சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

விகடன் TV: “சினிமா ஆசையும் இருக்கு!”

அஷ்வினி
பிரீமியம் ஸ்டோரி
News
அஷ்வினி

சீரியலுக்கும் என்னுடைய கேரக்டர் லுக்கிற்கு ஏற்ற மாதிரியான காஸ்ட்யூம் வாங்கிறதுக்கே நிறைய செலவு பண்ணுவேன்னா பாத்துக்கோங்களேன்.

“ஏற்கெனவே பிரவீன் சார், ‘பாரதி கண்ணம்மா’, ‘ராஜாராணி’ சீரியலுக்காக என்னைக் கேட்டாங்க. அப்ப எனக்கே என் மேல நம்பிக்கை இல்லாததனால மறுத்துட்டேன். மறுபடியும் அவர் இந்த சீரியலுக்காக ஆடிஷனுக்குக் கூப்பிட்டாங்க. இந்த முறை ஒரு முயற்சி பண்ணிப் பார்க்கலாம் என்கிற எண்ணம் எனக்கு இருந்ததனால டெஸ்ட் ஷூட்டுக்குப் போயிருந்தேன். திடீர்னு ஒருநாள் காலையில் போன் பண்ணி செலக்ட் ஆகிட்டதா சொன்னாங்க. ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு” உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார் அஷ்வினி. விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் `நம்ம வீட்டு பொண்ணு’ தொடரின் நாயகி.

விகடன் TV: “சினிமா ஆசையும் இருக்கு!”

“சொந்த ஊர் பெங்களூரு. ஒன்பதாவது படிக்கும்போதே மாடலிங் துறைக்குள் வந்துட்டேன். அப்புறம் கன்னட மொழியில் சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகிட்டேன். ஜீ தமிழில் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சி மூலமா தமிழ் மீடியாவிற்குள் நுழைஞ்சேன். சின்ன வயசுல இருந்தே டான்ஸ்னா ரொம்பப் பிடிக்கும். காலில் ஏற்பட்ட விபத்து காரணமா தொடர்ந்து ஆட முடியலைங்கிறதனால அந்த நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேற வேண்டியதாகிடுச்சு.

விகடன் TV: “சினிமா ஆசையும் இருக்கு!”

அதுக்கப்புறம் மூன்று வருஷம் தொடர்ந்து மாடலிங்கில் மட்டுமே கவனம் செலுத்தினேன். அதுக்குப் பிறகுதான் இந்த சீரியல் அனுபவம். சீரியலைப் பொறுத்தவரை என்னுடைய காஸ்ட்யூமிற்காக ரொம்பவே மெனக்கெடுவேன். நான் ஃபேஷன் டிசைனிங் படிச்சிருக்கிறதனால காஸ்ட்யூம் விஷயத்தில் கவனமா இருப்பேன். சீரியலுக்கும் என்னுடைய கேரக்டர் லுக்கிற்கு ஏற்ற மாதிரியான காஸ்ட்யூம் வாங்கிறதுக்கே நிறைய செலவு பண்ணுவேன்னா பாத்துக்கோங்களேன். இப்போதைக்கு இந்த சீரியலில் மட்டுமே முழுக்கவனமும் செலுத்துறேன். சினிமா ஆசையும் இருக்கு. நல்ல கதைக்களம் அமைஞ்சா நிச்சயம் வெள்ளித்திரையிலும் சந்திப்போம்” என்று புன்னகைக்கிறார்.