Published:Updated:

"பிரச்னையை எப்படி எதிர்கொள்ளணும்னு தெரியாம ஊருக்குத் திரும்பிப் போயிருக்கேன்!"- நியூஸ் ரீடர் கண்மணி

கண்மணி

"நல்ல விஷயம் நடந்தா ஊரே கொண்டாடுவாங்க. ஆனா கெட்டதா எதுவும் நடந்துச்சுன்னா நம்மளை உதாரணமாகக் காட்டி எல்லோரையும் உட்கார வைச்சிடுவாங்கங்குற பொறுப்பு எனக்கு இருந்துச்சு." - நியூஸ் ரீடர் கண்மணி

"பிரச்னையை எப்படி எதிர்கொள்ளணும்னு தெரியாம ஊருக்குத் திரும்பிப் போயிருக்கேன்!"- நியூஸ் ரீடர் கண்மணி

"நல்ல விஷயம் நடந்தா ஊரே கொண்டாடுவாங்க. ஆனா கெட்டதா எதுவும் நடந்துச்சுன்னா நம்மளை உதாரணமாகக் காட்டி எல்லோரையும் உட்கார வைச்சிடுவாங்கங்குற பொறுப்பு எனக்கு இருந்துச்சு." - நியூஸ் ரீடர் கண்மணி

Published:Updated:
கண்மணி

"காலேஜ் படிக்கும்போதே நியூஸ் ரீடராகும் வாய்ப்பு கிடைச்சது. கிடைச்ச வாய்ப்பை முறையா பயன்படுத்திக்கிட்டேன்" என புன்னகைக்கிறார், கண்மணி. இவர் சன் டிவியில் நியூஸ் ரீடராக இருக்கிறார். அவருடன் ஒரு மழைப் பொழுதில் பேசினேன்.

கண்மணி
கண்மணி

"திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிற பெரிய முல்லைவாயில்தான் என்னுடைய சொந்த ஊர். எங்க ஊரைப் பொறுத்தவரைக்கும் பெண் பிள்ளைகள் யாரும் பெரிய அளவில் வெளியூரில் தங்கி படிச்சு, வேலை பார்த்ததெல்லாம் கிடையாது. ஊர் பக்கத்துல இருக்கிற காலேஜ்லதான் பெரும்பாலும் படிப்பாங்க. நான் மீடியா தேர்வு செஞ்சு சென்னையில் தங்கி படிக்கப் போறேன்னு சொன்னப்போ எங்க வீட்ல எந்தத் தடையும் சொல்லலை. நான் ஆசைப்பட்ட மாதிரியே மீடியா படிப்பை படிக்க வைச்சாங்க. என் மேல நம்பிக்கை வைச்சு என்னை சென்னைக்கு அனுப்பினாங்க. இப்போ அந்த நம்பிக்கையை காப்பாத்திட்டேன்னு நினைக்கும்போது ரொம்பவே சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கு" என்றவரிடம் நியூஸ் ரீடர் பயணம் குறித்து கேட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"லயோலாவில் ஜர்னலிசம் தேர்வு செய்து படிச்சேன். காலேஜ் படிக்கும்போது ரிப்போர்ட்டிங்கிற்காக நிறைய சேனலில் இன்டர்ன்ஷிப் பண்ணியிருக்கேன். அப்போலாம் நாம செய்தியாக கொண்டு வந்து கொடுக்கிற ஒரு விஷயத்தை நியூஸ் ரீடர் எப்படிப் படிக்கிறாங்க.. நம்ம செய்தி எப்படி வருதுங்குறதை கவனிப்பேன். காலேஜ்ல நியூஸ் ரீடிங்கிற்காக ஆடிஷன் நடந்துச்சு. எனக்கு வாசிப்பு பழக்கம் இருக்குங்குறதனால அந்த ஆடிஷனில் கலந்துகிட்டேன். அதுல செலக்ட் ஆகி முதன்முதலா ஜெயா டிவியில்தான் நியூஸ் ரீடரா என்னுடைய பயணம் ஆரம்பிச்சது.

