Published:Updated:

``இன்னும் ஒரு ஆபரேஷன்... அப்புறம் ஆபரேஷன் ஸ்மைலிதான்!'' - `நானும் ரவுடிதான்' லோகேஷ்

‘ஆதித்யா’ லோகேஷ்
‘ஆதித்யா’ லோகேஷ்

அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு, தற்போது உடல் நலம் தேறிவரும் லோகேஷிடம் பேசினேன்.

'ஆதித்யா' சேனலின் `மொக்கை ஆஃப் தி டே’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லோகேஷ், `நானும் ரெளடிதான்’, `ஜாம்பி’ எனப் பல படங்களில் நடித்திருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவர் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டார் என்கிற செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனது முதல் அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு, தற்போது உடல் நலம் தேறிவரும் லோகேஷிடம் பேசினோம்.

``கையொப்பம், கேரியர் சாப்பாடு, ஆனா அந்த ஃபீல்!'' - எப்படியிருந்தது சீரியல் ஷூட்டிங்கின் முதல் நாள்?!

``ஃப்ரெண்ட்ஸோடு வெளியில போயிட்டு நைட்டுதான் வீட்டுக்கு வந்தேன். அதுவரைக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. வீட்டுக்கு வந்துட்டு மொபைல் சார்ஜ் போடும்போது, ரெண்டு, மூணு முறை மொபைலைப் பிடிக்க முடியாம கீழ விழுந்துச்சு. `என்னடா இது... புதுசா நடக்குதே’னு நினைச்சுக்கிட்டே போனை சார்ஜ் போட்டுட்டு படுத்திட்டேன். காலையில எழுந்திருக்கும் போதுதான், ப்ரெயின் ஸ்ட்ரோக் ஆகி என்னோட இடது காலும், கையும் செயலிழந்துப்போச்சுனு தெரிய வந்தது. எனக்கு ரொம்ப நாளா பிளட் பிரஷர் இருந்திருக்கு. அது எனக்கு தெரியவேயில்லை. அதுமட்டுமல்லாமல் நான் குண்டா இருக்கிறதுனால, ஒபிசிட்டி பிரச்னையும் இதுக்கு காரணம்னு டாக்டர்ஸ் சொன்னாங்க.

‘ஆதித்யா’ லோகேஷ்
‘ஆதித்யா’ லோகேஷ்

ஆபரேஷன் முடிஞ்சு 10 நாள் வரைக்கும் எனக்கு என்ன ஆச்சுன்னே தெரியாது. `பிளட் பிரஷர் அதிகமாகியிருக்கு போல; சீக்கிரம் வீட்டுக்கு போயிடுவோம்’னு நினைச்சேன். அப்புறம்தான் எனக்கு என்ன நடந்துச்சுன்னே சொன்னாங்க. மூளைல ரத்தம் கட்டியிருந்ததுக்காக ஆபரேஷன் பண்ணும்போது, கொஞ்சமா ஸ்கல்லை எடுத்துட்டுத்தான் ஆபரேஷன் பண்ணுனாங்க. இப்போ அந்த ஸ்கல்லை திரும்ப வைக்கிறதுக்காக ஓர் ஆபரேஷன் மட்டும் இருக்கு. முதல் ஆபரேஷன் முடிஞ்சதுக்கு அப்புறமே, நான் நல்லா ஆகிட்டேன். என்னோட தோற்றம் மட்டும் கொஞ்சம் மாறியிருக்கு. ரெண்டாவது ஆபரேஷன் முடிஞ்சிடுச்சுன்னா, மீண்டும் பழைய மாதிரி வந்திடுவேன்னு நம்பிக்கை இருக்கு.

இன்னும் சொல்லப்போன, ஆபரேஷன் முடிஞ்சதுக்கு அப்புறம்தான், காமெடி சென்ஸ் இன்னும் அதிகமாகியிருக்கு. என்னை பார்ப்பதற்காக விஜய் சேதுபதி அண்ணா ஹாஸ்பிட்டலுக்கு வந்தப்போ எடுத்த வீடியோவைப் பார்த்திருந்தால், உங்களுக்கே அது தெரிஞ்சிருக்கும். `சோகமா வந்தேன்; சிரிக்க வெச்சு அனுப்புறியேடா’னு சேது அண்ணா சொல்லியிருப்பார். அவர் மட்டுமல்ல, என்கூட பழகுனவங்களும் அதைத்தான் சொல்றாங்க. என்னைப் பார்க்குறவங்க, என் நிலைமை பார்த்துட்டு பரிதாபப்படக் கூடாதுனு நினைச்சுத்தான், அவங்களை சிரிக்க வைக்கணும்னு நினைச்சேன். டாக்டர், நர்ஸ்னு எல்லார்கிட்டேயும் செம ஜாலியா பேசிட்டு இருந்தேன்.

விஜய் மேனேஜர், `மாஸ்டர்' இணை தயாரிப்பாளர்... வெளியேற்றப்பட்டாரா ஜெகதீஷ்?

