Published:Updated:

Baakiyalakshmi: `கோபி கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்கப் போகிறாரா சதீஷ்?'வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி

சதீஷ்

`பாக்கியலட்சுமி' தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் சதீஷ் அந்தத் தொடரில் இருந்து விலகப் போவதாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார். தற்போது அவர் மீண்டும் அந்தத் தொடரில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published:Updated:

Baakiyalakshmi: `கோபி கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்கப் போகிறாரா சதீஷ்?'வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி

`பாக்கியலட்சுமி' தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் சதீஷ் அந்தத் தொடரில் இருந்து விலகப் போவதாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார். தற்போது அவர் மீண்டும் அந்தத் தொடரில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சதீஷ்

`பாக்கியலட்சுமி' தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் சதீஷ் அந்தத் தொடரில் இருந்து விலகப்போவதாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார். தற்போது அவர் மீண்டும் அந்தத் தொடரில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சதீஷூடன் விஜே விஷால்
சதீஷூடன் விஜே விஷால்

சதீஷூடன் இணைந்து அந்தத் தொடரில் `எழில்' கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜே விஷால் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சதீஷூடன் இணைந்து புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், `அப்பா.. நீங்க எங்கேயும் போகக் கூடாது நான் போகவும் விடமாட்டேன்!' எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ஹாஸ்டேக்கில் கோபி சார் எனவும் அதில் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

சதீஷ் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், `வாழ்க்கையில் பேசி தீர்த்துக்க முடியாத பிரச்னைன்னு எதுவுமில்லை. எவ்ளோ பெரிய பிரச்னைனாலும் நம்ம நண்பர்களுடன் நமக்கு வேண்டப்பட்டவங்களோடு உட்கார்ந்து பேசினா நிச்சயம் தீர்வு கிடைக்கும். உங்களுக்குப் புரியுதா நான் என்ன சொல்ல வர்றேன்னு?' என ஒரு வீடியோவில் பேசியிருந்தார். இன்னொரு வீடியோவில், `இன்பாக்ஸில் நிறைய பேர் பாக்கியலட்சுமி தொடரிலிருந்து நான் விலகுறேன்னு சொன்னதும் போகாதீங்கன்னு சொல்லி நிறைய வேண்டுகோள்கள் அனுப்பியிருக்கீங்க. அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும், உங்க அன்புக்கும் ரொம்ப நன்றி. என்னால முடிஞ்ச அளவுக்கு உங்க எல்லாருக்கும் ரிப்ளை பண்ணிட்டு இருக்கேன். ஷூட்டிங் பிசியா போயிட்டு இருக்கு அதனால பலருக்கு ரிப்ளை அனுப்ப முடியல.. ஃப்ரீயானதும் கண்டிப்பா அனுப்புறேன்!' எனக் கூறியிருக்கிறார்.

சதீஷ்
சதீஷ்

இதெல்லாவற்றையும் வைத்து சதீஷ் கோபி தொடரில் தொடர்ந்து நடிப்பார் என அவருடைய ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். சதீஷ் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.