Published:Updated:

``என் மனைவி, ராஜ்கிரண் மகள் இல்ல; அவர் மனைவியோட மகள்!'' - நடிகர் முனீஸ்ராஜா

முனீஸ்ராஜா, பிரியா, ராஜ்கிரண்

நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என சேனலுக்கு ராஜ்கிரண் தரப்பில் அழுத்தம் கொடுக்கப் பட்டதாகச் சொல்கிறார்கள் முனீஸ் ராஜா தரப்பு. ஆனாலும் சேனலில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

``என் மனைவி, ராஜ்கிரண் மகள் இல்ல; அவர் மனைவியோட மகள்!'' - நடிகர் முனீஸ்ராஜா

நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என சேனலுக்கு ராஜ்கிரண் தரப்பில் அழுத்தம் கொடுக்கப் பட்டதாகச் சொல்கிறார்கள் முனீஸ் ராஜா தரப்பு. ஆனாலும் சேனலில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

Published:Updated:
முனீஸ்ராஜா, பிரியா, ராஜ்கிரண்
மீண்டும் விஸ்ரூபமெடுத்திருக்கிறது நடிகர் ராஜ்கிரண் குடும்பப் பஞ்சாயத்து. நடிகர் ராஜ்கிரணின் மகள் பிரியா நாச்சியாருக்கும் சின்னத்திரை நடிகர் முனீஸ்ராஜாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது நினைவிருக்கலாம்.

இந்தத் திருமணத்தை நடிகர் ராஜ்கிரண் வீட்டில் ஆதரிக்காததால், முனீஸ்ராஜா-பிரியா இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜ்கிரண், 'பிரியா என்னுடைய மகளே அல்ல' எனக் கூறி தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.

அடுத்த சில நாட்களில் ஜீ தமிழ் சேனலில் இந்த ஜோடிக்கு நிஜமாகவே கல்யாணம் செய்து வைப்பது போன்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தினர்.

முனீஸ்ராஜா - பிரியா நாச்சியார்
முனீஸ்ராஜா - பிரியா நாச்சியார்

`இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது' என சேனலுக்கு ராஜ்கிரண் தரப்பில் அழுத்தம் கொடுக்கப் பட்டதாகச் சொல்கிறது முனீஸ்ராஜா தரப்பு. ஆனாலும் சேனலில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

இந்த நிலையில் கல்யாணம் முடிந்து பிரியா முனீஸ்ராஜா வீட்டுக்குச் சென்று விட்ட நிலையில், தற்போது முசிறி காவல் நிலையத்தில் முனீஸ்ராஜா - பிரியா மீது புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் ராஜ்கிரணின் மனைவி பத்மஜா.

புகாரில் முனீஸ்ராஜா தரப்பிலிருந்து பணம் கேட்டுத் தொந்தரவு செய்தவதாகக் கூறி இருப்பதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக முனீஸ்ராஜாவிடம் பேசினோம்.

''என்னுடைய மனைவி பிரியாவைப் பெத்த அப்பா இப்ப எங்க கூடத்தான் இருக்கிறார். அவரும் பிரியாவைப் பெத்த அம்மா  பத்மஜா என்கிற கதீஜாவும் பதினெட்டு வருஷமா கணவன் மனைவியாக வாழ்ந்தவங்க. ஆனா ஒருகட்டத்துல பத்மஜா தன்னுடைய கணவரை விட்டுப் பிரிந்து நடிகர் ராஜ்கிரணுடன் சேர்ந்து வாழ்ந்தாங்க. அப்ப என் மனைவி சின்னக் குழந்தை. அவங்களையும் கூடவே கூட்டிட்டுப் போயிட்டாங்க. அப்ப பத்மஜா மட்டுமில்லாம பிரியாவுமே நிறைய நகைகளை அணிந்திருந்திருக்காங்க. அந்த நகை நட்டுக்களோடவே ராஜ்கிரணுடன் போயிட்டாங்க.

ராஜ்கிரண்
ராஜ்கிரண்

இப்ப ராஜ்கிரண் பிரியாவை தன் மகளே இல்லைனு சொல்லிட்ட பிறகு, அவங்க போட்டிருந்த நகைகள் மட்டும் எதுக்கு அந்த வீட்டுல இருக்கணும்னுதான் பிரியாவைப் பெத்த அப்பாவும் பிரியாவும் சேர்ந்து அந்த நகைகளைக் கேட்டாங்க. அதுக்குத்தான் எங்க மீது புகார் தந்திருக்காங்க'' என்கிறார்.

ராஜ்கிரண் கொடுத்த புகாரின் மீதான விசாரணைக்கு ஆஜராக இரு தினங்களுக்கு முன் முனீஸ் ராஜாவும் பிரியாவும் முசிறி காவல் நிலையம் சென்ற போது ராஜ்கிரண் தரப்பில் யாரும் ஆஜராகவில்லையாம். மீண்டும் இன்று முனீஸ் - பிரியா ஆஜராகி இருக்கிறார்கள்.