சினிமா
Published:Updated:

விகடன் TV: “வில்லியா பார்க்கத்தான் விரும்புறாங்க!”

சுஷ்மா நாயர்
பிரீமியம் ஸ்டோரி
News
சுஷ்மா நாயர்

‘திருமகள்' சீரியலில் நடிச்சிட்டிருக்கும்போது எனக்கு அவசர அவசரமா கல்யாணம் முடிவாகிடுச்சு.

‘நாயகி' தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய சுஷ்மா நாயர், நிஜத்தில் பயங்கர சுட்டி!

‘‘எனக்கு சின்ன வயசில இருந்தே ஃபேஷன் டிசைனர் ஆகணுங்கிற ஆசை இருந்ததால அதைத் தேர்வு செஞ்சு படிச்சேன். ஃபைனல் இயர் படிக்கும்போது கன்னடப் படத்துல ஃபேஷன் டிசைனரா ஒர்க் பண்ண வாய்ப்பு கிடைச்சது. அந்தப் படத்தில் செகண்ட் ஹீரோவா நடிச்சவர் சன் டி.வி-யில் ஒளிபரப்பான `சுமங்கலி' சீரியலில் ஹீரோவா நடிச்சார். அவர் மூலமா எனக்கு `சுமங்கலி' சீரியலில் ஒரு சின்ன வாய்ப்பு கிடைச்சது. அதன் மூலமாதான் `நாயகி' சீரியல் வாய்ப்பு கிடைச்சது.

நெகட்டிவ் கதாபாத்திரம்னு சொன்னதும், எனக்கு பயங்கர குஷியாகிடுச்சு. நான் காஸ்ட்யூம் டிசைனர்ங்கிறதால சீரியலில் நிறைய கிரியேட்டிவ்வா டிரஸ் பண்ணுவேன். அதைப் பார்த்துட்டு பலரும் நல்லாருக்குன்னு பாராட்டியிருக்காங்க. அந்த சீரியலுக்குப் பிறகு சன் டி.வி-யில் ‘திருமகள்' தொடர் வாய்ப்பு வந்தது.

விகடன் TV: “வில்லியா பார்க்கத்தான் விரும்புறாங்க!”

‘திருமகள்' சீரியலில் நடிச்சிட்டிருக்கும்போது எனக்கு அவசர அவசரமா கல்யாணம் முடிவாகிடுச்சு. எங்களுடையது காதல் திருமணமா இருந்தாலும் இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நாங்களே எதிர்பார்க்கல. கணவர் துபாய்ல வேலை பார்க்கிறார். அதனால, கல்யாணத்துக்கு அப்புறம் நானும் துபாய் போய்டுவேன்னு சீரியலில் இருந்து விலகிட்டேன். சில பர்சனல் காரணங்களால துபாய் போக முடியல. அதனால, மறுபடி சீரியலில் நடிக்க வெயிட் பண்ணிட்டிருந்தேன். அப்பதான் `தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் `சுஹாசினி'ன்னு ஒரு பாசிட்டிவ் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. சின்ன கேரக்டர்னாலும், அப்படி பாசிட்டிவான ரோலில் என்னைப் பார்க்க மக்கள் விரும்பல. அவங்க என்னை வில்லியா பார்க்கத்தான் விரும்புறாங்க. ஒருசில படங்களில் நடிச்சிருக்கேன். அந்தப் படங்களோட ரிலீஸுக்காக வெயிட் பண்றேன். ‘அனன்யா' மாதிரியான வில்லத்தனமான ரோலில் நடிக்கணும்னு காத்திருக்கேன்!’’ என்று புன்னகைக்கிறார்.