Published:Updated:

``பாப்பா வந்ததும் எல்லாருக்கும் பந்திச் சாப்பாடு!'' - வளைகாப்பு பூரிப்பில் `மைனா' நந்தினி

நந்தினி, கணவருடன்...
நந்தினி, கணவருடன்...

கர்ப்பமாக இருக்கும் மைனா நந்தினிக்கு வளைகாப்பு நடந்துள்ளது.

நடிகை 'மைனா' நந்தினிக்கு வளைகாப்பு முடிந்துள்ளது. சில தினங்களுக்கு முன் நடந்த இந்த வளைகாப்பு நிகழ்ச்சி லாக்டௌன் காரணமாக மிகவும் எளிமையான முறையில் நடந்துள்ளது.

'சரவணன் மீனாட்சி' சீரியலில் 'மைனா' என்கிற கேரக்டரில் வந்து சின்னத்திரையில பிரபலமானவர் நந்தினி. சீரியல்களில் நடித்துக் கொண்டே சில படங்களிலும் தலை காட்டினார். இவருக்கும் சீரியல் நடிகர் யோகேஷ்வராமுக்கும் கடந்தாண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

'மைனா' நந்தினி
'மைனா' நந்தினி

இந்நிலையில சில தினங்களுக்கு முன், தான் அம்மா ஆகப் போகும் சந்தோஷச் செய்தியை சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார் நந்தினி.

செப்டம்பர் 6... `பிக் பாஸ்' ஆரவ் கல்யாணம்... பொண்ணு யார்  தெரியுமா?

தற்போது எட்டாவது மாதத்தில் வளைகாப்பு நடந்துள்ளது. இது தொடர்பாக நந்தினி மற்றும் அவரது கணவர் யோகேஷ் இருவரிடமும் பேசினேன். ''எந்த நிகழ்ச்சினாலும் இப்ப வீட்டுக்குள்ள மட்டும்தான் வச்சு ஆகணும்னு ஆகிடுச்சு இல்லையா... அதனாலதான் சிம்பிளாப் பண்ணிட்டோம். நல்லபடியா பாப்பா பிறந்த வந்த பிறகு ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும கூப்பிட்டு பந்திச் சாப்பாடு போட்டு அசத்தலா ஒரு ஃபங்ஷன் நடத்திடலாம்னு பிளான்!" என்றார்.

நந்தினி. கணவருடன்
நந்தினி. கணவருடன்

நந்தினியின் சொந்த ஊர் மதுரை என்றாலும் தற்போது அவரது பெற்றோரும் சென்னையில்தான் இருக்கிறார்கள். எனவே பிரசவம் சென்னையில்தானாம்.

அடுத்த கட்டுரைக்கு