கண்மணி
கண்மணி

ஒரு வாரம் நியூஸ் எப்படி வாசிக்கிறாங்கன்னு என்னை பார்க்க சொன்னாங்க. ஒரு வாரம் கழிச்சு லைவ்ல நியூஸ் வாசிச்சேன். ஆரம்பத்தில் நியூஸ் வாசிக்கிறதுல நிறைய தப்பு பண்ணிருக்கேன். பண்ற தப்பு ஒவ்வொன்றையும் கவனிச்சு என்னை நானே சரி பண்ணியிருக்கேன். இப்போ நான் இந்தத் துறைக்கு வந்து கிட்டத்தட்ட மூன்றரை வருஷமாகிடுச்சு. வேலை பார்த்த எல்லா இடங்களிலும் பிரச்னைகள் வந்திருக்கு. அப்போலாம் எனக்கு அந்த அளவிற்கு பக்குவம் இல்லை. ஒரு பிரச்னையை எப்படி எதிர்கொள்ளணும்னு தெரியாம ஊருக்கே ஓடிப்போன காலமெல்லாம் இருக்கு. பிறகு, இது நமக்கு பிடிச்ச துறை. இதை நாம விட்டுடக் கூடாது. தொடர்ந்து டிரை பண்ணுவோம்னு என்னை நானே தேத்திக்கிட்டு மறுபடியும் சென்னைக்கு வந்து வேலை தேடியிருக்கேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்க ஊர்லேயே நான்தான் முதன்முதலா வெளியே வந்து படிக்க வந்திருக்கேங்குறதனால ரொம்பவே கடமைகள் எனக்கு இருந்துச்சு. நல்ல விஷயம் நடந்தா ஊரே கொண்டாடுவாங்க. ஆனா கெட்டதா எதுவும் நடந்துச்சுன்னா நம்மளை உதாரணமாகக் காட்டி எல்லோரையும் உட்கார வைச்சிடுவாங்கங்குற பொறுப்பு எனக்கு இருந்துச்சு. அதனாலேயே விடாமுயற்சியோட இருந்தேன். இப்போ ஊரே என்னை ஒரு செலிபிரிட்டி மாதிரி பார்க்குது. எங்க அப்பா ஊர்த்தலைவர். அதனால எல்லோரும் தலைவரோட பொண்ணு மாதிரி நீயும் படிச்சு நல்ல வேலைக்கு போகணும்னு அவங்க பசங்ககிட்ட சொல்றப்போ எங்க அப்பா, அம்மா முகத்தில் அத்தனை பெருமிதம்!

கண்மணி
கண்மணி

என்னுடைய மிகப்பெரிய ரசிகர் என் அப்பாதான். தினமும் நியூஸ் வாசிச்சு முடிச்சதும் அவருடைய போன் கால் வந்திடும். இன்னைக்கு ஏன் இந்த டிரெஸ் போட்ட, மேக்கப் ஏன் இவ்வளவு அதிகமா இருக்கு, இன்னைக்கு ஏன் கொஞ்சம் சொதப்புனன்னு ஒவ்வொன்னா கூர்ந்து கவனிச்சு திட்டுவாங்க. நான் சேனலுக்கு பயந்ததை விட எங்க அப்பாவுக்கு பயந்ததுதான் அதிகம். அதே மாதிரி நல்லா இருந்தா அதையும் மறக்காம சொல்லி பாராட்டிடுவாங்க.

நியூஸ் ரீடர் எந்த மாதிரியான செய்திகளை வாசிச்சாலும் எமோஷன்களை திரையில் காட்டக் கூடாது. காட்டவும் மாட்டாங்க. ஆனா, நாங்களும் மனுஷங்க தானே... எல்லோருக்கும் இருக்கிற எமோஷன்ஸ் எங்களுக்கும் இருக்கும். தினமும் ஏதாவது ஒரு செய்தி மனசை கண்கலங்கச் செய்திடும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தியும் ஏதோ ஒரு வித சந்தோஷத்தையும், துக்கத்தையும் கொடுக்கத்தான் செய்யும். மனசும் கரையும்.

கண்மணி
கண்மணி

படங்கள், சீரியல்னு வாய்ப்புகள் வந்துட்டுதான் இருக்கு. ஆனா, நியூஸ் ரீடர்ங்குறது நான் ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்தத் துறை. அதனால அதை விட்டுட்டு வேற ஒரு வேலையை பண்றதுல இப்போதைக்கு எனக்கு உடன்பாடு இல்லை. சோஷியல் மீடியாவில் இப்போ யார் வேண்டுமானாலும் டிரெண்டிங் ஆகலாம். அந்த வகையில் நானும் டிரெண்டிங் ஆனது சந்தோஷம்தான். ஆனா, நான் இன்னும் நிறைய கத்துக்கணும். எங்களை மாதிரியான ஆட்களை ஆடியன்ஸ் அடையாளம் கண்டு பாராட்டும்போது ரொம்பவே சந்தோஷமா இருக்கும்.

இந்த அடையாளம் நிரந்தரமா இருக்கணும். நிறைய பேர் நேர்ல என்னை பார்க்குறப்போ நான் உங்களுடைய ஃபேன்னு சொல்லுவாங்க. அப்போ அவங்ககிட்ட எப்படி ரியாக்ட் பண்ணனும்னு கூட எனக்கு தெரியாது. நான் நேர்ல ரொம்ப குட்டியா இருப்பேன். அதை பார்த்துட்டு டிவியில் வேற மாதிரி இருக்கீங்க நேர்ல ரொம்ப குட்டியா சின்ன புள்ள மாதிரி இருக்கீங்கன்னு கேட்பாங்க. பொதுவா பெரியவங்க நியூஸ் பார்ப்பாங்க. இப்போ இளைஞர்களும் நியூஸ் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. ஆனா, குழந்தைங்க நியூஸ் பார்த்து கண்மணி அக்கா இன்னைக்கு உங்களை டிவியில் பார்த்தேன். எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்னு வாய்ஸ் நோட்லாம் அனுப்புவாங்க. அந்தத் தருணமெல்லாம் ரொம்பவே நெகிழ்ச்சியாக இருக்கும்.

கண்மணி
கண்மணி

நாம் பூங்கொத்து வாழ்த்துகள் கூறி விடைபெற அவர் 'அசுரன் (ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை)' வாசிப்பில் ஆழ்ந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism