விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் `பாண்டியன் ஸ்டோர்ஸ்'. இந்தத் தொடருக்கு பல விதமான கமென்ட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஐஸ்வர்யா என்கிற கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் `சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' தொடரில் நடித்திருந்த தீபிகா கமிட் ஆனார். அவர் அந்தத் தொடரில் இருந்து விலகியதும் அவருக்கு பதிலாக `ஈரமான ரோஜாவே' சீரியல் புகழ் சாய் காயத்ரி கமிட் ஆனார்.
அவரும் தற்போது அந்தத் தொடரில் இருந்து விலகியிருக்கிறார். அவருக்கு பதிலாக மீண்டும் தீபிகாவே `ஐஸ்வர்யா' கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒருவர் ஒரு கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் போது சில காரணங்களால் அந்தத் தொடரிலிருந்து விலகி மீண்டும் அதே கதாபாத்திரத்தில் நடிப்பது என்பதெல்லாம் சின்னதிரை உலகில் மிகப்பெரிய விஷயம். அப்படி தீபிகாவிற்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது குறித்து தீபிகா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில்,
`அதிர்ஷ்டம் ஒரு வாட்டிதான் கதவை தட்டும்னு சொல்லுவாங்க அது கரெக்ட் தான்! ஆனால் முயற்சியும், நம்பிக்கையும் ஒண்ணு இல்ல ஆயிரம் கதவுகளைத் திறக்கச் செய்யும். ஐஸ்வர்யாவாக என்னுடைய பயணம் பாதியில் முடிந்தது. ஆனா, இப்போ எங்க முடிஞ்சதோ அங்கேயே ஒரு தொடக்கம் வந்திருக்கு.
எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம் தான் சொல்லப் போறேன்...`ஒரு பொருள் நம்மகிட்ட இல்லாத போதுதான் அதோட வலி என்னன்னு நமக்குத் தெரியும்'. எனக்கும் நிறையவே புரிஞ்சது... நல்லாவே தெரிஞ்சது! இப்ப அது திரும்ப கிடைச்சிருக்கு. அதனால அதோட மதிப்பு எனக்கு நல்லாவே தெரியும்.

இவ்ளோ நாள் எனக்காக ஃபீல் பண்ணவங்களுக்கும், இப்போ எனக்கு வாழ்த்துகள் சொல்றவங்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி! தீபிகாவுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் உங்களுடைய சப்போர்ட், வாழ்த்துகள் எப்பவும் வேணும்! அன்பே சிவம்!" எனப் பதிவிட்டிருக்கிறார்.
அவருடைய பதிவிற்கு பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.