Published:Updated:

இயக்குநர் குமரன் சொன்னது அப்படியே நடந்துடுச்சு! - நெகிழும் `நாயகி’  திலீப் ராயன்

திலீப் ராயன் ( நாயகி தொடர் )

``நான் எப்போ நடிப்புக்குள்ள வந்தேனோ அப்பவே சோசியல் மீடியா கணக்குகளை க்ளோஸ் பன்ணிட்டேன்''

இயக்குநர் குமரன் சொன்னது அப்படியே நடந்துடுச்சு! - நெகிழும் `நாயகி’  திலீப் ராயன்

``நான் எப்போ நடிப்புக்குள்ள வந்தேனோ அப்பவே சோசியல் மீடியா கணக்குகளை க்ளோஸ் பன்ணிட்டேன்''

Published:Updated:
திலீப் ராயன் ( நாயகி தொடர் )

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் `நாயகி’ சீரியலுக்கு நாளுக்கு நாள் ஃபேன்ஸ் கூடிக் கொண்டே போகிறார்கள். கதைக்களம் மிகவும் விறுவிறுப்பாக நகர்வதே இதற்கு காரணம். கடந்த ஜூன் மாத அறிக்கையின்படி டி.ஆர்.பி-யிலும் `நாயகி’ சீரியல் முன்னணியில் உள்ளது. சீரியலின் நாயகன் திலீப் ராயனின் இயல்பான நடிப்பு, கதைக்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது. சன் டிவி-யில் ஆறு வருடங்கள் சூரிய வணக்கம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய திலீப், நாயகி சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானார். பரிச்சயமான முகம், இயல்பான நடிப்பு இதுதான் திலீப்பின் பிளஸ். சன் டிவி வாய்ப்பு, சீரியல் எண்ட்ரி உள்ளிட்டவை குறித்து திலீப் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

சின்னதிரைக்குள்ள எப்படி வந்தீங்க?

விஸ்காம் படிச்ச நான் முதன்முதலா கேப்டன் டிவி-யில்  இன்பாக்ஸ்-ன்னு ஒரு நிகழ்ச்சி பண்ணேன். ஆனால் அது அந்தளவுக்கு ரீச் கொடுக்கல. அதன் பிறகு சன் குழுமம் புதுசா சன் லைஃப் -ன்னு ஒரு சேனல் தொடங்க போறதா கேள்விப்பட்டேன்.  லைஃப் ஸ்டைல் சம்பந்தமா புதுப்புது நிகழ்ச்சிகள் இந்த சேனலில் வெளியாகுறதா சொன்னாங்க.  அதனால் அங்குச் சேர்ந்தேன். ஆனால் சன் லைஃப் சேனல் செயல்பாடுகள் தொடங்க கொஞ்சம் தாமதமாச்சு. அந்த சமயத்தில் தான் `நீங்கள் கேட்டவை’ விஜய் சாரதி சார் மூலமா எனக்கு `சூரிய வணக்கம்’ நிகழ்ச்சி வாய்ப்பு கிடைச்சது.  அதன்பிறகு சன் சிங்கர்ஸ் தொகுத்து வழங்கினேன். இப்போ நாயகி சீரியல்ல நடிக்கிறேன்.

திலீப் ராயன்
திலீப் ராயன்
சன் டிவி

நாயகி சீரியல் வாய்ப்பு பற்றி சொல்லுங்க!

சூரிய வணக்கம் நிகழ்ச்சி தொடங்கியதுல இருந்து முடியுற வரை ஆறு வருஷம் நான் தான் தொகுத்து வழங்கினேன். அதன் பிறகு திடீர்னு ஒரு நாள் இயக்குநர் குமரன் சார் கால் பண்ணி மீட் பண்ணனும்னு சொன்னார். `நாயகி’ சீரியல் பத்தி சொல்லி, அதில் இதுதான் உன் கேரக்டர்னு முடிவு பண்ணிட்டு சொன்னார். எனக்கு ஒண்ணுமே புரியல. சரி முயற்சி பண்ணி பார்க்கலாமென்று தோணுச்சி.

திலீப் ராயன்
திலீப் ராயன்
நாயகி

நாயகி சீரியலின் `திரு’ கேரக்டர் இந்தளவுக்கு ரீச் ஆகும்னு எதிர்பார்த்தீங்களா?

