Published:Updated:

நடிகை மெளனிகா நடிப்பில் வெளியாகும் `ஆஹா கல்யாணம்' நெடுந்தொடர்!

ஆஹா கல்யாணம்

`ஆயுத எழுத்து' தொடரில் கம்பீரமான மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் அவருடைய நடிப்பால் மிரட்டியவர் மெளனிகா

Published:Updated:

நடிகை மெளனிகா நடிப்பில் வெளியாகும் `ஆஹா கல்யாணம்' நெடுந்தொடர்!

`ஆயுத எழுத்து' தொடரில் கம்பீரமான மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் அவருடைய நடிப்பால் மிரட்டியவர் மெளனிகா

ஆஹா கல்யாணம்
விஜய் டிவியில் வருகிற 20ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் தொடர் `ஆஹா கல்யாணம்'. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.
ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்

இந்தத் தொடரில் நடிகை மெளனிகா கோடீஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தன் மூன்று மகள்களுக்கும் பணக்கார குடும்பத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிற கனவுடன் இருக்கிற ஒரு தாயின் கதைதான் இந்த ஆஹா கல்யாணம் தொடர் என்கின்றனர் படக்குழுவினர். கோடீஸ்வரி ஆசைப்பட்ட மாதிரி அவருடைய மகள்களுக்கு திருமணம் நடக்கிறதா? அவருடைய கனவு நிறைவேறுமா? என்பதுதான் இந்தக் கதையின் கருவாக இருக்கிறது.

`ஆயுத எழுத்து' தொடரில் கம்பீரமான மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் அவருடைய நடிப்பால் மிரட்டிய மெளனிகா இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்

விஜய் டிவியில் சமீபத்தில் வெளியிடப்பட்ட `சிறகடிக்க ஆசை' தொடர் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தத் தொடர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!