சினிமா
Published:Updated:

விகடன் TV: “மாடலிங் பண்றவங்களுக்கு நடிக்கத் தெரியாதா?”

சுர்ஜித்
பிரீமியம் ஸ்டோரி
News
சுர்ஜித்

செட்ல எல்லாரும் செம ஜாலியா இருப்பாங்க. நானும் வெங்கட்டும் பயங்கர குளோஸ் ஃப்ரெண்ட்ஸ் மாதிரி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நம்ம வீட்டுப் பொண்ணு’ தொடரின் ஹீரோ சுர்ஜித், புதுமுகமாக இருந்தாலும் மக்கள் தன்னைக் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள் என்ற மகிழ்ச்சியில் இருந்தவரை ஒரு பிரேக்கில் சந்தித்தேன்.

“சொந்த ஊர் கேரளாவாக இருந்தாலும் படிச்சது, வளர்ந்தது எல்லாமே சென்னைதான். பி.இ முடிச்சதும் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கணுங்கிறதனாலேயே எம்.பி.ஏ ஹெச்.ஆர் படிச்சேன். படிப்பு முடிஞ்சதும் ‘cognizant’ ஐ.டி கம்பெனியில் ஹெச்.ஆராக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே வேலை பார்த்திட்டிருக்கும்போதே மாடலிங்கும் பண்ண ஆரம்பிச்சிட்டேன். கிட்டத்தட்ட ஆறு வருஷம் ஐ.டி-யில் வேலை பார்த்தேன்.

மாடலிங் பண்றவங்களுக்கு நடிக்கவே தெரியாதுன்னு என் முன்னாடியே சொல்லுவாங்க. அதுக்காகவே நடிகனா நிரூபிக்கணும்னு தோணுச்சு. அதனால ஷார்ட் பிலிம், விளம்பரப்படங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். ஆர்ட்டிஸ்ட் கேப்ரியல்லா அக்காதான் எனக்கு ஆக்டிங் டிரெயினிங் கொடுத்தாங்க.

விகடன் TV: “மாடலிங் பண்றவங்களுக்கு நடிக்கத் தெரியாதா?”

கலர்ஸ் தமிழில் ‘உயிரே 2’ சீரியலில் ஹீரோவுக்குத் தம்பியா நடிச்சேன். ‘கள்வனின் காதலி’ன்னு ஒரு வெப் சீரிஸில் நடிச்சேன். அதுல என்னைப் பார்த்துட்டு என் லுக் அவருடைய சீரியலுக்கு செட் ஆகும்னு தோணினதால பிரவீன் சார் என்னைக் கூப்பிட்டார். எனக்கு லுக் டெஸ்ட் பண்ணிட்டு லீடு ரோலில் நடிக்க ஓகே பண்ணிட்டாங்க. அப்படித்தான் ‘நம்ம வீட்டு பொண்ணு’ சீரியல் வாய்ப்பும் கிடைச்சது.

செட்ல எல்லாரும் செம ஜாலியா இருப்பாங்க. நானும் வெங்கட்டும் பயங்கர குளோஸ் ஃப்ரெண்ட்ஸ் மாதிரி. ஒருத்தரையொருத்தர் ஜாலியா கலாய்ச்சிட்டு இருப்போம். நிஜ ஃபேமிலி பீல் தான் செட்டுக்குள்ள இருக்கும். என்னைப் பெற்ற அம்மாவைவிட சீரியலில் எனக்கு அம்மாவாக நடிக்கிறவங்களைத்தான் அதிகமா நான் ‘அம்மா’ன்னு கூப்பிட்டிருக்கேன்.

ஆரம்பத்தில் ஐ.டி வேலையையும் பார்த்துட்டு நடிச்சிட்டிருந்தேன். இந்த சீரியலில் கமிட் ஆனதும் இதுக்கே டைம் சரியா இருக்குன்னு வேலையை விட்டுட்டேன். அருள்நிதி சாருடைய ‘தேஜாவு’ படத்திலும் நடிச்சிருக்கேன்” என்று புன்னகைக்கிறார்.