Published:Updated:

''அஞ்சு மாசம் கர்ப்பமா இருக்கேன், கொரோனா தடுப்பூசியும் போட்டுக்கிட்டேன்!'' - நீலிமா இசை

நீலிமா ராணி

''முதல் குழந்தைக்கு பெரிய அளவில் உடலில் எந்த மாற்றமும் தெரியலை. எப்பவும் இருக்கிற மாதிரியே இருந்தேன். ஆனா, இந்த முறை உடல் எடை அதிகமாகியிருக்கு. படுத்துட்டே இருக்கணும் போல உடல் சோர்வா இருக்கு.''

''அஞ்சு மாசம் கர்ப்பமா இருக்கேன், கொரோனா தடுப்பூசியும் போட்டுக்கிட்டேன்!'' - நீலிமா இசை

''முதல் குழந்தைக்கு பெரிய அளவில் உடலில் எந்த மாற்றமும் தெரியலை. எப்பவும் இருக்கிற மாதிரியே இருந்தேன். ஆனா, இந்த முறை உடல் எடை அதிகமாகியிருக்கு. படுத்துட்டே இருக்கணும் போல உடல் சோர்வா இருக்கு.''

Published:Updated:
நீலிமா ராணி

சின்னத்திரை நடிகையாக பிரபலமானவர் நீலிமா இசை. தற்போது தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய ரசிகர்களுக்கு சந்தோஷ செய்தியை பதிவிட்டிருக்கிறார். நெகிழ்வான தருணம் குறித்து அவரிடம் பேசினேன்.

நீலிமா இசை
நீலிமா இசை

''பொதுவா அஞ்சு மாசம் கழிச்சுதானே கர்ப்பமா இருக்கிறதை சொல்லணும்னு சொல்லுவாங்க. அதுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அதுக்குள்ள எல்லோரும் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என் ஃபோட்டோஸ் பார்த்துட்டு ஏன் திடீர்னு வெயிட் போட்டுட்டீங்கன்னு சிலரும், நீங்க கர்ப்பமா இருக்குறீங்களான்னு சிலரும் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அதனால சீக்கிரமே சந்தோஷமான விஷயத்தை அவங்க கூட பகிர்ந்துக்கணும்னு நினைச்சேன். அந்த சமயம் சரியா எங்களோட திருமண நாள் வந்துச்சு. அதனால அன்னைக்கே அறிவிச்சிட்டேன்.

என் பொண்ணு அதிதீ இப்பவே தம்பி பாப்பான்னு முடிவு பண்ணிட்டாங்க. அவங்களுக்கு இப்போ நாலு வயசுதான் ஆகுது. ஆனாலும் இப்போவே கேர் எடுத்துக்க ஆரம்பிச்சிட்டாங்க. நாங்க கார்ல போயிட்டு இருக்கும்போது எங்க டிரைவர் பள்ளத்தில் காரை விட்டு விட்டுட்டார். அதுக்கு அவர்கிட்ட, 'அண்ணா அம்மா வயித்துக்குள்ளே தம்பி பாப்பா இருக்கான்ல மெதுவா ஓட்டுங்க!'னு அவரை சத்தம் போட்டா. நானும், என் கணவரும் அவ எடுத்துக்கிற கேரைப் பார்த்து செம ஹேப்பியாகிட்டோம். அவளுக்கு பத்தாம குட்டியான டிரெஸ் எல்லாத்தையும் தம்பிக்குன்னு சொல்லி எடுத்து வைக்கிறா. அதெல்லாம் ரொம்ப நெகிழ்ச்சியான மொமன்ட்டா இருக்கு.

நீலிமா
நீலிமா

முதல் குழந்தைக்கு பெரிய அளவில் உடலில் எந்த மாற்றமும் தெரியலை. எப்பவும் இருக்கிற மாதிரியே இருந்தேன். ஆனா, இந்த முறை உடல் எடை அதிகமாகியிருக்கு. படுத்துட்டே இருக்கணும் போல உடல் சோர்வா இருக்கு. நிறைய மூட் ஸ்விங்ஸ் இருக்கு. ஆனா, நார்மலாவே நான் ரொம்ப பாசிட்டிவ் பர்சன். அதனால ஏதாவது மாற்றம் தெரிஞ்சா உடனே பாட்டு கேட்கிறது, எனக்கு பிடிச்ச வேலைகள் பண்றதுன்னு அதை டைவர்ட் பண்றேன்.

மூணு மாசமா இருக்கும்போது தான் கர்ப்பிணிகளும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கலாம்னு சொன்னாங்க. எனக்கும் நிறைய குழப்பங்கள் இருந்துச்சு. டாக்டர் இந்த ஊசி குழந்தையை எதுவும் பண்ணாது... இதை நீங்க கண்டிப்பா போட்டுக்கணும்னு எனக்கு எடுத்து சொன்னாங்க. என் ஃபேமிலியும் எனக்கு புரிய வைச்சாங்க. இப்போ என் அஞ்சாவது மாசத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டேன். 'நீலிமா ஊசி போட்டுட்டு நல்லாதான் இருக்காங்க'னு என்னைப் பார்த்து, ஊசிக்கு பயப்படுறவங்க புரிஞ்சுப்பாங்கன்னு தோணுச்சு. அதனால தான் அந்த விஷயத்தை ஷேர் பண்றேன்.

நீலிமா
நீலிமா

இப்போவும் புரொடக்‌ஷன் வேலைகள் போயிட்டுதான் இருக்கு. 'அதிதி ஆயுர்வேதா'ன்னு பர்சனல் ஸ்கின் கேர் & ஹேர் கேர் புராடக்ட்ஸ் லான்ச் பண்ணப் போறேன். இப்போ அதுக்கான வேலைகள் நடந்துட்டு இருக்கு.

யோகா, பிசியோதெரபி பயிற்சிகள் எல்லாம் ஆரம்பிச்சிட்டேன்.தினமும் உடற்பயிற்சிகள் செஞ்சிட்டு, ஹெல்தியா சாப்பிட்டுட்டு ஹேப்பியா இருக்கேன். அதிதி வயத்துக்குள்ள இருந்தப்போ 'வாணி ராணி'யில் நடிச்சிட்டு இருந்தேன். அந்த சமயம் எங்க வீட்ல ஒரு வளைகாப்பு, 'வாணி ராணி' செட்ல ஒரு வளைகாப்பு நடந்துச்சு. இந்த ஆண்டு கொரோனா அதிகமா இருக்கிறதனால வளைகாப்பு எப்படி நடத்துவோம்னு தெரியலை. அப்போ கொரோனா குறைஞ்சிருந்தா நிச்சயம் பெருசா நடத்தலாம்!' எனப் புன்னகைக்கிறார் நீலிமா.