்‌ஷிதாவுக்குத் தமிழில் முதல் சீரியல் 'மீனாட்சி பொண்ணுங்க.' ஆசை ஆசையாய் தமிழ் சீரியல் வந்தவர் 100 எபிசோடுகள்கூட நடிக்காமல் தொடரில் இருந்து வெளியேறியதன் காரணம் குறித்துக் கேட்க, அவரைத் தொடர்பு கொண்டோம்.

''இந்த சீரியலில் நடிக்கக் கேட்டு என்னை அணுகிய போதே, கன்னடத்தில் ஒரு சீரியல் பண்ணிட்டிருக்கிறதைச் சொல்லிட்டேன். 'செம்பருத்தி' கன்னட வெர்சன் நல்லா போயிட்டிருக்கிற ஒரு சீரியல். 'பரவால்ல, மாதம் 15 நாள் கால்ஷீட்னு பிரிச்சு ரெண்டு சீரியலையும் பண்ணிடுங்க'ன்னு சொல்லித்தான் என்னைக் கமிட் செய்தாங்க. சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிற தமிழ் டெலிவிஷன் ஏரியாவுக்கு சந்தோஷமா வந்தேன்.

சீரியல் தொடங்கி கொஞ்ச நாள் நல்லபடியாத்தான் போச்சு. ஆனா, என்ன காரணம்னே தெரியலை, திடீர்னு கதை மாறுகிற மாதிரி தெரிஞ்சது. டி.ஆர்.பி.யோட தாக்கமான்னு எனக்குத் தெரியாது.

கதை மாறினதுலயே எனக்கு உடன்பாடில்லை. கமிட் செய்யறப்ப சொன்னதுக்கு நேரெதிரா கேரக்டர் மாறுதுன்னா யாருக்குத்தான் இஷ்டமா இருக்கும்? ஆசை ஆசையா நடிக்க வந்த முதல் தமிழ் சீரியல்ல இப்படியெல்லாம் நடக்குதேன்னு உள்ளுக்குள்ள அவ்வளவு வருத்தமா இருந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக்காம, எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு நடிச்சுட்டுதான் இருந்தேன்.

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில்
மீனாட்சி பொண்ணுங்க சீரியலில்

அந்த நேரத்துலதான் ஷூட்டிங் தேதியிலயும் பிரச்னை வந்தது. ஆரம்பத்துல சொன்ன மாதிரி மாசம் 15 நாள்னு நான் ஒதுக்கித் தந்தபடி ஷூட்டிங் அமையலை. ஷூட்டிங்னு சென்னையில இருக்கறப்ப சில நாள்கள் எனக்கான ஷூட் இருக்காது. அந்த நாள்களெல்லாம் சும்மாவே இருப்பேன். ஆனா இங்க இருந்து கிளம்பி பெங்களூரு போனா, மறுநாளே ஷூட்டிங் இருக்குன்னு வரச் சொல்லுவாங்க.

மோக்‌ஷிதா
மோக்‌ஷிதா

இதனால என்னோட கன்னட சீரியலின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அப்பக்கூட அந்த சீரியலின் தயாரிப்பாளர் எனக்கு ஆதரவா இருந்தாங்க. அதனால அந்த சீரியலுக்கான தேதிகளைக் கூட 'மீனாட்சி பொண்ணுங்க' தொடருக்காக ஒதுக்கி நடிச்சுக் கொடுத்ததெல்லாம் நடந்தது.

ஏதோ ஒரு முறை ரெண்டு முறை இந்த மாதிரி நடந்தாப் பராவல்ல, இதே தொடர்கதையா இருந்தா என்ன செய்ய முடியும்? அதனாலதான் சீரியலில் இருந்து வெளியேறுவதைத் தவிர வேற வழி எனக்குத் தெரியலை'' என்றவர், ஒரு வருத்தத்தையும் பதிவு செய்தார்.

'நான்கூட இந்தப் பிரச்னைகளெல்லாம் யதேச்சையா நடந்ததுன்னுதான் நம்பினேன். ஆனா நான் சீரியலில் இருந்து வெளியேறின மறுநாளே அந்தக் கேரக்டருக்கு புதுசா ஒரு ஆர்ட்டிஸ்ட்டைக் கொண்டு வந்ததைப் பார்த்தப்பதான் ரொம்பவே வருத்தமா இருந்தது. ஒரு ஆர்ட்டிஸ்ட் வெளியேறினா எப்படிங்க அடுத்த நாளே ரீப்ளேஸ் செய்ய முடியும்? ஆனா இங்க அது நடந்தது. இதைப் பார்த்ததும்தான், எல்லாமே பிளானோன்னு நினைக்கத் தோணுது'' என்கிறார்.

'மோக்‌ஷிதாவின் வெளியேற்றதுக்குக் கால்ஷீட் பிரச்னை மட்டும்தான் காரணமா' என சீரியல் சம்பந்தப்பட்ட இன்னும் சிலரிடம் பேசினோம்.

''அந்தப் பொண்ணு நல்ல பெர்ஃபாமர். இன்ட்ரஸ்டாதான் நடிச்சிட்டிருந்தாங்க. கால்ஷீட் பிரச்னைக்கு அந்தப் பொண்ணு தரப்புல தவறு இருக்கற மாதிரி தெரியலை. நடிகை அர்ச்சனா ஷூட்டிங்குக்குக் கொடுத்த தேதிகளில் அப்பப்ப பிரச்னை வரும். அவங்க சீனியர் நடிகைங்கிறதால அவங்ககிட்ட யாரும் எதுவும் பேச முடியறதில்லை. அந்த தேதிகளைச் சரிக்கட்ட மத்த சில ஆர்ட்டிஸ்டோட தேதிகளை மாத்தினா பிரச்னை ஆகாம என்னங்க செய்யும்” என்கிறார்கள் இவர்கள்.