`இதயத்தை திருடாதே' தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நவீன். அவருக்கும், செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கண்மணி கர்ப்பமாக இருக்கிறார் என்கிற தகவலை இன்று அவர்களுடைய யூடியூப் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்கள்.

கண்மணி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நவீனுடன் ஒரு சலூனில் எடுத்த வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் நவீன் - கண்மணி ரசிகர்கள் பலரும் `கண்மணி கர்ப்பமா?' என கமென்ட் செய்து வந்த நிலையில் அவர்கள் இருவருமே அதுகுறித்து அறிவித்திருக்கிறார்கள்.
`நவீன் - கண்மணி' யூடியூப் தளத்தில் இது குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார்கள். அதில், ` நாங்க இதை சர்ப்ரைஸ் ஆக வச்சிருக்கணும்னு தான் நினைச்சிருந்தோம்... மண்டையில உள்ள கொண்டையை மறந்துட்டீயேடாங்குற மாதிரி சலூனில் எடுத்த வீடியோவை பதிவிடும்போது நாங்க இதை கொஞ்சமும் கவனிக்கல. அதனால, பலரும் எங்ககிட்ட கேட்க ஆரம்பிச்சிட்டீங்க.

அதனால தான் சரி நம்ம ஃபேமிலிகிட்ட இதை சொல்லிடலாம்னு முடிவு பண்ணிட்டோம்.. கடவுள் கொடுக்குறாங்க அதை நாம அப்படியே ஏத்துக்கணும்!' எனக் கூறியிருக்கின்றனர்.
வாழ்த்துகள் நவீன் - கண்மணி!