Published:Updated:

`` `லக்ஷ்மி' ஷார்ட் ஃபிலிமைப் பார்த்துதான் `சித்தி 2'ல நடிக்கக் கூப்பிட்டாங்க!" - நந்தன்

நந்தன் லோகநாதன்

`லக்ஷ்மி' குறும்படத்தால் ஒரே நாளில் டிரெண்ட் ஆனவர் நந்தன் லோகநாதன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது `சித்தி 2' சீரியலில் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார்.

`` `லக்ஷ்மி' ஷார்ட் ஃபிலிமைப் பார்த்துதான் `சித்தி 2'ல நடிக்கக் கூப்பிட்டாங்க!" - நந்தன்

`லக்ஷ்மி' குறும்படத்தால் ஒரே நாளில் டிரெண்ட் ஆனவர் நந்தன் லோகநாதன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது `சித்தி 2' சீரியலில் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார்.

Published:Updated:
நந்தன் லோகநாதன்

`லக்ஷ்மி' குறும்படத்தால் ஒரே நாளில் டிரெண்ட் ஆனவர் நந்தன் லோகநாதன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது `சித்தி 2' சீரியலில் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். அதோடு சேர்த்து பல்வேறு விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

நந்தன் லோகநாதன்
நந்தன் லோகநாதன்

``சித்தி 2 வாய்ப்பைப் பத்திச் சொல்லுங்க?"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``சில மாதங்கள் முன்னாடி, எனக்கு ரேடான் மீடியாவுல இருந்து போன் வந்துச்சு. நேர்ல மீட் பண்ணணும்னு வரச் சொல்லியிருந்தாங்க. ராதிகா மேடம் நடிக்கிற சீரியல்ல நடக்கணும்னு கேட்டாங்க. `சித்தி 2' டைட்டில் அப்போ ஃபைனல் ஆகலை. நானும் ஓகே சொல்லிட்டேன். அதுக்கு அடுத்த வாரம் ரேடான் ஆபீஸ் போனப்போ ராதிகா மேமும் வந்திருந்தாங்க. `நான் உங்களோட லக்‌ஷ்மி சீரியல்ல பார்த்தேன். நல்லா நடிச்சிருந்தீங்க. அதைப் பார்த்துதான் இந்த சீரியல்ல உங்களை நடிக்க செலக்ட் பண்ணோம்’னு சொன்னாங்க. எனக்கு சந்தோஷம் தாங்க முடியல.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`` 'லக்ஷ்மி' வந்து ரெண்டு வருடங்கள் ஆகிடுச்சு. அதுல நடிச்ச என்னை ஞாபகம் வெச்சுக் கூப்பிடுறது பெரிய விஷயம். `லக்ஷ்மி' குறும்படத்துக்குப் பிறகு நிறைய பட வாய்ப்புகளும், சீரியல் வாய்ப்புகளும் வந்துச்சு. ஆனா, `லக்ஷ்மி' ரோல் மாதிரியேதான் எல்லாம் இருந்தது. என்னை ஏற்கெனவே மக்கள் அந்த ஷேட்ல பார்த்துட்டாங்க. திரும்பவும் அதே கதாபாத்திரத்துல நடிக்கப் பிடிக்கல. அதனால வேணாம்னு சொல்லிட்டேன். இதுக்கு நடுவுல `சித்தி 2' வாய்ப்பு வரவும் உடனே ஓகே சொல்லிட்டேன்."

நந்தன் லோகநாதன்
நந்தன் லோகநாதன்

``ராதிகா மேமோட சீரியல்களை சின்ன வயசுல இருந்து பார்த்திருக்கேன். என்னோட அம்மாவும் நானும் சேர்ந்து `சித்தி'யை ஒரு எபிசோடு மிஸ் பண்ணாமப் பார்த்திருக்கோம். `சித்தி 2'வை டிவியில பார்த்ததும் என்னோட அம்மாவுக்கு ஒரே சந்தோஷம். என் மனைவி வீட்டுலயும் மாத்தி மாத்தி போன் போட்டு வாழ்த்து சொன்னாங்க. என் மனைவியோட அக்கா லண்டன்ல இருக்காங்க. `உங்க தங்கச்சி வீட்டுக்காரர் `சித்தி 2'ல நடிக்கிறார்னு அவங்க வசிக்கிற இடத்துல இருக்கிற தமிழர்கள் வாழ்த்தினாங்களாம். இதெல்லாம் வேற சீரியல்ல நடிச்சிருந்தா நடந்திருக்காது. ஏன்னா, `சித்தி'ங்கிற சீரியலுக்கு மக்கள் மத்தியில இருக்கிற ரீச்சே வேற."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``நடிப்புத் துறைக்கு வந்தது எப்படி?"

