Published:Updated:

`நம்பி வாய்ப்பு கொடுத்தாங்க, சொதப்பிருச்சேன்னு அழுதேன்!'-கண்ணின் மணி பாடல் சிரமத்தை விவரிக்கும் தினா

மகன் ராம் கிரணுடன் தினா

தமிழ் சின்னத்திரை வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய `சித்தி’ நெடுந்தொடரின் இரண்டாம் பாகம் நேற்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

`நம்பி வாய்ப்பு கொடுத்தாங்க, சொதப்பிருச்சேன்னு அழுதேன்!'-கண்ணின் மணி பாடல் சிரமத்தை விவரிக்கும் தினா

தமிழ் சின்னத்திரை வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய `சித்தி’ நெடுந்தொடரின் இரண்டாம் பாகம் நேற்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

Published:Updated:
மகன் ராம் கிரணுடன் தினா

சீரியல்கள் மக்களின் இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்ட காலகட்டம் இது. இந்தி டப்பிங் சீரியல்களின் வரவுக்குப் பிறகு தமிழ் சீரியல்களிலும் இந்தி சீரியல்களின் பாணி பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டது. ஆனாலும் சித்தி, மெட்டி ஒலி, கோலங்கள் போன்ற சீரியல்களின் கதாபாத்திரங்கள், பாடல்கள் உள்ளிட்ட அனைத்துமே இன்றளவும் மக்கள் நினைவில் நிலைத்து நிற்கின்றன. `சித்தி 2' அறிவிப்பு வந்ததும் சோஷியல் மீடியாவில் `கண்ணின் மணி' பாடல் தீ போலப் பரவியதே இதற்குச் சான்று.

சித்தி 2 சீரியலில் ராதிகா
சித்தி 2 சீரியலில் ராதிகா

22 வருடங்களுக்கு முன்பு வந்த சீரியலின் பாடல் இன்றும் அதே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பாடலின் மெட்டுக்குச் சொந்தக்காரரான இசையமைப்பாளர் தினாவிடமே இதுகுறித்து கேட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``சித்தி-2 தயாரிப்பு நிர்வாகம் சீரியல் ஒப்பந்தம் முடிந்ததும் எனக்கு போன் செய்து சித்தி 2 -வுக்குப் பாடல் இசையமைக்கணும்னு கேட்டாங்க. அதுவும், `கண்ணின் மணி' பாடல் மாதிரியே இருக்கணும்னு சொன்னாங்க. நானும் டியூன் போட்டு, பாடலையும் ஷூட் பண்ணி கலாநிதி மாறன் சாரிடம் போட்டுக் காட்டினேன். ஆனால், அவர் சித்தி பாடலை இந்தப் பாட்டு பீட் பண்ணாதுன்னு சொல்லிட்டார். கண்ணின் மணி பாடலே சித்தி-2 வுக்கும் டைட்டில் பாடலா வெச்சிடலாமான்னு கேட்டார். எல்லாரும் ஒருமனதா சேர்ந்து அந்தப் பாடலே இருக்கட்டும்னு முடிவு பண்ணோம். மேலும், சித்தி 2 சீரியலுக்குப் போட்ட டியூனை, சிச்சுவேஷன் பாடல்களுக்குப் பயன்படுத்திக்கலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க.

இசையமைப்பாளர் தினா
இசையமைப்பாளர் தினா

என் இசைப் பயணம், `கண்ணின் மணி' பாடல் மூலமாதான் தொடங்குச்சு. நான் கம்போஸ் பண்ண முதல் பாடல் அது. 22 வருஷத்துக்கு முன்னாடி நான் இசையமைத்த அதே பாடல் திரும்ப வரும்போது என் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகள் இல்ல. பாடலில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டாங்க. என்னுடைய படைப்பை என்னாலேயே பீட் பண்ண முடியலைன்னு நினைக்கும்போது நெகிழ்ச்சியா இருக்கு.

சித்தி பாடல் இசையமைக்கும்போது மோனோ டிராக்தான் இருந்துச்சு. இப்போ டிவிக்கு 5.1 சவுண்டிங் வந்துருச்சு. கண்ணின் மணி பாடலை 5.1 சவுண்டிங்ல கேட்கும்போது இன்றைய தலைமுறை பாடல் மாதிரி இருந்துச்சு.

கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து

இந்தப் பாடலை நாங்க ஸ்டூடியோல ரெகார்டு பண்ணல. தி.நகரில் இருக்கும் ரேடான் அலுவலகத்தில் பண்ணோம். வைரமுத்து சார் வரிகள் எழுத, நான் அதை ஹார்மோனியத்தில் டியூன் போட்டு பாடினேன். நான் பாடப் பாட வைரமுத்து வரிகள் எழுதினார்.

பாடலில் கர்னாடக சங்கீதத்தின் ஃபீல் இருக்கணும்னு நித்யா ஸ்ரீ மகாதேவனைப் பாட வைக்க முடிவு பண்ணேன். அந்தச் சமயத்தில் ஜீன்ஸ் படத்துக்காக அவங்க பாடிய கண்ணோடு காண்பதெல்லாம் பாடல் ஹிட் ஆகியிருந்தது. வெள்ளித்திரைக்குப் பாடுறவங்க சின்னத்திரைக்குப் பாடுவாங்களான்னு தயக்கம் இருந்துச்சு. ஆனா, அவங்க நாங்க கேட்டதும் உடனே ஓகே சொல்லிட்டாங்க.

நித்யா ஸ்ரீ மகாதேவன்
நித்யா ஸ்ரீ மகாதேவன்

அன்றைய காலகட்டத்தில் சிங்கிள் டிராக் ரெகார்டிங் முறைதான் இருந்துச்சு. ஒரே டிராக்கா ரெகார்டு பண்ணணும். பாடல் ரெகார்டிங் முடிந்து நித்யா ஸ்ரீ வெளிநாடு கிளம்பிட்டாங்க. நாங்க திரும்பவும் பாட்டை போட்டுப் பார்த்தா வாய்ஸ் டெலிட் ஆகியிருந்தது. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல.

என்னை நம்பி பெரிய வாய்ப்பைக் கொடுத்திருக்காங்க. இப்படி சொதப்பிருச்சேன்னு கலங்கிட்டேன். ராதிகா மேடம்கிட்ட நடந்ததைச் சொன்னேன். அவர், `என்ன ஆனாலும் பரவாயில்ல.. நித்யஸ்ரீதான் பாடணும், அவங்க திரும்ப இந்தியா வரவரைக்கும் காத்திருக்கலாம்'னு கூலா சொன்னாங்க.

சித்தி பாடல்
சித்தி பாடல்

நித்ய ஸ்ரீ ஒரு வாரத்தில் இந்தியா வந்து பாடல் பாடிக் கொடுத்தாங்க. அந்தப் பாடல் ரெகார்டிங் முடியுற வரைக்கும் நிறைய தடைகள் ஏற்பட்டுச்சு. ஆனால், சீரியல் வெளிவந்ததும் அவ்வளவு பாராட்டுகள் வந்துச்சு. சன் டி.வி எனக்கு மிகப்பெரிய பிளாட்பார்மை ஏற்படுத்திக் கொடுத்தது. வெட்கத்தைவிட்டு சொல்லணும்னா வெள்ளித்திரையில் நான் போட்ட மன்மத ராசா பாடலைவிடவும் எனக்கு கண்ணின் மணி பாடல்தான் பேர் வாங்கிக் கொடுத்துச்சு. இது வேற லெவல் ரீச் கொடுத்தது.

இன்னொரு விஷயம் சொல்லியே ஆகணும். கண்ணின் மணி பாடலில் சித்தி-ன்னு ஒரு குழந்தை வாய்ஸ் வரும்ல அது என் மகன் ராம்கிரணுடையது.

இசையமைப்பாளர் தினா
இசையமைப்பாளர் தினா

நாலு வயசு இருக்கும்போது ரெகார்டு பண்ண குரல் அது. இப்போ அவருக்கு 26 வயசு ஆகுது. மீண்டும் அந்தப் பாட்டை, என் மகனின் குரலை டிவி-யில கேட்க என் குடும்பமே காத்திட்டிருக்கு" என்றார் நெகிழ்ச்சியோடு.