உண்மையா எதிர்பார்க்கவே இல்லை. குமரன் சாருக்கு கதை மீது அதீத நம்பிக்கை இருந்துச்சு. கதை தான் இங்கு ஹீரோ. என்கிட்ட முதன்முதலா நாயகி சீரியல் பத்தி பேசும்போது `நீ வேணும்னா பாரு. இன்னும் ஒரு வருஷத்துல உன் கேரக்டர் நல்லா ரீச் ஆகியிருக்கும்’ அப்படின்னு சொன்னார். நான் ஓகே சொல்லனும்னு தான் இப்படி சொல்றார்ன்னு நெனச்சேன். ஆனா அவர் சொன்னது நடந்துடுச்சி. பொது இடங்கள்ல மக்கள் என்னை பார்த்ததும், அவ்வளவு அன்பா பேசுறாங்க. வயசானவங்க, குழந்தைகள்ன்னு நிறையா பேர் வந்து பாராட்டுறாங்க. நடிப்பு இயல்பா இருக்குன்னு பாராட்டுறாங்க.

உங்களுக்கு பிடித்த வேலை எது ஆங்கரிங்கா நடிப்பா?

ஆங்கரிங் தான். நான் ரொம்ப விரும்பிச் செய்த வேலை அது. நாயகி சீரியல் நடிச்சிட்டு இருக்கும்போதே சன் சிங்கர்ஸ் தொகுத்து வழங்கினேன்.

நடிப்பு, ஆங்கரிங் தாண்டி வேறு எதில் ஆர்வம் அதிகம்?

எனக்கு சமைக்குறது ரொம்ப பிடிக்கும். சமையல் ஒரு பெரிய கடல். அதுக்குள்ள போனா நிறையா புது விஷயங்கள் கத்துக்கலாம். குறிப்பா சமையல் பொறுமையா கத்துக் கொடுக்கும்.

சினிமா ஆசை இருக்கா?

சினிமா வாய்ப்புகள் வருது. ஆனால் எனக்கு பிடிச்ச மாதிரி வரலை. நிறையா பேர் சின்னத்திரையில் ஆங்கரிங்- சீரியல்- சினிமா இந்த வரிசையை ஃபாலோ பண்றாங்க. எனக்கு அப்படி எதுவும் எதிர்பார்ப்பு இல்லை. அடுத்து சீரியலா சினிமாவா-ன்னு எந்த ஐடியாவும் இல்லை.

திலீப் ராயன்
திலீப் ராயன்

ட்ரீம் ரோல்

எனக்கு குழந்தைகளுக்காக படம் பண்ணனும்னு ஆசை. வெகு சில படங்கள் தான் கிட்ஸ் பாக்குற மாதிரி இருக்கு. இது வருத்தப்படக் கூடிய விஷயம். முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படங்களில் நடிக்கணும் இல்லாட்டி இயக்கணும்.

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா எங்கயுமே ஆளையே பார்க்க முடியலையே?

நான் எந்த சோசியல் மீடியாவிலும் இல்ல. நான் எப்போ நடிப்புக்குள்ள வந்தேனோ அப்பவே சோசியல் மீடியா கணக்குகளை க்ளோஸ் பன்ணிட்டேன். பெரும்பாலான நேரத்தை ஷூட்டிங்ல செலவு பண்றேன். மிச்சம் இருக்க நேரத்தையாச்சு என் குடும்பத்தோடு செலவழிக்கணும். ஃபேஸ்புக், இன்ஸ்டா-ன்னு போன கண்டிப்பா பாதி நேரம் அதில் தான் செலவு பண்ற மாதிரி இருக்கும். எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்காங்க. ஒரு பையன் ஒரு பொண்ணு. அவங்களுக்காக நிறையா நேரம் ஒதுக்கணும்.

திலீப் ராயன்
திலீப் ராயன்

சோசியல் மீடியா என் ஃபேமிலி டைம்மை விழுங்கிடும். ஷூட்டிங், வீடு-ன்னு நான் எங்க இருந்தாலும் 100% இருக்கணும்னு நினைக்கிறேன். மேலும் நான் எந்த பப்ளிசிட்டி நிகழ்வுகள்லையும் கலந்துக்குறது இல்ல. சமூகத்துக்கு எதாச்சு பண்ணனும்னு தான் இந்த ஃபீல்டுக்குள்ள வந்தேன். அது நடக்க இந்த துறைல பெரிய இடத்துக்கு போகணும். என் திறமை, உழைப்பு மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. திறமை மூலமா முன்னுக்கு வந்து பிரபலமாகணும். நான் செய்ய நினைக்குறத செய்யணும். அது போதும் எனக்கு.