முதல் ஆபரேஷன் முடிஞ்சதுல இருந்து முறையா பிஸியோதெரப்பி பண்ணிட்டு இருக்கேன். கால் சீக்கிரமே நடக்க வந்திருச்சு. கைக்கும் இப்போ கொஞ்ச கொஞ்சமா வொர்க் அவுட் பண்ணி, சரி பண்ணிட்டு இருக்கேன். மருத்துவ செலவுகளுக்கு பெரிய தொகை தேவைப்பட்டுச்சு. டிவில இருந்து ஹெல்ப் பண்ணாங்க. அதுமட்டுமல்லாமல், சிவகார்த்திகேயன் அண்ணா, விஜய் சேதுபதி அண்ணாவும் ஆபரேஷனுக்கு தேவையான பணத்தைக் கொடுத்தாங்க. அப்புறம், சேனல் நண்பர்கள் நிறைய பேர் உதவி பண்ணாங்க. அவங்க சோஷியல் மீடியாவில் எனக்கு இப்படி ஆனதையும், பணத்தேவை இருக்குறதையும் போஸ்ட் பண்ணியிருந்தாங்க. அதைப்பார்த்துட்டு நிறைய மக்கள் என் அக்கவுன்ட்டுக்குப் பணம் அனுப்பியிருந்தாங்க. இவ்வளவு நாள் மக்களை மகிழ்விச்சதுக்கு பரிசா அவங்க என் உயிரையே எனக்கு காப்பாற்றி கொடுத்திருக்காங்க.

இந்தச் சம்பவத்தில் இருந்து நான் கத்துக்கிட்ட விஷயம் என்னென்னா, நம்ம வாழ்க்கையில எப்போ வேணும்னாலும் எது வேணும்னாலும் நடக்கலாம். அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத வாழ்க்கைனு இந்தச் சம்பவம் எனக்குப் புரிய வெச்சிடுச்சு. இன்னொரு விஷயம், `தமிழன்’ படத்துல `சின்ன, சின்ன விஷயங்களுக்கும் சட்டம் இருக்கு; அதை தெரிஞ்சு வெச்சுக்கோங்க’னு சொல்லியிருப்பாங்க. அதே மாதிரி, பெரிய பெரிய வியாதிகளோட அறிகுறிகள் என்னான்னு எல்லாரும் தெரிஞ்சு வெச்சுக்கணும். ஏன்னா, எனக்கு ஸ்ட்ரோக் வரப்போறதுக்கான அறிகுறியாத்தான் என் கையில் இருந்து மொபைல் நிக்காம விழுந்திருக்கு. ஸ்ட்ரோக்கிற்கான அறிகுறிதான் இதுனு எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா, நான் முன்னாடியே ஹாஸ்பிட்டல் போயிருப்பேன். அப்படி போயிருந்தால், என் ஸ்கல்லை ஓப்பன் பண்ணாமலேயே ஆபரேஷன் பண்ணியிருக்கலாம்னு டாக்டர் சொன்னாங்க. அதனால, எல்லாருக்கும் வியாதிகளோட அறிகுறிகள் என்னென்னனு தெரிஞ்சிக்கிறது அவசியம். இதுமட்டுமல்லாமல், எனக்கு இந்தச் சம்பவம் மூலமா ஒரு பாக்கியமும் கிடைச்சது. நாம குழந்தையா இருக்கும்போது நம்ம அம்மா நம்மளை எப்படி பார்த்துக்கிட்டாங்கனு நமக்குத் தெரியாதுல. ஆனால், என்னை எப்படி கவனிச்சிருப்பாங்கனு நான் இந்தச் சம்பவம் நடந்ததுக்கு அப்புறம் தெரிஞ்சுக்கிட்டேன். நான் உண்மையிலேயே ரொம்ப லக்கி’’ என்றவரிடம், `உங்களின் அடுத்தகட்ட பிளான் என்ன’ என்று கேட்டதும்,

மொக்கை ஆஃப் தி டே
மொக்கை ஆஃப் தி டே

"`ஆதித்யா’ சேனல்ல என்னை வெச்சு ஒரு புது ஷோ ஆரம்பிக்கிறதுக்கான வேலைகள் போச்சு. சில எபிசோடுகளும் எடுத்து வெச்சுட்டோம். அதை அறிவிக்கிறதுக்குள்ள எனக்கு இப்படி ஆனதால, `நீ சரியாகி வந்ததும் இந்த ஷோவை புதுசா ஆரம்பிச்சிடலாம்’னு சேனல்ல இருந்து சொன்னாங்க. நானும் சீக்கிரம் சரியாகிட்டு ஷோ பண்ணப் போகணும். மக்கள் எல்லோரையும் செமயா சிரிக்கவைக்கப்போறேன்’’ என்று சொன்ன லோகேஷின் வார்த்தைகளில் அவ்வளவு நம்பிக்கை.

சீக்கிரம் வாங்க நண்பா!

அடுத்த கட்டுரைக்கு