நந்தன் லோகநாதன்
நந்தன் லோகநாதன்

``நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை மந்தவெளிதான். லயோலா காலேஜ்லதான் படிச்சேன். நடிப்புத்துறைக்கு வருவேன்னு எதிர்பார்க்கவே இல்லை. 2007-ல் காலேஜ் படிச்சிட்டு இருந்த சமயம், என் ஃப்ரெண்டு, பாலுமகேந்திர சாரை சும்மா சந்திக்கக் கூட்டிட்டுப் போனார். அவர் என்னைப் பார்த்ததும், `உனக்கு நடிப்புல ஆர்வம் இருக்கா'னு கேட்டார். `எனக்கு அதுபத்தி ஒண்ணுமே தெரியாது'னு சொன்னேன். `சொல்லிக் கொடுத்தா நடிப்பியா'னு கேட்டார். `நடிப்பேன்'னு சொன்னேன். அப்புறம் போட்டோ ஷூட் எடுக்கச் சொன்னார். நானும் எடுத்துக்கிட்டேன்."

``போட்டோக்களைப் பார்த்துட்டு என்னை செலக்ட் பண்ணார். எனக்கு என்ன நடக்குதுன்னே புரியல. அப்புறம்தான், `அவர் எழுதிட்டு இருக்கிற அடுத்த கதையில நீங்க முக்கியமான ரோல்ல நடிக்கப்போறீங்க'னு சொன்னாங்க. 45 வயசு பெண்ணோட கல்லூரி மாணவனுக்கு ஏற்படுற அன்பைப் பத்தின கதை அது. கல்லூரி மாணவன் ரோல்ல நடிக்க ஆள் தேடிக்கிட்டிருந்தப்பதான் நான் அவரைச் சந்திச்சேன். என்னைப் பார்த்ததும் அவருக்குப் புடிச்சிப்போயிடுச்சு. உடனே செலக்ட் பண்ணிட்டார்."

நந்தன் லோகநாதன்
நந்தன் லோகநாதன்

``அதுக்கப்புறம் அடிக்கடி அவரைச் சந்திச்சேன். அவர் சினிமாவைப் பத்திப் பேசப் பேச எனக்கு நடிப்பு மேல ஆர்வம் அதிகமாகிடுச்சு. இதுதான் என் வாழ்க்கைனு முடிவு பண்ணிட்டேன். ஆனா, அந்தப் படத்தைப் பாதியில டிராப் பண்ணிட்டாங்க. ரொம்ப அப்ஸட்டாகி பாலுமகேந்திர சார்கிட்ட, `உங்க படமே டிராப் ஆகிடுச்சு. நான் எம்.பி.ஏ சேரப் போறேன்'-னு சொன்னேன். அதுக்கு அவர், `அப்படிச் சொல்லாத. உன் போட்டோ ஷூட் பார்த்தேன். உன் கண்கள் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. உனக்கு சினிமாவுல நல்ல எதிர்காலம் இருக்கு. உனக்குள்ள ஒரு நடிகன் இருக்கான். நீ தொடர்ந்து முயற்சி பண்ணு’னு சொன்னார். அவர் அன்னைக்குக் கொடுத்த நம்பிக்கைதான் இப்ப வரைக்கும் என்னச் சோர்ந்து போகாம வெச்சிட்டிருக்கு."

``நான் சோர்வா இருக்கும்போது, அவர் சொன்ன அந்த வார்த்தைகள் எனக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கும். அவரோட இழப்பு எனக்குப் பெரும்சோகத்தக் கொடுத்துச்சு. அவ்ளோ பெரிய மனுஷன், நம்பிக்கையோட நீ சினிமாவை விட்றாதனு சொல்லியிருக்கார். ஏதோ ஒரு விஷயம் என்கிட்ட அவருக்குப் பிடிச்சிருக்கு. அது என்னனு கண்டுபிடிச்சு மெருக்கேத்தணுமே தவிர, வேற ஃபீல்டு போகலாம்னு யோசிக்கக் கூடாதுனு எனக்கு நானே சொல்லிப்பேன். என் வாழ்க்கை முழுக்க அந்தத் தேடல் இருக்கும்.’’

நந்தன் லோகநாதன்
நந்தன் லோகநாதன்

`` என்னை நம்பிக் கொடுக்கும் கதாபாத்திரங்களை நிறைவா நடிச்சுக் கொடுக்கணும். நடிப்பு துறையில நிறைய கத்துக்கணும். `சித்தி 2' சீரியலுக்கு உடனே ஓகே சொன்னதுக்கு முக்கியக் காரணம் ராதிகா மேடம் சீரியல்ல நிறைய கத்துக்க முடியும்னுதான். வெப் சீரீஸ், சீரியல், திரைப்படங்கள்னு இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம்.’’

`` `சித்தி 2' சீரியலில் சாக்லேட் பாயாக அசத்தி வருகிறீர்கள். நிஜ வாழ்க்கையில் நந்தன் எப்படி?"

நந்தன் லோகநாதன்
நந்தன் லோகநாதன்

``கவின் கதாபாத்திரத்துக்கு அப்படியே நேரெதிர். நான் வசதியான பையன்லாம் கிடையாது. மிடில் கிளாஸ்தான். கார், கம்பெனி இப்படி எதுவுமே இல்ல. நான் ஸ்கூல் படிக்கும்போது அப்பா ஆட்டோ டிரைவர். அம்மா டீச்சர். இப்போ அப்பா ஓய்வில் இருக்கார். கஷ்டம், தெரிந்து வளர்ந்தவன் நான். இப்போ வரைக்கும் நான் மிடில் கிளாஸ் பையன்தான். கவின் கதாபாத்திரத்துக்கு நான் எப்படி என்னை மாத்திக்கணும்னு இயக்குநர் சுந்தர்.கே.விஜயன் சார் சொல்லிக் கொடுத்தார். அவர் ரொம்ப ஃப்ரெண்ட்லி. நிறைய விஷயங்கள் கத்துக் கொடுக்குறார்’’ என்று கண்கள் விரிய பேசி முடித்தவரிடம், `லக்ஷ்மி' குறும்படம் பற்றி... என்று ஆரம்பிக்கும்போதே,

``அதானே பார்த்தேன். இன்னும் அதைப் பத்திக் கேட்கலையேனு நெனச்சேன்’’ என்று பேச்சைத் தொடர்ந்தார்.

`` 'லக்ஷ்மி' குறும்படம் எனக்கு பெரிய ரீச் கொடுத்துச்சு. பாராட்டுகள், விமர்சனங்கள் ரெண்டுமே வந்துச்சு. இந்தப் படத்துல நடிச்சதுக்காக நான் என்னைக்குமே வருத்தப்பட்டது இல்ல. படம் வெளியாகி ஒரு வாரத்துக்குள்ள, வெளிய என்னைப் பார்க்கிறவங்க செல்ஃபி எடுத்துக்கிட்டாங்க.’’

நந்தன் லோகநாதன்
நந்தன் லோகநாதன்

``யூடியூபில் ஒரு தமிழ்க் குறும்படம் இந்தளவுக்கு ரீச் ஆனது இதுவே முதல்முறைனு எல்லாரும் சொன்னாங்க. `லக்ஷ்மி' குறும்படத்தை விமர்சித்த எல்லாருடைய ஆழ்மனசுலயும் கண்டிப்பா ஒரு சின்ன தாக்கமோ, கேள்வியோ எழுந்திருக்கும். கண்டிப்பா இந்தப் படம் அவங்களைத் தொந்தரவு பண்ணியிருக்கும். ஸோ, இந்தப் படம் தரமான படைப்புதான். அதுல நடிச்சதுக்கு நான் பெருமைப்படுறேன்’’ என்று முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism